இந்தியாவை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க வேண்டும் - மத்திய அரசுக்கு முகேஷ் அம்பானி கோரிக்கை

இந்தியாவை முழுமையான டிஜிட்டல்மயமாக்க வேண்டும் என்றால், 2ஜி தொழில்நுட்பத்தில் இருந்து முற்றிலும் வெளியே வரவேண்டும் என ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க வேண்டும் - மத்திய அரசுக்கு முகேஷ் அம்பானி கோரிக்கை
முகேஷ் அம்பானி
  • Share this:
இந்திய அலைபேசி தொலைதொடர்பு அமைப்பின் 25வது ஆண்டுவிழாவையொட்டி, ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்கு அவர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

அதில், உலக நாடுகள் 5ஜி தொழில்நுட்பத்தில் கால்பதித்து இருக்கும் சூழலில், இந்தியாவில் இன்றும் 30 கோடி மக்கள், 2ஜி செல்போன்களை பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
Also read... முழு கட்டணம் செலுத்த நிர்பந்திக்கும் தனியார் பள்ளிகளின் பட்டியலை தாக்கல் செய்ய அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இதனால் அவர்களுக்கு முழுமையான டிஜிட்டல் புரட்சி சென்று சேரவில்லை எனவும், விரைவில், 2ஜி தொழில்நுட்பத்தில் இருந்து அனைத்து இந்தியர்களையும் அடுத்தக்கட்ட ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்திற்குள் கொண்டு வரவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். அப்போது தான் பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டம் முழுமையடையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
First published: July 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading