காஷ்மீரின் வளர்ச்சியில் ரிலையன்ஸ் நிறுவனம் பங்கு வகிக்கும்! முகேஷ் அம்பானி உறுதி

காஷ்மீரின் வளர்ச்சியில் ரிலையன்ஸ் நிறுவனம் பங்கு வகிக்கும்! முகேஷ் அம்பானி உறுதி
முகேஷ் அம்பானி
  • News18
  • Last Updated: August 12, 2019, 10:58 PM IST
  • Share this:
ஜம்மு காஷ்மீரில் ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் முதலீடு செய்யப்படும் என்று அந்நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர மாநாடு இன்று மும்பையில் நடைபெற்றது. அந்த நிகழ்வின்போது ஜியோ நிறுவனத்தில் சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள ஃபைபர் நெட்ஓர்க் குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்தார்.

மேலும் அந்த நிகழ்ச்சியில் பேசிய முகேஷ் அம்பானி, ‘ஜம்மு காஷ்மீர் பகுதி வளர்ச்சியில் ரிலையன்ஸ் நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்கும். அந்தப் பகுதிக்கான சிறப்பு திட்டங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். ஜம்மு காஷ்மீரில் முதலீடு செய்து அம்மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்’ என்று தெரிவித்தார்.
First published: August 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்