எம்.எஸ் பெயிண்ட் நீக்கப்படாது; வின்டோஸ் 10-ல் தொடர்ந்து கிடைக்கும்!

எம்எஸ் பெயிண்ட்

வின்டோஸ் இயங்குதளங்களில் 1985-ம் ஆண்டு முதல் மைக்ரோசாஃப்ட் பெயிண்ட் அம்சம் பயன்பாட்டில் உள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  கம்ப்யூட்டரை இன்று பயன்படுத்தும் பலரும் முதலில் பயன்படுத்திய அடிப்படை கிராபிக்ஸ் அப்ளிகேஷன் என்றால் அது மைக்ரோசாஃப்ட்டின் எம்எஸ் பெயிண்ட் ஆகதான் இருக்கும்.

  இந்த எம்எஸ் பெயிண்ட் அப்ளிகேஷனை 2017-ம் ஆண்டு விண்டோஸ் 10 இயங்குதளத்திலிருந்து நீக்க உள்ளதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்திருந்தது.

  மைக்ரோசாஃப்ட்டின் இந்த முடிவுக்கு வின்டோஸ் கணினி பயன்படுத்தும் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். வின்டோஸ் இயங்குதளங்களில் 1985-ம் ஆண்டு முதல் மைக்ரோசாஃப்ட் பெயிண்ட் செயலி பயன்பாட்டில் உள்ளது.

  இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த மைக்ரோசாஃப்ட்டின் முதன்மை ப்ரோகிராம் நிர்வாகி பிராண்டன் லேபிளாங்க், “அடுத்த மாதம் வெளியாக உள்ள விண்டோஸ் 10 அப்டேட்டான 1903-ல் எம்எஸ் பெயிண்ட் அப்ளிகேஷன் சேர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இனிவரும் மைக்ரோசாஃப்ட் இயங்குதளங்களிலும் இது கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

  இந்தத் தகவலை அறிந்த பலரும் மைக்ரோசாஃப்ட்டின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். மறு பக்கம் சிலர் எதற்கு இந்தப் பழைய அப்ளிகேஷன் இன்னும் மைக்ரோசாஃப்ட் தொடர்ந்து அளித்து வருகிறது என்றும் விமர்சித்துள்ளனர்.

  மேலும் பார்க்க:
  Published by:Tamilarasu J
  First published: