Home /News /technology /

மொஸில்லா டெஸ்க்டாப், மொபைல் விபிஎன்-இல் புதிய ப்ரைவஸி அம்சங்கள் அறிமுகம்!

மொஸில்லா டெஸ்க்டாப், மொபைல் விபிஎன்-இல் புதிய ப்ரைவஸி அம்சங்கள் அறிமுகம்!

Mozilla

Mozilla

Mozilla | விபிஎன் சேவையின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வெர்ஷனுக்கு இந்த அம்சத்தை கொண்டு வருவதன் விளைவாக, ப்ரவுஸிங் செய்யும் போது யூசர்களுக்கு கூடுதல் ப்ரைவஸி அணுக கிடைக்கும்.

பிரபலமான இண்டர்நெட் ப்ரவுஸர் ஆன பயர்ஃபாக்ஸிற்கு (FireFox) பின்னால் உள்ள நிறுவனமான மொஸில்லா (Mozilla), அதன் மொபைல் மற்றும் டெஸ்க்டாப் விபிஎன்-க்கான (VPN) புதிய அப்டேட்களை வெளியிடத் தொடங்கி உள்ளது. அது விபிஎன் 2.7 (VPN 2.7) ஆகும்.

இந்த புதிய விபிஎன் 2.7 உடன், இந்நிறுவனம் பயர்ஃபாக்ஸின் பிரபலமான ஆட்-ஆன்களில் ஒன்றான மல்டி அக்கவுண்ட் கன்டெய்னர்களை (Multi-Account Containers) டெஸ்க்டாப் பிளாட்பார்மில் சேர்க்கிறது மற்றும் இந்த விபிஎன் சேவையின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வெர்ஷனில் மல்டி-ஹாப் அம்சத்தையும் (multi-hop) சேர்க்கிறது.

இது குறித்து மொஸில்லா நிறுவனம் "எங்கள் தயாரிப்புகளின் வழியாக சிறப்பான ப்ரைவஸியை வழங்குவதற்கான வழிகளை நாங்கள் எப்போதும் தேடுகிறோம். வெற்றிகரமான நவம்பர் மாத வெளியீட்டிற்குப் பிறகு, எங்கள் யூசர்களுக்கு மிகவும் விருப்பமான பயர்ஃபாக்ஸ் ஆட்-ஆன்களில் ஒன்றான மல்டி-அக்கவுன்ட் கன்டெய்னர்களை மொஸில்லா விபிஎன் உடன் இணைக்கிறோம். மிகவும் வேகமான மற்றும் அதே சமயம் பயன்படுத்த மிகவும் எளிதான எங்களின் விபிஎன் சேவை, பயர்ஃபாஸில் மட்டுமே கிடைக்கும் தனித்துவமான, ப்ரைவஸி சொல்யூஷனை வழங்குகிறது," என்றும் கூறி உள்ளது.



பயர்ஃபாக்ஸின் மல்டி அக்கவுண்ட் கன்டெய்னர்கள் ஆனது யூசர்கள் தங்கள் ஆன்லைன் செயல்பாடுகளின் வெவ்வேறு பகுதிகளை பிரிக்க அனுமதிக்கும். மொஸில்லாவின் விபிஎன் உடன் இந்த ஆட்-ஆனை இணைப்பதன் வழியாக யூசர்களின் கம்பார்ட்மென்ட்டலைஸ்டு ப்ரவுஸிங் ஆக்டிவிட்டிக்கு (compartmentalised browsing activity) கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும் மற்றும் அவர்களின் லோக்கேஷன் சார்ந்த தகவலுக்கும் கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும் என்றும் இந்த நிறுவனம் கூறுகிறது.

Also Read : இந்தியர்களின் 1.32 கோடி வாட்ஸ்அப் கணக்குகள் 6 மாதங்களில் நீக்கம்

நினைவூட்டும் வண்ணம், முன்னதாக மொஸில்லா நிறுவனம், டெஸ்க்டாப்பில் அதன் மல்டி-ஹாப் அம்சத்தை அறிமுகப்படுத்தியது, இது ஒரு விபிஎன் சேவைக்கு பதிலாக, இரண்டு விபிஎன் சர்வர்களை (சேவையகங்களை) பயன்படுத்த யூசர்களை அனுமதிக்கிறது. இப்போது அது மொபைலில் வெளி வந்துள்ளது. எக்சிட் விபிஎன் சர்வரை தொடர்ந்து, என்ட்ரி விபிஎன் சர்வரின் வழியாக ஆன்லைன் ஆக்டிவிட்டியை ரூட்டிங் செய்வதன் மூலம் இந்த அம்சம் செயல்படுகிறது.



இந்த பிராண்டின் கூற்றுப்படி, விபிஎன் சேவையின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வெர்ஷனுக்கு இந்த அம்சத்தை கொண்டு வருவதன் விளைவாக, ப்ரவுஸிங் செய்யும் போது யூசர்களுக்கு கூடுதல் ப்ரைவஸி அணுக கிடைக்கும்.

Also Read : Google search-ல் நீங்கள் விரும்பும் தேடல் முடிவுகளை சரியாகப் பெற உதவும் டிப்ஸ் & ட்ரிக்ஸ்!

முன்னரே குறிப்பிட்டபடி, மொஸில்லா கார்ப்பரேஷன் என்பது மொஸில்லா அறக்கட்டளைக்கு முழுவதுமாக சொந்தமான ஒரு துணை நிறுவனம் ஆகும். இது பயர்ஃபாக்ஸ் இண்டர்நெட் ப்ரவுஸர் போன்ற இணையம் தொடர்பான அப்ளிகேஷன்களின் மேம்பாட்டையும் ஒருங்கிணைக்கிறது.

Also Read : முதன்முறையாக யூசர்சை இழக்கும் ஃபேஸ்புக்... பங்குச்சந்தையில் குறையும் மதிப்பு

பயர்ஃபாக்ஸ் என்பது மொஸில்லா அறக்கட்டளை மற்றும் அதன் துணை நிறுவனமான மொஸில்லா கார்ப்பரேஷன் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட ஒரு இலவச மற்றும் ஓப்பன் சோர்ஸ் இண்டர்நெட் ப்ரவுஸர் ஆகும்.
Published by:Selvi M
First published:

Tags: Mozilla Firefox, Technology

அடுத்த செய்தி