புதிய UI மறுவடிவமைப்பு அப்டேட்டுடன் விரைவில் வருகிறது Mozilla Firefox-இன் 'PROTON'..

Mozilla Firefox-ன் "PROTON"

விரைவில் வெளியாகவுள்ள புதிய அப்டேட் மூலம் பயர்பாக்ஸ் மெனு, யூசர்கள் அடிக்கடி பயன்படுத்தும் விருப்பங்களை மட்டுமே காண்பிக்கும் என கூறப்படுகிறது.

  • Share this:
உலகெங்கிலும் மிகவும் பிரபலமான வெப் பிரவுசர்களில் மொஸில்லா ஃபயர்பாக்சும் ஒன்று. கிரோம் பிரவுசரருக்கு அடுத்தபடியாக டெஸ்க்டாப் யூசர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் ஃபயர்பாக்ஸ் இப்போது முக்கியமான மறுவடிவமைப்பை பெற்று வருகிறது. இந்த அப்டேட் வரும் மே மாதம் யூசர்களின் பயன்பாட்டிற்கு வெளியாக உள்ளது. புதிய ஃபயர்பாக்ஸ் மறுவடிவமைப்பு 'Proton' என்ற குறியீட்டுப் பெயரைக் கொண்டுள்ளது. இந்த பெயர் இந்த மாத தொடக்கத்தில் மொஸில்லாவால் முதலில் வெளியிடப்பட்டது. தற்போது, மொஸில்லா ஃபயர்பாக்ஸ் புதிய மறுவடிவமைப்புக்கான மாக்அப்ஸ்-ஐ பகிர்ந்துள்ளன.

அடுத்த வெர்சன் (90) வெளியிடப்படும் போது பிரபலமான வெப் பிரவுசர் மேற்கொள்ளும் சில நுட்பமான காட்சி மாற்றங்களை மாக்அப் ஸ்லைடுகள் வெளிப்படுத்தியுள்ளன. டெக்டோஸில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, அட்ரஸ் பார், டூல் பார், டாப்ஸ் பார், ஹாம்பர்கர் மெனு, இன்ஃபோ பார்ஸ் மற்றும் டூர் ஹேங்கர்ஸ் உள்ளிட்ட சில ஃபயர்பாக்ஸ் UI எலிமெண்ட்டுகளை மாற்ற மொஸில்லா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நியூ tab பக்கத்தின் தோற்றத்தைத் கஸ்டமைஸ் மூலம் மிகவும் எளிதாக மாற்றலாம் என்பதும் மாக்அப் ஸ்லைடு ஷோ மூலம் தெரியவந்துள்ளது.

Mozilla Firefox-ன் "PROTON"


மேலும் யூசர்கள் தங்களுக்கு விருப்பமான தீம், பேக்ரவுண்ட், டாப் சைட்ஸ் மற்றும் பாக்கெட் பரிந்துரைகளுக்கான மாற்றங்களைத் தேர்வுசெய்யும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, புதிய அப்டேட்டுகளுடன் ஃபயர்பாக்ஸில் உள்ள ஹாம்பர்கர் மெனுவை மொஸில்லா மாற்றியுள்ளதாவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டெக்டோஸ் பகிர்ந்த மாக்அப் ஸ்லைடுகளில், மொஸில்லா ஹாம்பர்கர் மெனு குறைவான விருப்பங்களுடன் வரும் என காட்டியுள்ளது. தற்போது, இந்த மெனு யூசர்களுக்கு நியூஸ் டாப்களை ஓபன் செய்வது, சேஞ்சிங் ஜூம் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய 20 விருப்பங்களைப் பற்றி காண்பிக்கிறது.

ஆனால் விரைவில் வெளியாகவுள்ள புதிய அப்டேட் மூலம் பயர்பாக்ஸ் மெனு, யூசர்கள் அடிக்கடி பயன்படுத்தும் விருப்பங்களை மட்டுமே காண்பிக்கும் என கூறப்படுகிறது. மேலும் அந்த விரைவான அணுகலில் தோன்றாத செட்டிங்ஸ் விருப்பங்களை காண, யூசர்களுக்கு எக்ஸ்பாண்ட் மெனு ஆப்சனும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் அடிக்கடி பயன்படுத்தாத விருப்பங்களை யூசர்கள் தேர்வு செய்துகொள்ளலாம். மேலும், டாப் என்று சொல்லக்கூடிய திரைகளும் புதிய மறுவடிவமைப்பு பெறும் என கூறப்படுகிறது. அதாவது கூர்மையான மூலைகளுடன் உள்ள தற்போதைய வடிவமைப்பிற்கு பதிலாக புதிய அப்டேட்டில் மிகவும் வட்டமான வடிவத்தை டாப்கள் கொண்டிருக்கும்.

இந்த அப்டேட்டுகளை பயன்படுத்துவதற்கும், அனுபவிப்பதற்கும் ஏற்கனவே ஒரு பணித்தொகுப்பு உள்ள நிலையில், அது செயல்திறனில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இது நல்லதல்ல என்று மொஸில்லா கூறியிருந்தது. இப்போது புதிய UI மறுவடிவமைப்பு அம்சங்களைப் பயன்படுத்த, யூசர்கள் அட்ரஸ் பாரில் "about:config" எனத் டைப் செய்வதன் மூலம் பயர்பாக்ஸில் டெவலப்பர் செட்டிங்ஸை மாற்றலாம் என தெரிவித்துள்ளது. பின்னர் அதில் 'Proton'-ஐ சர்ச் செய்து, browser.proton.enabled விருப்பத்தை 'true' என்று மாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Arun
First published: