Home /News /technology /

ஹேக்கிங் ஆபத்து பற்றி mozilla firebox யூசர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

ஹேக்கிங் ஆபத்து பற்றி mozilla firebox யூசர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

மொஸில்லா ஃபையர் ஃபாக்ஸ்

மொஸில்லா ஃபையர் ஃபாக்ஸ்

Mozilla Firefox : ஃபயர்ஃபாக்ஸ் பிரவுசரில் நிறைய பக்ஸ் (bugs) இருப்பதாகவும், இந்த பக்ஸ் மூலம் ஹேக்கர்கள் தரவுகளை துட முடியும் என்று எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சில நாட்களுக்கு முன்பு தான் கூகுள் குரோமில் ஒரு சில பக்ஸ் இருப்பதைக் கண்டறிந்து, டெஸ்க்டாப்பில் கூகுள் குரோம் பயன்படுத்தினால் உங்கள் தகவல்கள் ஹேக் செய்யப்படும் ஆபத்து இருக்கிறது என்பதைப் பற்றிய எச்சரிக்கையை ஒரு சைபர் நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து தற்பொழுது மொஸில்லா ஃபையர்பாக்ஸ் பிரவுசரின் யூசர்களுக்கும் புதிய எச்சரிக்கை வெளியாகியிருக்கிறது.

    டெஸ்க்டாப்பில் பயன்படுத்தப்படும் கூகுள் க்ரோமில் பலவிதமான பிரச்சனைகள் இருக்கிறது என்பது பற்றி இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் குழுவினர் எச்சரிக்கை விடுத்து இருந்தனர். பல யூசர்களுக்கும் இந்த எச்சரிக்கை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதே நிறுவனம்தான் தற்பொழுது மொஸில்லா ஃபையர்பாக்ஸ் பிரவுசரிலும் உங்கள் கணினியை பல்வேறு விதமாகப் பாதிக்கக்கூடிய, உங்கள் தகவல்கள் ஹேக் செய்யக்கூடிய பிரச்சனைகள் இருப்பதாக அறிக்கை வெளியிட்டு உள்ளது. நீங்கள் எந்த லேப்டாப்பில் அல்லது சாதனத்தில் மொஸில்லா ஃபயர்ஃபாக்ஸ் பயன்படுத்தினாலும் அது ஹேக் செய்யப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    ஃபயர்ஃபாக்ஸ் பிரவுசரில் நிறைய பக்ஸ் (bugs) இருப்பதாகவும், இந்த பக்ஸ் மூலம் ஹேக்கர்கள் உங்கள் கணினியில் இருக்கும் பாதுகாப்புத் தடைகளை உடைத்து ரிமோட்டில் இயக்குவது போல, தொலைவிலிருந்து கொண்டு, உங்கள் கணினி அல்லது லேப்டாப்பை ஹேக் செய்து தகவல்களைத் திருடலாம் என்று CERT-in தனது சமீபத்திய அறிக்கையில் கூறி இருக்கிறது.

    XSLT என்ற பிழை கையாளும் பொழுது ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது என்றும், அதன் மூலம் ஹேக்கிங் செய்யக்கூடிய அளவுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் சைபர் ஏஜென்சி தெரிவித்துள்ளது. பிரவுசரில், ஒரு யூசருக்கு ஒரு இணைய-கோரிக்கை வைப்பதன் மூலம், தொலைவிலிருந்து உங்கள் கணினி அல்லது லேப்டாப்பை ஹேக் செய்ய முடியும். அதுமட்டுமில்லாமல் ட்ரூபால் என்ற ஒரு ஓபன் சோர்ஸ் கோடிங் தளத்திலுமே இது போன்ற பாதிப்பு ஏற்படக்கூடிய தன்மை இருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    Also Read : 5ஜி சேவையில் புரட்சி... 6-வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கும் ஜியோ!

    இதற்கும் முன்பு, ஒரு சில பிளகின்ஸ் பயன்படுத்துவதன் மூலம் ஹேக்கர்கள் தகவல்களைத் திருட முடியும் என்ற எச்சரிக்கை வெளியானது. கூகுள் குரோமில் ஏற்பட்ட பக்ஸ் மூலம், உங்கள் கணினியின் மொத்த தகவலும் ஹேக் செய்ய முடியும் என்ற அளவுக்கு ஆபத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அச்சுறுத்தலிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் வரும் சிஇஆர்டி-இன், ஃபயர்ஃபாக்ஸ் பயன்படுத்தும் அனைத்து யூசர்களையுமே அதனுடைய லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்யுமாறு கூறியுள்ளது.
    Published by:Janvi
    First published:

    Tags: Hacking, Mozilla Firefox, Personal data theft

    அடுத்த செய்தி