• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • இந்தியாவில் விரைவில் அறிமுகமாக உள்ள Moto-வின் புத்தம் புதிய 3 ஸ்மார்ட் ஃபோன்கள்!

இந்தியாவில் விரைவில் அறிமுகமாக உள்ள Moto-வின் புத்தம் புதிய 3 ஸ்மார்ட் ஃபோன்கள்!

மோட்டோ

மோட்டோ

மோட்டோவின் மற்றொரு புத்தம் புதிய ஸ்மார்ட் ஃபோனான Moto G51 5G, ஸ்னாப்டிராகன் 480+ சிப்செட் மற்றும் 50MP டிரிபிள் பிரைமரி கேமராவை கொண்டுள்ளது.

  • Share this:
மோட்டோரோலா நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன் 5 புதிய G-சீரிஸ் ஸ்மார்ட் ஃபோன்களை சர்வதேச மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியது. இதில் பிரீமியம் மோட்டோ G200, G31, G41, G51 மற்றும் G71 உள்ளிட்ட ஸ்மார்ட் ஃபோன்கள் அடக்கம். சமீபத்தில்அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புத்தம் புதிய மோட்டோரோலா ஸ்மார்ட் ஃபோன்களில் இந்தியாவில் குறைந்தது 3 ஃபோன்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதன்படி மோட்டோரோலாவின் புதிய மோட்டோ G71 5G, மோட்டோ G51 மற்றும் மோட்டோ G31 உள்ளிட்ட ஃபோன்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று தெரிகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் Moto G71 5G, Moto G51 5G மற்றும் Moto G31 ஆகிய ஸ்மார்ட் ஃபோன்கள் இந்திய BIS (Bureau of Indian Standards) சான்றிதழை பெற்றுள்ளன. மேலும் இந்த ஃபோன்கள் முறையே XT2169, XT2171 மற்றும் XT2173 ஆகிய சான்றிதழ் எண்களை கொண்டுள்ளன.

இந்த டிவைஸ்களின் உலகளாவிய மற்றும் இந்தியா சார்ந்த ஸ்பெசிஃபிகேஷன்கள் ஒரே மாதிரியாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட 3 ஸ்மார்ட் ஃபோன்களுமே பின்புறத்தில் ட்ரிபிள் செட்டப் கேமராக்களுடன் வருகின்றன மற்றும் 5,000mAh பேட்டரி கெப்பாசிட்டியை கொண்டுள்ளன.

மோட்டோ ஜி71 5ஜி (Moto G71 5G):

மூன்றில் Moto G71 5G ஃபோனின் விலை ஐரோப்பாவில் EUR 299.99-ஆக (அதாவதுஇந்திய மதிப்பில் தோராயமாக ரூ.25,200) உள்ளது. இந்த ஃபோனில் 6.4-இன்ச் ஃபுல் HD+ (1,080×2,400 பிக்சல்கள்) OLED டிஸ்ப்ளே 60Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் Qualcomm Snapdragon 695 SoC ப்ராசெஸ்சார், 8GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் உள்ள ட்ரிபிள் கேமரா செட்டப்பில் 50MP பிரைமரி கேமரா, 80MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 2MP மேக்ரோ கேமரா உள்ளிட்டவை அடங்கும். முன்பக்கத்தில் 16MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. நெப்டியூன் கிரீன் ஆர்க்டிக் ப்ளூ மற்றும் அயன் பிளாக் உள்ளிட்ட கலர்களில் கிடைக்கும்.

மோட்டோ ஜி51 5ஜி (Moto G51 5G);

மோட்டோவின் மற்றொரு புத்தம் புதிய ஸ்மார்ட் ஃபோனான Moto G51 5G, ஸ்னாப்டிராகன் 480+ சிப்செட் மற்றும் 50MP டிரிபிள் பிரைமரி கேமராவை கொண்டுள்ளது. இது 6.8-இன்ச் ஃபுல் HD+ LCD டிஸ்ப்ளே மற்றும் 120Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் வருகிறது. இதன் விலை EUR 229.99 (அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.19,300) ஆகும். இது 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 2MP மேக்ரோ யூனிட்டுடன் பின்புறத்தில் டிரிபிள் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்காக முன்பக்கத்தில் 13MP கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது. இண்டிகோ ப்ளூ, அக்வா ப்ளூ, பிரைட் சில்வர் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் இந்த போன் கிடைக்கிறது.

Also read... லைவ் ஆடியோ ரூம்ஸ் அம்சத்தை பயன்படுத்த கிரியேட்டர்களுக்கு பணம் கொடுக்கும் ஃபேஸ்புக்!

மோட்டோ ஜி31 (Moto G31);

இது ஸ்டாண்டர்ட் 60Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் 6.4-இன்ச் OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது மீடியா டெக் ஹீலியோ ஜி85 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இதன் டிரிபிள் ரியர் கேமரா செட்டப் 50MP பிரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்காக முன்புறத்தில் 13MP கேமரா உள்ளது. பேபி ப்ளூ மற்றும் மினரல் கிரே கலர் ஆப்ஷன்களில் வெளிவரும் இந்த ஃபோனின் விலை EUR 199.99 (அதாவது இந்திய மதிப்பில் ரூ.16,700) ஆகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: