அமெரிக்காவில் சமீபத்தில் மோட்டோரோலா நிறுவனம் அதன் எட்ஜ் சீரிஸில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் மோட்டோரோலா எட்ஜ் 20, எட்ஜ் 20 லைட், எட்ஜ் 20 ஃப்யூஷன் மற்றும் எட்ஜ் 20 ப்ரோ உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிமுகம் செய்தது. இந்த நிலையில் மோட்டோரோலா எட்ஜ் 2021 என்ற புதிய ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்த வாரம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் 20 ஃப்யூஷன் போலவே உள்ளது. மோட்டோரோலா எட்ஜ் 20 ஃப்யூஷன் இந்தியாவில் ரூ.21,999 என்ற ஆரம்ப விலையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும் ஒரு சில அம்சங்கள் வேறுபடுகிறது.
மோட்டோரோலா எட்ஜ் 2021 8 ஜிபி/256 ஜிபி மாடல் ஸ்மார்ட்போன் விலையானது $ 500 அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 37,000 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது ஒரு அறிமுக விலை என்பதால் சில நாட்களுக்கு பிறகு இதன் விலையானது தோராயமாக ரூ. 52,000 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோட்டோரோலா எட்ஜ் 2021ல் ஸ்னாப்டிராகன் 778 ஜி SoC ப்ராசெஸ்சார், 8 ஜிபி ரேம்முடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் ஸ்டோரேஜ் 256 ஜிபியாக உள்ளது. இது 30W டர்போ பவர் சார்ஜிங் ஆதரவுடன் 5,000 mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த போனின் பின்புறத்தில் மூன்று கேமரா உள்ளது. இது 108 எம்பி முதன்மை கேமரா, 8 எம்பி அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் கொண்டுள்ளது. மேலும் 32 எம்பி செல்பி கேமராவும் உள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் 2021 6.4 இன்ச் முழு எச்டி+ எல்சிடி பேனலில் 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் எச்டிஆர் 10+ ஆதரவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 4 ஜி, 5ஜி ஆதரவு, வைஃபை 6, ப்ளூடூத், என்எப்சி, ப்ராக்ஸிமிட்டி சென்சார், ஆம்பியண்ட் லைட் சென்சார், ஆக்ஸிலரோமீட்டர், கைரோஸ்கோப், மேக்னடோமீட்டர் (காம்பஸ்) மற்றும் பாரோமீட்டர், ஃபேஸ் அன்லாக் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த போனில் பக்கவாட்டில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இது வாட்டர் ப்ரூப் வசதியை பெற்றுள்ளது. மோட்டோரோலா எட்ஜ் 2021 அமெரிக்காவில் வெளியாகியுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதியில் கனடாவிலும் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் 2021 ஸ்மார்ட்போன் நெபுலா ப்ளூ நிறத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை இது இந்திய சந்தையில் எப்போது அறிமுகமாகும், விற்பனைக்கு வருமா? என்கிற தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.