ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

டிசம்பர் 10-ம் தேதி அறிமுகமாகும் புதிய Moto G51 5G ஸ்மார்ட்ஃபோன்!

டிசம்பர் 10-ம் தேதி அறிமுகமாகும் புதிய Moto G51 5G ஸ்மார்ட்ஃபோன்!

ஸ்மார்ட்ஃபோன்

ஸ்மார்ட்ஃபோன்

Motorola Moto G51 5G : இந்தியாவில் Moto G51 5G-ன் விலை எவ்வளவு என்பதை மோட்டோரோலா இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் ஃபோனான மோட்டோ ஜி51 5ஜி-யை (Moto G51 5G) இந்தியாவில் வரும் டிசம்பர் 10-ஆம் தேதி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல டிப்ஸ்டரான முகுல் ஷர்மா சமீபத்தில் வெளியிட்டுள்ள ட்விட்டில் Moto G51 5G, ஃபோன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் தேதியை வெளியிட்டுள்ளார். வெளியீட்டு தேதியுடன் ஸ்மார்ட் ஃபோனின் சில விவரங்களையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இது 12 5G Bands-களுடன் கூடிய 5G ஃபோனாக இருக்கும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது மற்றும் இது இந்தியாவின் முதல் ஸ்னாப்டிராகன் 480+ 5G ப்ராஸசரை (Snapdragon 480+ 5G Processor) கொண்டிருக்கும். எனினும் மோட்டோரோலா இன்னும் Moto G51 5G, ஃபோனின் அறிமுகம் பற்றிய எந்த விவரங்களையும் உறுதிப்படுத்தவில்லை.

5G சப்போர்ட்டுடன் வரும் Moto G51 5G-ன் மற்ற முக்கிய சிறப்பம்சங்கள் பற்றி இப்போது பார்க்கலாம், இதில் 3 பின்புற கேமராக்கள் மற்றும் 120Hz டிஸ்ப்ளே உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஃபோன் 8GB வரை ரேம் மற்றும் அதிகபட்சமாக 128GB இன்டர்னல் ஸ்டோரேஜூடன் வருகிறது.

இந்தியாவில் Moto G51 5G-ன் எதிர்பார்க்கப்படும் விலை..

இந்தியாவில் Moto G51 5G-ன் விலை எவ்வளவு என்பதை மோட்டோரோலா இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. என்றாலும் இந்த புதிய ஃபோன் ரூ.19,999 விலையில் கிடைக்கும் என வதந்தி பரவியுள்ளது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் 5ஜி இணைப்புடன் கூடிய மிகவும் மலிவு விலை மோட்டோ ஜி-சீரிஸ் ஃபோனாக இது இருக்கும்.

கடந்த ஆண்டு நவம்பரில் Moto G 5G டிவைஸ் நிறுவனத்தின் மலிவு விலை 5G ஃபோனாக இந்தியாவில் ரூ.20,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் ஐரோப்பாவில் Moto G200, Moto G71, Moto G41 மற்றும் Moto G31 ஆகியவற்றுடன் Moto G51 5G ஃபோனும் அறிமுகமானது. அங்கு இந்த ஸ்மார்ட் ஃபோனின் ஆரம்ப விலை EUR 229.99 அதாவது தோராயமாக ரூ.19,600 ஆகும்.

Moto G51 5G ஸ்பெசிஃபிகேஷன்ஸ்..

இதன் இந்திய வேரியன்ட்டின் ஸ்பெசிஃபிகேஷன்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Moto G51 5G ஃபோன் 6.8-இன்ச் ஃபுல் HD+ (1,080x2,400 பிக்சல்கள்) மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளே மற்றும் 120Hz ரெஃப்ரஷ் ரேட்டை கொண்டுள்ளது. இந்த ஃபோன் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் SoC மூலம் இயக்கப்படுகிறது.

இதன் டிரிபிள் ரியர் கேமரா செட்டிங்கில் 50MP பிரைமரி சென்சார் மற்றும் எஃப்/1.8 லென்ஸுடன் 8MP அல்ட்ரா-வைட் ஷூட்டர் மற்றும் 2MP மேக்ரோ ஷூட்டர் ஆகியவை உள்ளன. மேலும் இந்த இந்த ஃபோனின் முன்புறத்தில் 13MP செல்ஃபி கேமரா f/2.2 லென்ஸுடன் வருகிறது. 128GB வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ள இந்த ஃபோன் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 512GB வரையில் ஸ்டோரேஜை சப்போர்ட் செய்கிறது.

ALSO READ |  Oneplus மொபைல் வைத்திருப்பவரா நீங்கள்? இந்த ஆப்சன் உங்களுக்கு தான்

மேலும் இது 10W சார்ஜிங் சப்போர்ட் & 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. நிறுவனம் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தி இருக்கும் டிவைஸின் சாதனத்தின் அதே வேரியன்ட்டை இங்கே அறிமுகப்படுத்தினால், Moto G51 5G ஸ்மார்ட் ஃபோன் மேற்கண்ட அம்சங்களை கொண்டிருக்கலாம்.

Published by:Sankaravadivoo G
First published:

Tags: Motorola