முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய Moto E13 - விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய Moto E13 - விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

மோட்டோ E13

மோட்டோ E13

Moto E13 மொபைலின் 2GB ரேம் + 64GB ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.6,999-ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :
  • Mumbai, India

மோட்டோரோலா இந்தியா நிறுவனம் Moto E13 என்ற என்ட்ரி-லெவல் ஸ்மார்ட் ஃபோனை சமீபத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மொபைல் முக்கியமாக வெப் பிரவுசிங் செய்ய, வாட்ஸ்அப் பயன்படுத்த மற்றும் கன்டென்ட்ஸ்களை பார்க்க ஸ்மார்ட்ஃபோன் வைத்திருக்க விரும்பும் என்ட்ரி-லெவல் வாடிக்கையாளர்களுக்காக டிசைன் செய்யப்பட்டுள்ளது.

ஸ்மூத்தான யூஸர் எக்ஸ்பீரியன்ஸை வழங்க Moto E13 மொபைலில் octa-core UNISOC T606 SoC சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சிப்செட் குறிப்பிட்ட இந்த செக்மென்ட்டில் உள்ள மற்ற சிப்செட்ஸ்களுடன் ஒப்பிடும் போது சிறந்த செயல்திறனை வழங்குவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மொபைலின் விலை மலிவு என்பதால் 5G போன்ற முக்கிய அம்சங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

Moto E13 மொபைலின் சிறப்பம்சங்கள் :

இந்த மொபைல் 60Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 20:9 ரேஷியோவுடன், 6.5 இன்ச் IPS LCD ஸ்கிரீனை கொண்டுள்ளது. ஏற்கனவே குறிப்பிடப்படி இது ஆக்டா-கோர் UNISOC T606 ப்ராசஸர் மற்றும் 2GB அல்லது 4GB LPDDR4x RAM உடன் வருகிறது. இந்த 2 மாடல்களும் 64GB ஸ்டோரேஜை கொண்டுள்ளன. மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் ஸ்டோரேஜை விரிவாக்கம் செய்து கொள்ளலாம். மேலும் பிற பட்ஜெட் மொபைல்களை போலில்லாமல் இது லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 13 (Go Edition)-ஐ பெறுகிறது.

மேலும் இந்த டிவைஸ் ஒரு பெரிய 5,000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஃபோன் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டென்சிற்காக IP52 ரேட்டிங்கை பெற்றுள்ளது. இது தவிர Moto E13 மொபைல் Dolby-enabled ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. இந்த மொபைலின் எடை180 கிராம் ஆகும். யூஸர்கள் இந்த மொபைலில் டூயல் சிம் கார்டுகளை பயன்படுத்தலாம்.

கேமராக்களை பொறுத்தவரை Moto E13 மொபைலின் பின்புறத்தில் 13 மெகாபிக்சல் பிரைமரி கேமராவும் மற்றும் முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த 2 கேமராக்களும் 30fps வேகத்தில் முழு-எச்டி வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டவை. இந்த ஸ்மார்ட்போனின் 5,000mAh பேட்டரி 23 மணிநேர வீடியோ பிளேபேக்கிற்கான சப்போர்ட்டை வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது. ப்ளூடூத் 5.0 வயர்லெஸ் இணைப்புடன் 2.4GHz மற்றும் 5GHz டூயல்-பேண்ட் Wi-Fi-ஐ இந்த மொபைல் சப்போர்ட் செய்கிறது. இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போனில் USB Type-C போர்ட் மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் உள்ளது.

விலை மற்றும் கிடைக்கும் தன்மை:

Moto E13 மொபைலின் 2GB ரேம் + 64GB ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.6,999-ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் 4GB ரேம் + 64GB ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.7,999 ஆகும். இந்த புதிய மோட்டோரோலா ஸ்மார்ட் போன் Flipkart மற்றும் JioMart-ல் வாங்க கிடைக்கும்.

இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் Flipkart மற்றும் JioMart யில் கிடைக்கும். இந்த மொபைல் அரோரா கிரீன், காஸ்மிக் பிளாக் மற்றும் க்ரீமி ஒயிட் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த போனை வாங்கிய 15 நாட்களுக்குள் ஜியோ வாடிக்கையாளராக நீங்கள் சேர்ந்தால், பயணாளர்கள் ரூ. 700யை கேஷ் பேக் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Jio, Motorola, Smartphone, Technology