ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

5G சாஃப்ட்வேர் அப்டேட்ஸ் எப்போது கிடைக்கும்? விவரங்களை வெளியிட்ட Motorola.!

5G சாஃப்ட்வேர் அப்டேட்ஸ் எப்போது கிடைக்கும்? விவரங்களை வெளியிட்ட Motorola.!

மோட்டோரோலா 5G

மோட்டோரோலா 5G

Motorola 5G Support | லெனோவாவுக்குச் சொந்தமான மோட்டோரோலா தனது 5G மொபைல்களுக்கான சாஃப்ட்வேர் அப்டேட் கிடைக்கும் விவரங்களை வெளிப்படுத்தி உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அதிவேக மொபைல் இன்டர்நெட் வழங்கும் நோக்கத்தில் நாட்டில் 5G சேவையை முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் துவக்கி உள்ளன. தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் மட்டுமே சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில், படிப்படியாக நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சேவை விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

5G சேவை கிடைத்தாலும் பல 5G மொபைல் யூஸர்களால் அதனை பயன்படுத்த முடியவில்லை. காரணம் 5G-யை சப்போர்ட் செய்ய கூடிய சாஃப்ட்வேர் அப்டேட் மொபைல் நிறுவனங்கள் தரப்பிலிருந்து யூஸர்களுக்கு தேவைப்படுகிறது. விரைவில் இந்த அப்டேட்டை வெளியிட ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், லெனோவாவுக்குச் சொந்தமான மோட்டோரோலா தனது 5G மொபைல்களுக்கான சாஃப்ட்வேர் அப்டேட் கிடைக்கும் விவரங்களை வெளிப்படுத்தி உள்ளது.

யூஸர்களின் ஆர்வத்தை கருத்தில் கொண்டு ஏற்கனவே சில டிவைஸ்களுக்கு சாஃப்ட்வேர் அப்டேட்ஸ்களை வெளியிடத் தொடங்கியுள்ளதாக மோட்டோரோலா கூறியுள்ளது. மேலும் வரும் நவம்பர் முதல் வாரத்திற்குள் அனைத்து மோட்டோரோலா 5G மொபைல்களுக்கும் சாஃப்ட்வேர் சப்போர்ட்டை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறி உள்ளது. இந்த வாரத்தில் Edge 30 Ultra மற்றும் Edge 30 Fusion ஸ்மார்ட் ஃபோன்களுக்கான 5G அப்டேட்டை ஏற்கனவே வெளியிட்டுள்ள தகவலையும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

வரும் வாரங்களில் மேலும் சில 5G எனேபிள்டு மோட்டோரோலா மொபைல்கள் சாஃப்ட்வேர் அப்டேட்ஸ்களை பெற துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையில் மோட்டோரோலா ஆசிய பசிபிக் நிர்வாக இயக்குனர் பிரசாந்த் மணி கூறியிருப்பதாவது, இந்தியாவில் புழக்கத்தில் உள்ள மோட்டோரோலா 5G மொபைல்கள் அனைத்து வகைகளிலும் நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து 8 சப் 6 GHz 5G பேண்டுகள் உட்பட 11 முதல் 13 5G பேண்டுகளுக்கான ஹார்டுவேர் சப்போர்ட்டை கொண்டுள்ளன. ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ 5ஜி ஆகியவற்றில் 5G-யை இயக்குவதற்கான OTA சாஃப்ட்வேர் அப்டேட்ஸ்களை படிப்படியாக ரிலீஸ் செய்து வருகிறோம். இதனால் கூடிய விரைவில் எங்கள் 5G டிவைஸ்களை பயன்படுத்தும் வாடிக்கையாளார்கள் அனைவரும் தடையற்ற 5G அனுபவத்தை பெறுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Also Read : ரூ.15,000 பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் சிறந்த 5 ஸ்மார்ட்போன்கள் பட்டியல்.! 

Edge 30 Ultra மற்றும் Edge 30 Fusion டிவைஸ்களுக்கான 5G அப்டேட்கள் ஏற்கனவே கிடைக்க பெற்றுள்ள நிலையில் நிறுவனத்தின் அடுத்தடுத்த டிவைஸ்களுக்கு சாஃப்ட்வேர் அப்டேட்ஸ் எப்போது கிடைக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

அக்டோபர் 25-ஆம் தேதி: Moto G62 5G, Moto G82 5G, Moto Edge 30, Moto G71 5G

நவம்பர் 5-ஆம் தேதி: Moto Edge 30 Pro, Moto G51 5G, Moto Edge 20 Pro, Moto Edge 20, Moto Edge 20 Fusion

Also Read : உங்க போன்ல ஏர்டெல் 5ஜி கிடைக்குமா? இந்த லிஸ்ட செக் பண்ணுங்க!

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களுக்கு வரும் டிசம்பரில் 5G அப்டேட்டை வழங்க உளளதாக கூறியுள்ள நிலையில், சாம்சங் அடுத்த மாதம் முதல் OTA அப்டேட்டை வழங்க உள்ளது. கூகுள் தனது Pixel 6a மற்றும் புதிய Pixel 7 சீரிஸ்க்கான அப்டேட்களை வெளியிடுவது குறித்து டெலிகாம் நிறுவனங்களுடன் பேசி வருகிறது.

Published by:Selvi M
First published:

Tags: 5G technology, Motorola, Tamil News