ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

Motorola Edge 30 Pro ஸ்மார்ட் ஃபோனை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வரும் மோட்டோரோலா.!

Motorola Edge 30 Pro ஸ்மார்ட் ஃபோனை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வரும் மோட்டோரோலா.!

Motorola Edge 30 Pro

Motorola Edge 30 Pro

Motorola Edge 30 Pro | இந்த புதிய ஸ்மார்ட் போன் Qualcomm Snapdragon 8 Gen 1 SoC மூலம் இயக்கப்படும். இருப்பினும், Motorola Edge 30 Pro-வின் டிசைன் Motorola Edge X30 மொபைலை விட சற்று வித்தியாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் ஃபோனான (Flagship Smartphone) மோட்டோ எட்ஜ் எக்ஸ்30 (Moto Edge X30), இந்தியாவில் இந்த மாதத்திற்குள் மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ (Motorola Edge 30 Pro) என்ற பெயரில் அறிமுகமாகலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. Motorola Edge 30 Pro Motorola Edge 30 Pro ஸ்மார்ட் ஃபோனின் இந்திய மற்றும் உலகளாவிய வெளியீடு இந்த மாதத்தில் நடைபெறலாம் என்று ஒரு அறிக்கை கூறுகிறது.

எனினும் இந்த புத்தம் புதிய ஸ்மார்ட் ஃபோனின் சரியான வெளியீட்டு தேதி இன்னும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் இந்த ஸ்மார்ட் ஃபோனின் முக்கிய ஸ்பெசிஃபிகேஷன்கள் மற்றும் டிசைன் பற்றிய சில தகவல்கள் கடந்த வாரம் வெளியானது.

91Mobiles டிப்ஸ்டர் முகுல் ஷர்மா இந்த ஸ்மார்ட் ஃபோன் உலகளவில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறி இருக்கிறார். Lenovo-க்கு சொந்தமான மோட்டோரோலாவின் அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. கடந்த மாதம், டிசம்பர் 2021-ல் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Moto Edge X30, Bureau of Indian Standards database-ல் காணப்படுவதாக கூறப்படுகிறது. இது நாட்டில் விரைவில் இந்த புதிய மொபைல் அறிமுகம் செய்யப்பட உள்ளதை குறிக்கும்.

Moto Edge 30 Pro

இது உண்மையாக இருந்தால் இந்த புதிய ஸ்மார்ட் போன் Qualcomm Snapdragon 8 Gen 1 SoC மூலம் இயக்கப்படும். இருப்பினும், Motorola Edge 30 Pro-வின் டிசைன் Motorola Edge X30 மொபைலை விட சற்று வித்தியாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Also Read : Android யூஸர்களுக்காக விரைவில் பயனுள்ள வாய்ஸ் மெசேஜ் அம்சத்தை அறிமுகப்படுத்தும் whatsapp..!

Motorola Edge 30 Pro ஸ்பெசிஃபிகேஷன்கள்:

ஒரு அறிக்கையின் படி, Motorola Edge 30 Pro மொபைலானது Moto Edge X30-ன் ரீபிராண்டட் வெர்ஷனாக (rebranded version) இருக்கலாம். Motorola Edge 30 Pro உண்மையிலேயே Moto Edge X30-ன் ரீபிராண்டட் வெர்ஷன் என்றால் இந்த 2 போன்களின் ஸ்பெசிஃபிகேஷன்களும் மிகவும் ஒத்ததாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Motorola Edge 30 Pro மொபைலானது 144Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் HDR10+ சப்போர்ட் உடன் 6.7-இன்ச் ஃபுல்-HD+ POLED டிஸ்ப்ளேவுடன் வரலாம். இது Qualcomm Snapdragon 8 Gen 1 SoC ப்ராசஸரா கொண்டிருக்கும். மேலும் 12GB வரையிலான ரேம் கொண்டிருக்கும்.

Moto Edge 30 Pro

Motorola Edge 30 Pro 50 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்க கூடும். 60 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா மொபைலின் முன்பக்கத்தில் இருக்கலாம். அதே போல Motorola Edge 30 Pro மொபைலானது 68W டர்போ பவர் ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் டெக்னலாஜியை கொண்டிருக்கும் மற்றும் 5,000எம்ஏஎச் பேட்டரியை பெறும். Motorola Edge 30 Pro மொபைலில் 5G, 4G LTE, Wi-Fi 6 மற்றும் ப்ளூடூத் v5.2 போன்ற கனெக்ஷன் ஆப்ஷன்கள் இருக்கலாம்.

Published by:Selvi M
First published:

Tags: India, Motorola, Smartphone, Technology