ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

Motorola Edge 30 இந்திய விற்பனை ஆரம்பம் - என்ன விலை.? என்னென்ன சலுகைகள்.?

Motorola Edge 30 இந்திய விற்பனை ஆரம்பம் - என்ன விலை.? என்னென்ன சலுகைகள்.?

Motorola Edge 30

Motorola Edge 30

Motorola Edge 30 | இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் முன்னணி சில்லறை விற்பனை கடைகளின் வழியாக மீட்டியர் க்ரே மற்றும் அரோரா க்ரீன் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களின் கீழ் வாங்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மோட்டோரோலாவின் லேட்டஸ்ட் மாடலாக மோட்டோரோலா எட்ஜ் 30, அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, இந்தியாவில் அதன் விற்பனை தொடங்கி உள்ளது. இது உலகின் மிக மெலிதான 5ஜி ஸ்மார்ட்போன் என்று கூறப்படுகிறது, இதன் தடிமன் வெறும் 6.79 மிமீ மட்டுமே ஆகும். மேலும் இது ஸ்னாப்டிராகன் 778ஜி ப்ராசஸரின் மேம்படுத்தப்பட்ட பதிப்பான குவால்காம் ஸ்னாப்டிராகன் 778+ உடன் வருகிறது. இதே சிப்செட் தான் சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி உட்பட பல குறிப்பிடத்தக்க ஆண்ட்ராய்டு போன்களிலும் காணப்படுகிறது. இந்த புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போனின் மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இதன் இரண்டு 50 மெகாபிக்சல் கேமராக்கள் (ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்) மற்றும் 33W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு போன்றவைகளை கூறலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 30: இந்திய விற்பனை, விலை மற்றும் சலுகைகள்

இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போனின் விற்பனையானது மே,19 மதியம் தொடங்கியது. இதை பிளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் முன்னணி சில்லறை விற்பனை கடைகளின் வழியாக மீட்டியர் க்ரே மற்றும் அரோரா க்ரீன் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களின் கீழ் வாங்கலாம். இதன் பேஸிக் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.27,999 க்கும், இதன் 8ஜிபி ரேம் வேரியண்ட் ஆனது ரூ.29,999 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அறிமுக விற்பனைச் சலுகையின் ஒரு பகுதியாக, பிளிப்கார்ட் தளம் சில வங்கி சலுகைகளை வழங்குகிறது, இதன் கீழ் மேற்குறிப்பிட்ட வேரியண்ட்களின் விலையை முறையே ரூ.25,999 மற்றும் ரூ.27,999 ஆக குறைக்கலாம்.

மோட்டோரோலா எட்ஜ் 30: விரிவான அம்சஙகள்

பெயர் குறிப்பிடுவது போல, மோட்டோரோலா எட்ஜ் 30 என்பது மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோவின் டோன்ட்-டவுன் (அதாவது சற்றே அம்சங்கள் குறைக்கப்பட்ட) எடிஷன் ஆகும். இது மோட்டோ ஜி52 மாடலில் நாம் பார்த்த 6.5-இன்ச் பிஓஎல்இடி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது எச்டிஆர்10+ ஆதரவு, 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, ஃபுல் எச்டி+ ரெசல்யூஷன் (2,400 x 1,080 பிக்சல்கள்) கொண்ட டிஸ்ப்ளே ஆகும்.

கேமராக்களை பொறுத்தவரை, இது ஓஐஎஸ் ஆதரவுடன் கூடிய 50 மெகாபிக்சல் மெயின் சென்சார் + மேக்ரோ வியூ கொண்ட 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமராக்களை பேக் செய்கிறது. முன்பக்கத்தை பொறுத்தவரை, இதில் 4கே வீடியோக்களை பதிவு செய்யக்கூடிய 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. இதன் கேமரா செட்டப் ஆனது டூயல் கேப்சர், ஸ்பாட் கலர், நைட் விஷன் (ரா), ஆட்டோ நைட் விஷன் (ரா), போர்ட்ரெய்ட், கட்அவுட், லைவ் ஃபில்டர் இன் ஃபோட்டோ மோட் மற்றும் பனோரமா போன்ற அம்சங்களுடன் வருகிறது.

Also Read : ரூ.30,000 பட்ஜெட்டில் சிறந்த 10 ஸ்மார்ட்போன்கள்!

மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது சைட்-அன்லாக், 5ஜி, வைஃபை 6இ, ப்ளூடூத் 5.2, டூயல் சிம் ஆதரவு, டால்பி அட்மோஸ் மற்றும் ஸ்னாப்டிராகன் சவுண்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆகியவைகளை கொண்டுள்ளது. கடைசியாக, மோட்டோரோலா எட்ஜ் 30 ஆனது 4,020எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்கிறது.

Published by:Selvi M
First published:

Tags: Mobile phone, Motorola, Technology