லெனோவாவிற்கு சொந்தமான மோட்டோரோலா தனது Motorola Edge 30 Fusion Viva Magenta ஸ்மார்ட் ஃபோனின் லிமிட்டட் எடிஷனை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. Pantone கலரில் வரும் உலகின் முதல் ஹேண்ட்செட் இது என மோட்டோரோலா நிறுவனம் கூறுகிறது. மோட்டோரோலாவின் இந்த புதிய லிமிட்டட் எடிஷன் ஸ்மார்ட் ஃபோன் கடந்த 2022 செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட Motorola Edge 30 Fusion மாடலை போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் 30 ஃப்யூஷன் விவா மெஜந்தா லிமிட்டட் எடிஷனின் விலை விவரங்கள் : Motorola Edge 30 Fusion Viva Magenta-வின் லிமிட்டட் எடிஷன் ரூ.39,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 12, 2023 முதல் ஃபிளிப்கார்ட் மற்றும் மோட்டோரோலா நிறுவனத்தின் வெப்சைட் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ரீட்டெயில் ஸ்டோர்களில் விற்பனைக்கு வரும். தவிர ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் இந்த லிமிட்டட் எடிஷன் ஸ்மார்ட் ஃபோனை ரீடெயில் விற்பனையில் வாங்க முடியும்.
நிறுவனம் விவா மெஜென்டியா லிமிடெட் எடிஷன் மோட்டோரோலா எட்ஜ் 30 ஃப்யூஷனுக்கான அறிமுக சலுகைகளையும் அறிவித்துள்ளது. மோட்டோரோலா நிறுவனம் IndusInd வங்கி கிரெடிட் கார்டு EMI பரிவர்த்தனைகளுடன் ரூ.3,000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் உள்ளிட்ட லாஞ்ச் ஆஃபர்களை வழங்குகிறது. தவிர ரிலையன்ஸ் ஜியோவிடமிருந்து ரூ.7,699 மதிப்புள்ள பலன்களை வாடிக்கையாளர்கள் பெறுவார்கள்.
ஸ்பெசிஃபிகேஷன்ஸ் :
இந்த டூயல் சிம் ஸ்மார்ட் ஃபோன் 6.55-இன்ச் ஃபுல்-எச்டி + கர்வ்டு எண்ட்லெஸ் எட்ஜ் pOLED டிஸ்ப்ளே மற்றும் 144Hz ரெஃப்ரஷ் ரேட்டை கொண்டுள்ளது. இந்த மொபைல் டிஸ்ப்ளேவின்அதிகபட்ச பிரைட்னஸ் 1,100nits மற்றும் HDR10+ஐ சப்போர்ட் செய்கிறது. இந்த மொபைல் My UX இன்டர்ஃபேஸுடன் Android 12-ல் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட் ஃபோன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888+ SoC ப்ராசஸரை கொண்டுள்ளது மற்றும் 8GB LPDDR5 RAM-உடன் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, 128GB இன்டர்னல் UFS 3.1 ஸ்டோரேஜ் டிவைஸ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் போன் 175 கிராம் எடையும் 7.45 மிமீ தடிமன் கொண்டது.
இந்த மொபைலின் டிரிபிள் ரியர் கேமரா செட்டப்பின் சிறப்பம்சம் குவாட் பிக்சல் டெக்னாலஜி, ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) மற்றும் Omni-Directional PDAF உடன் 50 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் ஆகும். கூடுதலாக 13 மெகாபிக்சல் சென்சார், 120-டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூவுடன் கூடிய அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ், f/2.2 அபெர்ச்சர் மற்றும் 13-மெகாபிக்சல் சென்சார் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன. செல்ஃபிக்களுக்காக மொபைலின் முன்பக்கத்தில் குவாட் பிக்சல் தொழில்நுட்பத்துடன் கூடிய 32 மெகாபிக்சல் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மோட்டோரோலா மொபைல் WiFi-6E, 5G, 4G LTE, Bluetooth v5.2, NFC மற்றும் USB Type C போர்ட் உள்ளிட்டவற்றையும் கொண்டுள்ளது. மேலும் இது அண்டர் டிஸ்பிளே ஃபிங்கர்பிரின்ட் சென்ஸாரை கொண்டுள்ளது மற்றும் ஃபேஸ் அன்லாக் டெக்னலாஜியை சப்போர்ட் செய்கிறது. இந்த மொபைல் 68W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் 4,400mAh பேட்டரியை கொண்டுள்ளது. கூடுதலாக இது வாட்டர் & டஸ்ட் ரெசிஸ்டன்ஸிற்காக IP52 ரேட்டிங்கை பெற்றுள்ளது. டூயல் மைக்ரோஃபோன்ஸ் மற்றும் Dolby Atmos-ஆல் டியூன் செய்யப்பட்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Motorola, Technology