ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இத்தனை அம்சங்களுடன் கூடிய Motorola Edge 20 மற்றும் Edge 20 Fusion ஸ்மார்ட்போன்களின் விலை இவ்வளவு தானா?

இத்தனை அம்சங்களுடன் கூடிய Motorola Edge 20 மற்றும் Edge 20 Fusion ஸ்மார்ட்போன்களின் விலை இவ்வளவு தானா?

motorola edge smartphone

motorola edge smartphone

மோட்டோரோலா எட்ஜ் 20 ஃப்யூஷன் ஸ்மார்ட் போனானது ஆண்ட்ராய்டு 11 இல் இயங்கும் மற்றும் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டிருக்கும்

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

ஆகஸ்ட் 17ம் தேதி அன்று மோட்டோரோலா எட்ஜ் 20 ஃப்யூஷனுடன் மோட்டோரோலா எட்ஜ் 20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது.

வழக்கமான எட்ஜ் 20 மொபைல் லைனோ மற்றும் ப்ரோ ஆகிய மாடல்களுடன் லெனோவாவுக்கு சொந்தமான நிறுவனத்தால் கடந்த ஜூலை மாதம் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது லைட் வேரியண்ட் இந்தியாவில் எட்ஜ் 20 ஃப்யூஷனாக அறிமுகமாக உள்ளது. விளம்பர போஸ்டர்களை வைத்து பார்க்கும் போது, மோட்டோரோலா எட்ஜ் 20-ன் உலகளாவிய வேரியண்ட் மற்றும் இந்தியா-ஸ்பெசிபிக் வேரியண்ட் ஒரே ஸ்பெசிபிகேஷன்களை பகிர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமான மோட்டோரோலா எட்ஜ் 20 ஸ்மார்ட்போன், 6.7 இன்ச் OLED டிஸ்ப்ளே 144 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. சிங்கிள் செல்ஃபி கேமராவுக்கு மையமாக சீரமைக்கப்பட்ட ஹோல் பஞ்ச் கட்அவுட் உள்ளது. ஹூட்டின் கீழ், மோட்டோரோலா எட்ஜ் 20 ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778 5 ஜி SoC உடன் 8 GB ரேம் மற்றும் 256 GB ஸ்டோரேஜ் விருப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 5G, 4G LTE, Wi-Fi 6 மற்றும் 6E, மற்றும் ப்ளூடூத் v5.2 ஆகியவற்றை ஆதரிக்கிறது.

Motorola Edge 20

பின்புறத்தில், ஸ்மார்ட்போனின் அதே நிறத்தை கொண்ட மூன்று கேமரா அமைப்பு உள்ளது. கேமரா தொகுதியில் 108 மெகாபிக்சல் முதன்மை ஷூட்டர், 16 மெகாபிக்சல் இரண்டாம் நிலை ஷூட்டர் மற்றும் 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் 3x ஹை-ரெஸ் ஆப்டிகல் ஜூம் உள்ளது. முன்பக்கத்தில், மோட்டோரோலா எட்ஜ் 20-ல் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 20 30W டர்போ பவர் சார்ஜிங் கொண்ட 4,000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது 499.99 என்ற யூரோ டாலர்களில் அறிமுகமானது. இது தோராயமாக இந்திய மதிப்பில் ரூ.44,100-த்திற்கு விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வண்ணங்களில் வருகிறது.

Motorola Edge 20

மோட்டோரோலா எட்ஜ் 20 ஃப்யூஷன் ஒரு முக்கிய பாட்டம் பேஸில் மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் கொண்ட பஞ்ச்-ஹோல் வடிவமைப்பைக் கொண்டிருக்கும். பின்புறத்தில், இது மூன்று கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். இந்த கைபேசி 6.67 அங்குல முழு எச்டி+ (1080x2400 பிக்சல்கள்) 90 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் மற்றும் 10-பிட் வண்ண ஆதரவுடன் AMOLED திரையைக் கொண்டிருக்கும். இது இரண்டு வண்ண வகைகளில் வழங்கப்படும்.

மோட்டோரோலா எட்ஜ் 20 ஃப்யூஷனில் 108 எம்பி பிரைமரி சென்சார், 8 எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2 எம்பி டீம் ஸ்னாப்பர் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பு பொருத்தப்பட்டிருக்கும். செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்கு, இது 32 MP முன் எதிர்கொள்ளும் கேமராவைக் கொண்டிருக்கும்.

Also Read: தற்போதுள்ள கொரோனா தடுப்பூசிகள் 3வது அலையில் இருந்து பாதுகாக்குமா? அல்லது பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமா?

மோட்டோரோலா எட்ஜ் 20 ஃப்யூஷன் குறைந்தபட்சம் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்துடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமென்சிட்டி 800 யூ செயலியில் இருந்து சக்தியைப் பெறும். ஹூட்டின் கீழ், இது ஆண்ட்ராய்டு 11 இல் இயங்கும் மற்றும் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்யும். இணைப்பிற்கு, சாதனம் டூயல்-பாண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், என்எப்சி, ஹெட்போன் ஜாக் மற்றும் டைப்-சி போர்ட் ஆகியவற்றுக்கான ஆதரவை வழங்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மோட்டோரோலா எட்ஜ் 20 ஃப்யூஷன் 6 ஜிபி/128 ஜிபி மாடலுக்கு ரூ .21,499 மற்றும் 8 ஜிபி/128 ஜிபி வேரியண்டிற்கு ரூ .23,999 என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வ விலை விவரங்கள் நாளைய தொடக்கத்தில் அறிவிக்கப்படும். இந்த தொலைபேசி இந்தியாவில் Flipkart வழியாக கிடைக்கும்.

Published by:Arun
First published:

Tags: Motorola, Smart Phone, Technology