ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

உலக சந்தையில் அறிமுகம் ஆகும் ஃப்ளிப் மாடல் மோடோ ரேசர் 2022 - இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா?

உலக சந்தையில் அறிமுகம் ஆகும் ஃப்ளிப் மாடல் மோடோ ரேசர் 2022 - இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா?

மோடோ ரேசர் 2022

மோடோ ரேசர் 2022

ஃப்ளிப் வகை ஃபோன்களில் லேட்டஸ்டாக மோடோரோலா நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் மாடல் தான் மோடோ ரேசர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  ஃப்ளிப் வகை ஃபோன்களில் லேட்டஸ்டாக மோடோரோலா நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் மாடல் தான் மோடோ ரேசர். சர்வதேச சந்தைகளில் இது அறிமுகம் செயப்பட்டுள்ளது. முன்னதாக, சாம்சங் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட கேலக்ஸி இசட் ஃபிலிப் 4 மாடல் ஃபோனுக்கு போட்டியாக மோடோ ரேசர் அறிமுகம் செய்யப்பட்டது.

  கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சீனாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மோடோ ரேசர் ஃபோனை தற்போது உலகின் பிற நாடுகளிலும் அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டிசைன் மற்றும் வசதிகளில் பல்வேறு புதிய அம்சங்களை மோடோ ரேசர் ஃபோனில் மோடோரோலா நிறுவனம் இடம்பெறச் செய்துள்ளது. குறிப்பாக லேட்டஸ்ட் ஹார்டுவேர் பொருட்கள் மோடோ ரேசரில் இடம்பெற்றுள்ளன.

  மோடோ ரேசரின் சர்வதேச விலை

  மோடோ ரேசர் 2022 ஃபோனின் விலையை 1200 யூரோ என்று மோடோரோலா நிறுவனம் நிர்ணயம் செய்திருப்பதாகத் தெரிகிறது. இது இந்திய மதிப்பில் ரூ.98,500 ஆகும். தற்போது வாடிக்கையாளர்களுக்கு ஒரு வேரியண்ட் மட்டுமே கிடைக்கக் கூடியதாக இருக்கிறது. அதாவது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி மற்றும் ஒரே கலர் கொண்ட வேரியண்ட் மட்டுமே விற்பனைக்கு வருகிறது.

  இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா?

  மோடோரோலா நிறுவனத்தின் மோடோ ரேசர் 2022 ஃபோனுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகின்ற நிலையில், அது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போதைய சூழலில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் மோடோரோலா நிறுவனம் வெளியிடவில்லை.

  ஆனால், அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்திய சந்தையை அது தவற விடாது என்று கருதப்படும் நிலையில், வெகுவிரைவில் இந்தியாவில் மோடோ ரேசர் 2022 அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  மோடோ ரேசர் சிறப்பம்சங்கள்

  சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிலிப் 4 போலவே இதனை நீங்கள் மடித்துக் கொள்ளலாம். மடிக்கப்பட்ட நிலையில் இது 2.7 இன்ச் அமோலெட் ஸ்கிரீன் கொண்டதாக இருக்கும். மெயின் டிஸ்பிளே திறக்காமல் இங்கேயே பல தகவல்களை நீங்கள் ஆக்சஸ் செய்ய முடியும்.

  அதேபோன்று மெயின் டிஸ்பிளேவானது 6.67 இன்ச் டிஸ்பிளே கொண்டதாகும். இதில் pOLED டிஸ்பிளே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது FHD+ ரெசொல்யூஷன் கொண்டதாகும்.

  Read More:பயனர்களுக்காக புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ள வாட்ஸ் அப்... என்னென்ன தெரியுமா?

  இதில் ஸ்நாப்டிராகன் 8+ ஜெனரேசன் சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை விரிவாக்கம் கொண்ட மெமரி வசதி உள்ளது. இதன் பேட்டரி திறன் 3,300 mAh ஆகும். 50 எம்பி மெகாபிக்சல் பிரைமரி கேமரா 13 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு லென்ஸ், 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன. சாம்சங் ஃபோனுக்கு மிக சரியான போட்டியாகக் கருதப்படுகிறது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Smartphone, Technology