இந்தியாவில் முதல்முறையாக ஆன்ட்ராய்டு 9 பை அப்டேட் உடன் Moto G6 Plus அறிமுகமாகிறது என மோட்டரோலா இந்தியா தனது அதிகாரப்பூர்வ தளத்தில் பதிவிட்டுள்ளது.
16,121 ரூபாய்க்கு இப்புதிய Moto G6 Plus உள்ளது. ஆன்ட்ராய்டு security patch உள்கொண்டு அனைத்துப் புதிய அம்சங்களும் மோட்டோ ஸ்மார்ட்ஃப்பொனி அப்டேட் ஆகியுள்ளது. கூகுள் பிக்ஸ்ல் மூலம் இவ்வளவு காலம் செயல்பட்டு வந்த நேவிகேஷன் ஆப்ஷன் இனி இப்புதிய ஆன்ட்ராய்டு அப்டேட் மூலமாகவே பெறலாம்.
ஆன்ட்ராய்டு பை அப்டேட்-ல் தகவமைப்புடன் கூடிய பேட்டரி மற்றும் ப்ரைட்னெஸ் பயனாளர்களின் செளகரியத்துக்காகப் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக Moto G6 Plus 9,490 ரூபாய்க்கு அறிமுகமானது. அன்றைய அறிமுகத்தின் போது ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ கொண்டிருந்தது. Moto G6 Plus உடன் Moto X4 ஸ்மார்ட்ஃபோனும் புதிய ஆன்ட்ராய்டு பை அப்டேட்டைப் பெற்றுள்ளது. இதனது விலை 10,599 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய அப்டேட்டைப் பெற விரும்பும் மோட்டோ பயனாளர்கள் சமீபத்திய ஆன்ட்ராய்டு வெர்ஷனை தங்களது ஸ்மார்ஃபோனில் 50%-க்கும் அதிகமான பேட்டரி திறன் இருக்கும்போது அப்டேட் செய்ய வேண்டும். குறிப்பாக வை-ஃபை சேவையின் மூலமாகவே செய்ய முடியும். அப்டேட் ஆனபின்னர் குறுந்தகவல் மூலம் அறிவிப்பு வெளியாகும் என மோட்டோ தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க: இன்றைய ராசிபலன் | 02 ஜனவரி 2019
Published by:Rahini M
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.