ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

மோட்டோ G51 ஸ்மார்ட்போன் வெளியாகும் தேதி அறிவிப்பு - இதன் விலை, சிறப்பம்சங்கள்!

மோட்டோ G51 ஸ்மார்ட்போன் வெளியாகும் தேதி அறிவிப்பு - இதன் விலை, சிறப்பம்சங்கள்!

மோட்டோ G51 ஸ்மார்ட்போன்

மோட்டோ G51 ஸ்மார்ட்போன்

மோட்டோ G51 ஸ்மார்ட்போன், டிசம்பர் 10ம் தேதி வெளியாக உள்ளது என அதிகாரப்பூர்வமான அறிவிப்பை மோட்டோரோலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

ஒரு நல்ல ஸ்மார்ட்போனை வாங்குவதற்கு சிறந்த செயல்திறன், அட்டகாசமான கேமரா வசதி, நீண்ட நேர பேட்டரி பேக் அப், ஸ்டைலான மொபைல் மாடல் ஆகிய சிறப்பம்சங்கள் அவசியம் இருந்தாக வேண்டும். நமது பட்ஜெட்டை பொறுத்து இவற்றில் சில மாற்றங்கள் இருக்க கூடும். இருப்பினும் நமது பட்ஜெட்டுக்குள் சிறந்த ஸ்மார்ட்போன் கிடைக்குமா என்றே எப்போதும் யோசிப்போம். பத்தாயிரம் முதல் லட்சத்துக்கும் மேல் பல்வேறு வகையான ஸ்மார்ட்போன்கள் உள்ளன. அதுவும் அடிக்கடி புதுப்புது அப்டேட்களை ஏற்படுத்தி கொண்டு வாரம் 5 முதல் 10 ஸ்மார்ட்போன்களாவது வெளியாகின்றன.

அந்த வகையில் மோட்டோ G51 ஸ்மார்ட்போன், டிசம்பர் 10ம் தேதி அன்று வெளியாக உள்ளது என அதிகாரப்பூர்வமான அறிவிப்பை மோட்டோரோலா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இதை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் மோட்டோ G51 ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளதை பதிவாகவே அந்நிறுவனம் போட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் இணைய தளத்தில் டிசம்பர் 10 ஆம் தேதி முதல் ஆர்டர் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட்போன் உலகில் கொடிகட்டி பறந்துகொண்டிருந்த மோட்டோரோலா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக ஸ்மார்ட்போன் சந்தையில் பின்தங்கிய இடத்தில் இருந்து வந்தது. தற்போது மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கி உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே சில வகையான ஸ்மார்ட்போன்களை மோட்டோ நிறுவனம் வெளியிட்டு வந்தது. அவை வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இவற்றை தொடர்ந்து மோட்டோ G51 மாடல் ஸ்மார்ட்போனும் வெளியாக உள்ளது. மோட்டோ மொபைல் விரும்பிகளுக்கு நிச்சயம் இந்த ஸ்மார்ட்போன் சிறப்பானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இவை 2 நிறங்களில் வரவுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அறிமுக விழாவில் இதிலுள்ள சில சிறப்பம்சங்களை பற்றியும் வெளியாகி உள்ளன. அந்த வகையில் இந்த மோட்டோ G51 மாடல் 5ஜி வசதியுடன் வரவுள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறையாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் SoC சிப்செட்டுடன் வரவுள்ள ஸ்மார்ட்போன் இந்த மோட்டோ G51 தான் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே ஐரோப்பாவில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் விலை 19,999 ரூபாய் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. 8GB RAM வசதி, 50 MP பிரைமரி கேமிரா மற்றும் 8MP ஆல்ட்ரா ஒயிடு கேமிரா, 2 MP மைக்ரோ ஷூட்டருடன் இந்த மோட்டோ G51 வரவுள்ளது.

இவற்றுடன் செல்பி கேமிரா 13 MP வசதி கொண்டதாக வரலாம். இந்த மாடலில் 128 GB ஸ்டோரேஜ் வசதி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறந்த பேட்டரி பேக் அப்பிற்கு 5000 mAh பேட்டரி தரப்பட உள்ளது. மேலும் 10W சார்ஜிங் சப்போர்ட் கொண்டதாக இது இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Published by:Sankaravadivoo G
First published:

Tags: Motorola, Smartphone