Home /News /technology /

மீண்டும் மார்க்கெட்டை பிடிக்க புதிய அம்சங்கள் உடன் களமிறங்கும் Moto G32 - விலை மற்றும் இதர விவரங்கள்.!

மீண்டும் மார்க்கெட்டை பிடிக்க புதிய அம்சங்கள் உடன் களமிறங்கும் Moto G32 - விலை மற்றும் இதர விவரங்கள்.!

Moto G32

Moto G32

Motorola Moto G32 | தற்போது பட்ஜெட் விலையில் மோட்டோ ஜி32 என பெயரிடப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகமாகி உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
முன்பெல்லாம் மோட்டோரோலா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் என்றாலே அதற்கென்று தனி சிறப்பு இருந்தது. குறிப்பாக அதன் தோற்றம், அமைப்புகள், சிறப்பம்சங்கள் ஆகியவற்றின் காரணமாக பெரும்பாலும் மோட்டோ ஸ்மார்ட்போன்களை மக்கள் விரும்பி வாங்கி வந்தனர். அதன் பிறகு சில காரணங்களால் இதன் மார்க்கெட் மதிப்பு குறைந்து வந்தது. இந்நிலையில், 'நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ' என்பது போல மீண்டும் மார்க்கெட்டை பிடிக்க, பலவித மாற்றங்களை செய்து கொண்டு மோட்டோ ஸ்மார்ட்போன்கள் வெளியாக தொடங்கின. தற்போது ஓரளவு மார்க்கெட்டில் முன்னிலை பெற்று வருகிறது.

அந்த வகையில் தற்போது பட்ஜெட் விலையில் ஒரு ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மோட்டோ ஜி32 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் சமீபத்தில் அறிமுகமாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்நாப்டிராகன் சிப்செட்டை பெற்று வருகிறது. இதில் மூன்று பின்புற கேமரா, 5,000mAh பேட்டரி மற்றும் பல சிறப்பு அம்சங்கள் தரப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கிறது. இது இரு வேறு வண்ணங்களில் வருகிறது. இதன் விலை, பிற அம்சங்கள் போன்றவற்றை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

மோட்டோ ஜி32

மோட்டோ ஜி32 ஸ்மார்ட்போனானது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் வருகிறது. இதன் விலையானது ரூ.12,999 என அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 16 முதல் விற்பனைக்கு வரும் என்றும், இதை பிளிப்கார்ட் தளத்தின் வழியாக ஆன்லைனில் வாங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது சாடின் சில்வர் மற்றும் மினரல் கிரே ஆகிய இரண்டு வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



சிறப்பம்சங்கள்

இந்த மோட்டோ ஜி32 ஆனது 6.5 இன்ச் முழு எச்டி சேர்ந்த ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவை பெறுகிறது. மேலும் இதில் 90 ஹெர்ட்ஸ் ரெபிரஷ் ரேட் தரப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை விரிவாக்கம் செய்து கொள்ளலாம். மோட்டோ ஜி32 ஆனது 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான வசதியுடன் வருகிறது. இதில் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 வெர்ஷனும் தரப்பட்டுள்ளது. மேலும், இது IP52 தூசு மற்றும் நீர் எதிர்ப்பு தன்மையை பெற்றுள்ளது.

Also Read : ஃபேஸ்புக்கில் இனி இந்த வசதி கிடையாதாம்..! மெட்டா அதிரடி முடிவு

இதன் கேமிராவை பொறுத்தவரை டிரிபிள் ரியர் கேமராவுடன் வருகிறது, இதில் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமிரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ், 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமிரா மற்றும் 2 மெகா பிக்சல் மேக்ரோ கேமிரா ஆகிய வசதியுடன் வருகிறது. இவற்றுடன் 4ஜி LTE, வை-பை, ப்ளூடூத் v5.2, டூயல் சிம் இணைப்பு, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் USB டைப்-சி போர்ட் ஆகியவையும் உள்ளது. உங்களின் பட்ஜெட் விலையில் நல்ல ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமென்றால் இந்த மோட்டோ ஜி32 ஒரு சிறந்த தேர்வாகும்.
Published by:Selvi M
First published:

Tags: Motorola, Smartphone, Technology

அடுத்த செய்தி