ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

ரூ.10,000 பட்ஜெட்டில் 50MP கேமராவுடன் கிடைக்கும் Moto G22 மொபைல்...

ரூ.10,000 பட்ஜெட்டில் 50MP கேமராவுடன் கிடைக்கும் Moto G22 மொபைல்...

moto g22

moto g22

Moto G22 | நீர்-எதிர்ப்பு கட்டமைப்பைக் கொண்டுள்ள இந்த மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போன் ஆனது ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே வடிவமைப்பை பெறும் சில பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இந்தியாவில், மோட்டோரோலா நிறுவனம் தனது ஜி-ஸ்மார்ட்போன் சீரிஸின் கீழ் மோட்டோ ஜி22 என்கிற புதிய பட்ஜெட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. 10 ஆயிரம் ரூபாய்  பட்ஜெட்டில் அறிமுகமாகி உள்ள இந்த லேட்டஸ்ட் மோட்டோ ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி குவாட் ரியர் கேமரா செட்டப், 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 90 ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்ப்ளே போன்ற சில விலையை மீறிய அம்சங்களை பேக் செய்கிறது.

மோட்டோரோலா நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் மாடல், இதே விலைப்பிரிவின் கீழ் வாங்க கிடைக்கும் ரியல்மி மற்றும் சியோமி நிறுவனத்தின் மாடல்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்த லேட்டஸ்ட் மோட்டோ ஸ்மார்ட்போன் மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் இன்டர்னல் ஸ்டோரேஜை விரிவாக்கும் ஆதரவை வழங்கினாலும், இது சிங்கிள் ஸ்டோரேஜின் கீழ் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இந்தியாவில் மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனின் சிங்கிள் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது இந்தியாவில் ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கும். இது காஸ்மிக் பிளாக், ஐஸ்பெர்க் ப்ளூ மற்றும் மிண்ட் கிரீன் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களின் கீழ் கிடைக்கிறது.

மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள் :

மோட்டோ ஜி22 ஆனது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டி+ ரெசல்யூஷனை (1600×720 பிக்சல்ஸ்) கொண்ட 6.5-இன்ச் அளவிலான எல்சிடி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. மேலும் இது மீடியாடெக் ஹீலியோ ஜி37 எஸ்ஓசி உடனாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை பேக் செய்கிறது. முன்னரே குறிப்பிட்டபடி, மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் இதன் இன்டெர்னல் மெமரியை 1டிபி வரை விரிவுபடுத்தலாம்.

Also Read : விலை உயர்ந்த ஐபோனை குறைந்த விலையில் வாங்குவது எப்படி.?

நீர்-எதிர்ப்பு கட்டமைப்பைக் கொண்டுள்ள இந்த மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போன் ஆனது ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே வடிவமைப்பை பெறும் சில பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேமரா அமைப்பை பொறுத்தவரை, 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் + 2-மெகாபிக்சல் மேக்ரோ கேமரா + 2-மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவைகளை உள்ளடக்கிய குவாட் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது.

கேமரா அம்சங்களை பொறுத்தவரை, போர்ட்ரெய்ட், பனோரமா, நைட் விஷன், ப்ரோ மோட், அல்ட்ரா-வைட் மற்றும் மேக்ரோ விஷன் போன்ற மோட்கள் அணுக கிடைக்கும். மேலும் இதன் ரியர் கேமரா ஃபுல்-எச்டி வீடியோக்களை 30ஃஎப்பிஎஸ் வேகத்தில் பதிவு செய்யும்.

மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போனின் மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது வைஃபை 5, சார்ஜ் செய்வதற்கான டைப்-சி போர்ட், கூகுள் அசிஸ்டண்ட் ஆதரவு, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மற்றும் ப்ளூடூத் வி5 ஆகியவைகளை கூறலாம்.

Also Read : One Plus 43 Y1S ப்ரோ ஸ்மார்ட் டிவியின் சிறப்பம்சங்கள்..

மேலும் மோட்டோ ஜி22 ஆனது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் கொண்டு இயங்குகிறது, நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட்போன் மூன்று ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்பேட்களை பெறும். முன்னரே குறிப்பிட்டபடி, மோட்டோ ஜி22 ஸ்மார்ட்போன் ஆனது 5,000எம்ஏஏச் பேட்டரியை கொண்டுள்ளது.

Published by:Selvi M
First published:

Tags: Motorola, Technology