ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

பிளிப்கார்ட்டில் 'மோட்டோ G' 5G ஸ்மார்ட்போன் விற்பனை தொடங்கியது.. விவரங்கள் இதோ

பிளிப்கார்ட்டில் 'மோட்டோ G' 5G ஸ்மார்ட்போன் விற்பனை தொடங்கியது.. விவரங்கள் இதோ

மோட்டோ G 5G

மோட்டோ G 5G

மோட்டோரோலாவின் புதிய மலிவு 5G ஸ்மார்ட்போன், மோட்டோ G 5G இந்தியாவில் பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பெரிய டிஸ்பிளே, சக்திவாய்ந்த பேட்டரி, ட்ரிபிள் கேமரா மற்றும் பிற ஈர்க்கக்கூடிய அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வந்துள்ளது மோட்டோ G 5G ஸ்மார்ட்போன். குறிப்பாக எதிர்காலத்தை மனதிற்கொண்டு இதில் ஸ்னாப்டிராகன் 750G என்கிற புதிய ப்ராசஸரை இந்திய சந்தைக்குள் கொண்டு வந்துள்ளது. ஓரிரு Xiaomi ஸ்மார்ட்போன்களும் இதே சிப்செட்டைக் கொண்டுள்ளன. எனினும் அவை இன்னும் இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தப்படவில்லை.

மோட்டோரோலாவின் புதிய மலிவு 5G ஸ்மார்ட்போனான மோட்டோ G 5G இந்தியாவில் பிளிப்கார்ட் தளத்தில் கிடைக்கிறது. மோட்டோரோலா ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐரோப்பியச் சந்தையில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த மாதம் இந்தியாவில் ஒற்றை சேமிப்பு விருப்பத்தில் (single storage option) அறிமுகமானது. மோட்டோ G 5G-யின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, டிரிபிள் ரியர் கேமராக்கள் மற்றும் 5,000 mAh பேட்டரி ஆகியவை அடங்கும்.

இது வால்கானிக் க்ரே மற்றும் பிராஸ்டேட் சில்வர் (Volcanic Grey and Frosted Silver) வண்ண விருப்பங்களில் இப்போது இந்தியாவில் கிடைக்கிறது. விலையைப் பொருத்தவரை, மோட்டோரோலா இந்தியாவில் மோட்டோ G 5G ஸ்மார்ட்போனின் சிங்கிள் 6GB வேரியண்டை ரூ. 20,999-க்கு அறிமுகப்படுத்தியுள்ளது. பிளிப்கார்ட்டில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை நேற்று நண்பகலில் தொடங்கியது. கூடுதலாக, பிளிப்கார்ட் நிறுவனம் ரூ.2,334-க்கு நோ காஸ்ட் EMI விருப்பம் மற்றும் ரூ. 15,150 மதிப்புள்ள பரிவர்த்தனை சலுகை போன்ற விற்பனை ஒப்பந்தங்களையும் வழங்குகிறது.

Also read: India Mobile Congress 2020-இல் டிஜிட்டல் மாற்றத்துக்கான நான்கு ஐடியாக்களை முன்வைத்தார் ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி..

HDFC கிரெடிட் கார்டு உள்ள வாடிக்கையாளர்கள் வழக்கமான பரிவர்த்தனை மற்றும் EMI பரிவர்த்தனையின்போது கூடுதலாக ரூ.1,000 தள்ளுபடியைப் பெற முடியும். பிற சலுகைகளில் பிளிப்கார்ட் Axis வங்கி கிரெடிட் அட்டைகளுடன் 5 சதவீத கேஷ்பேக்கும் கிடைக்கிறது. விவரக் குறிப்புகளைப் பொறுத்தவரை, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மோட்டோ G 5G, 6.7 அங்குல முழு எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) LTPS டிஸ்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு 10ல் கிடைக்கிறது. மோட்டோரோலா போன் ஒரு ப்ளோட்வேர் இல்லாத, தூய்மையான மற்றும் விளம்பரமில்லாத நியர்-ஸ்டாக் Android அனுபவத்தை (bloatware-free, ad-free, and pure, near-stock Android experience) வழங்குகிறது. ஹூட்டின் கீழ், இது 6GB ரேம் மற்றும் 128GB உள் சேமிப்பகத்துடன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750G SoC மைக்ரோ SD கார்டு ஸ்லாட் வழியாக விரிவாக்க முடியும்.

போனின் பின்புறம் மூன்று கேமராக்கள் மேல் இடது மூலையில் உள்ளது. அதில் LED ஃபிளாஷும் உள்ளது. இதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா உள்ளது. மோட்டோ G 5G 16 மெகாபிக்சல் முன் கேமராவை செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக கொண்டுள்ளது.

அதன் கேமரா பயன்பாடு ஆட்டோ-ஸ்மைல் கேப்ச்சர், ஸ்மார்ட் காம்போசிஷன், ஷாட் ஆப்டிமைசேஷன், நைட் விஷன், ஹை-ரெஸ் ஜூம், HDR, AR ஸ்டிக்கர்கள், மேனுவல் பயன்முறை, போர்ட்ரைட் மோட்டையும் ஆதரிக்கிறது. ஸ்மார்ட்போனில் உள்ள மற்ற அம்சங்கள் 5G, NFC, புளூடூத் 5.1, வைஃபை 802.11 AC மற்றும் GPS ஆகியவை அடங்கும். மோட்டோ G 5G USB டைப்-சி போர்ட் வழியாக 20W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் 5,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. போனின் பின்புறத்தில் ஃபிங்கர்-ப்ரின்ட் சென்சார் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Rizwan
First published:

Tags: Flipkart, Motorola