மோட்டோ இ5 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்

news18
Updated: July 12, 2018, 10:56 AM IST
மோட்டோ இ5 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்
மோட்டோ இ5 மற்றும் மோட்டோ இ5 பிளஸ்
news18
Updated: July 12, 2018, 10:56 AM IST
ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான மோட்டோரோலா புதிய இ5 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

மோட்டோரோலா நிறுவனத்தின் வளர்ச்சியில் ‘இ’ சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. அதுமட்டுமல்லாமல் விற்பனையில் இந்த வகை ஸ்மார்ட்போன்கள் சாதனை படைத்தன. அந்தவகையில் புதிய இ5 சீரிஸ் வகை ஸ்மார்ட்போன்களை மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

மோட்டோ இ5 ஸ்மார்ட்போன் 5.7 இன்ச் தொடுதிரை வசதி கொண்டது. 2ஜிபி ராம் மற்றும் 16ஜிபி நினைவக திறனை கொண்டிருக்கிறது. குவால்காம் ஸ்நாப்டிராகன் 425 பிராசசர் இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. 13 மெகாபிக்சல் பின்பக்க கேமராவும் 5 மெகாபிக்சல் பின்பக்க கேமராவும் இந்த ஸ்மார்போனில் உள்ளது.  4000 எம்ஏஹெச் பேட்டரி தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறது. மோட்டோ இ5 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999 மட்டுமே.

மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போன் 6 இன்ச் தொடுதிரை வசதி கொண்டிருக்கிறது. 3ஜிபி ராம் வசதி மற்றும் குவால்காம் ஸ்நாப்டிராகன் 430 பிராசசர் பொருத்தப்பட்டிருக்கிறது. மோட்டோ இ5 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,999 மட்டுமே.
First published: July 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...