ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

அக்டோபர் 17 முதல் விற்பனைக்கு வரும் புதிய பட்ஜெட் ஸ்மார்ட் ஃபோன் Moto E40 - சிறப்பம்சங்கள்!

அக்டோபர் 17 முதல் விற்பனைக்கு வரும் புதிய பட்ஜெட் ஸ்மார்ட் ஃபோன் Moto E40 - சிறப்பம்சங்கள்!

மோட்டோ இ 40

மோட்டோ இ 40

f/2.4 லென்ஸ் கொண்ட 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் ஆகியவற்றை இந்த டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டு உள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

உலக புகழ்பெற்ற மோட்டோரோலா நிறுவனம் தனது பட்ஜெட் ஸ்மார்ட் ஃபோனான Moto E40-ஐ சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த வாரம் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த Moto E40 ஸ்மார்ட் ஃபோன் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, டிரிபிள் ரியர் கேமரா செட்டப் மற்றும் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. 2 வெவ்வேறு கலர்களில் (கார்பன் கிரே மற்றும் பிங்க் க்ளே) வரும் இந்த Moto E40 டிவைஸ் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை வழங்குகிறது.

இந்தியாவில் Moto E40-ன் 4GB ரேம் + 64GB ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.9,499 என்று நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த புதிய ஸ்மார்ட் போன் வரும் அக்டோபர் 17-ம் தேதி முதல் பிளிப்கார்ட் மூலம் விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த வாரம் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Moto E40-ன் இதே 4GB ரேம் + 64GB வேரியன்ட்டின் விலை 149 யூரோ (தோராயமாக ரூ. 13,000) ஆகும். புதிய Moto E40 டிவைஸானது Realme C21Y, Samsung Galaxy M12 மற்றும் Infinix Hot 11 ஆகிய மொபைல்களுடன் போட்டியிடும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

முக்கிய சிறப்பம்சங்கள்:

மோட்டோரோலாவின் புதிய Moto E40 ஸ்மார்ட் ஃபோன் 6.5 இன்ச் HD+ LCD IPS டிஸ்ப்ளே மற்றும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷ் ரேட்டுடன் வருகிறது. இந்த டிவைஸ் ஆக்டாகோர் யுனிசாக் டி 700 (octa-core Unisoc T700) ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த போனில் இருக்கும் 5,000mAh பேட்டரியை ஒருமுறை முழு சார்ஜ் செய்தால், அது சுமார் 40 மணி நேரங்கள் வரை நீடிக்கும் என்று மோட்டோரோலா கூறி இருக்கிறது. ஆப்டிக்ஸை பொறுத்த வரை நாம் மேலே சொன்னது போல Moto E40 டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. இந்த செட்டப்பில் இருக்கும் 48 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டர் f/1.79 லென்ஸுடன் இரவு நேரத்தில் எடுக்கப்படும் புகைப்படங்களை மேம்படுத்த உதவும் குவாட் பிக்சல் டெக்னலாஜியுடன் (Quad Pixel technology) பொருத்தப்பட்டுள்ளது.

இது தவிர f/2.4 லென்ஸ் கொண்ட 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் ஆகியவற்றை இந்த டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டு உள்ளது. டூயல் நானோ சிம் ஸ்லாட்டுகளை கொண்ட Moto E40 டிவைஸ் ஆண்ட்ராய்டு 11-ல் இயங்குகிறது. தவிர இதிலிருக்கும் ரியர் கேமராக்கள் போர்ட்ரேட் மோட், பனோரமா, ஃபேஸ் பியூட்டி, HDR நைட் விஷன், மேக்ரோ விஷன் மற்றும் ப்ரோ மோட் உள்ளிட்ட அம்சங்களை ஆதரிக்கின்றன.

Also read... எக்ஸ்டெண்டட் ரேம் & 5000mAh பேட்டரியுடன் அறிமுகமான புதிய Vivo Y20T - விலை மற்றும் சிறப்பம்சங்கள்!

தவிர செல்ஃபி மற்றும் குரூப் சேட்களுக்காக முன்பக்கத்தில் மேலே f/2.0 லென்ஸுடன் கூடிய 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா சென்சாரை பெற்றுள்ளது. Moto E40. இந்த புதிய மொபைல் பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் 1TB வரை ஸ்டோரேஜை விரிவாக்கம் செய்து கொள்ள யூஸர்களை அனுமதிக்கிறது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் 4G LTE, வைஃபை 802.11 a/b/g, ப்ளூடூத் v5.0, USB டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல அம்சங்கள் காணப்படுகிறது.

ஆக்ஸிலரோமீட்டர், ஆம்பியன்ட் லைட் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் உள்ளிட்டவையும் இருக்கிறது. ஃபோனின் பின்புறத்தில் ரியர் - மவுண்ட்டட் ஃபிங்கர் பிரின்ட் சென்ஸார் கொடுக்கப்பட்டு உள்ளது. இதிலிருக்கும் 5,000 mAh பேட்டரி 10W சார்ஜிங்கை ஆதரிக்கிறது. தவிர இந்த போன் 165.1x75.6x9.1 மிமீ (உயரம் x அகலம் x தடிமன்) மற்றும் 198 கிராம் எடை கொண்டது.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Motorola