இறந்து போன மகளை மீண்டும் கண்டு உருகிய தாய்: மெய்நிகர் தொழில்நுட்பத்தால் சாத்தியமான அதிசயம்

இறந்து போன மகளை மீண்டும் கண்டு உருகிய தாய்: மெய்நிகர் தொழில்நுட்பத்தால் சாத்தியமான அதிசயம்
  • News18
  • Last Updated: February 16, 2020, 4:04 PM IST
  • Share this:
இறந்து போன மகளை மீண்டும் கண்டு உருகிய தாய், மரமாக மாறி அமேசான் காட்டின் அனுபவத்தைப் பெற்ற நபர் என விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தின் இன்னொரு பரிமாணம் அதிசயிக்க வைக்கிறது.

திரையில் தோன்றும் காட்சியை பார்த்து ரசித்த காலம் மாறி, திரையில் தோன்றும் ஒரு இடத்தில் நாமே இருப்பது, அங்குள்ள சூழலை அனுபவிப்பது, விரும்பியவர்களுடன் உரையாடுவது போன்ற புதுமைகளை அறிவியல் சாத்தியமாக்கி இருக்கிறது. வர்ச்சுவல் ரியாலிட்டி எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்பத்தின் மூலம் இந்த அதிசயங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

மூன்று ஆண்டுகளுக்கு முன் இறந்து போன மகள் மீண்டும் வந்தால் அந்த தாயின் மனநிலை எப்படி இருக்கும்?


மூன்று ஆண்டுகளுக்கு முன் இரத்தப் புற்றுநோயால் உயிரிழந்து போனாள் சிறுமி நயோன். தன் மகளை மீண்டும் சந்திக்க வேண்டும் என்கிற தாயின் விருப்பத்தை கொரியத் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று ஏற்றுக் கொண்டது. வர்ச்சுசல் ரியாலிட்டி தொழில்நுட்பம் மூலம் எட்டு மாதங்கள் உழைத்து சிறுமியை கம்ப்யூட்டரில் உருவாக்கினர் வல்லுநர்கள். அதன் பலனாக வர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்டை அணிந்து கொண்ட ஜான் ஜி சங்குடன் நேரில் வந்து உரையாடினாள் சிறுமி நயோன்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக இறந்து போன சிறுமி உயிருடன் வந்தது போல, ட்ரீ என்னும் ஆவணப் படத்திற்காக பார்வையாளர்களை அமேசான் காட்டில் இருக்கும் மரமாகவே மாற வைத்திருக்கிறது படக்குழு. வர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்டை அணிந்து கொண்டதும் விதையாக இருந்து மரமாக வளர்வது வரையான காட்டின் சூழலை நம்மால் அனுபவித்து உணர முடியும். காற்று வீசுவது, பறவை வந்து மரத்தில் மோதிவிட்டுச் செல்வது போன்ற நிகழ்வுகளை பார்வையாளர் தனக்கே நேருவது போல தத்ரூபமாக உணர முடிகிறது. காட்டுத்தீ மரத்தைப் பற்றும்போது கருகும் வாசனையையும், தீயின் வெப்பத்தையும் கூட பார்வையாளர் உணர முடியும் என்பது ஆச்சரியம்.

தொழில்நுட்பத்தின் மூலம் சிறுமியை உருவாக்குவது, காட்டுத்தீயை உணரவைப்பது போன்ற இத்தகைய நிகழ்வுகள் ஆச்சரியப்பட வைத்தாலும் உளவியல் ரீதியாக ஆரோக்கியமானதா என்ற விவாதங்களையும் தொடங்கி வைத்திருக்கின்றன.Also see:
First published: February 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading