கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, இந்நிறுவன வருவாய் அழைப்பின் போது மூன்று பில்லியனுக்கும் கூடுதலான மாதாந்திர செயலிலுள்ள சாதனங்கள் தற்போது ஆண்ட்ராய்டு இயக்க முறையில் இயங்குகின்றன எனக் கூறினார்.
மேலும் அவர் கடந்த ஆண்டில் ஒரு பில்லியன் ஆண்ட்ராய்டு மொபைல்களை யூசர்கள் ஆக்டிவேட் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்."உலகளவில் அதிகமாகச் செயல்படும் மூன்று பில்லியனுக்கும் மாதாந்திர செயலிலுள்ள சாதனங்களுடன் ஒப்பிடும்போது ஆண்ட்ராய்டு உலகிலேயே மிகவும் பிரபலமான ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இருக்கிறது என்பதில் நான் பெருமைப்படுகிறேன் என்று தெரிவித்திருந்தார். கடந்த ஆண்டில் மட்டும், ஒரு பில்லியன் வாடிக்கையாளர்கள் இந்த ஆண்ட்ராய்டு மொபைல்களை இயக்கியுள்ளனர்" என்றும் அவர் செவ்வாயன்று நடந்த நிறுவனத்தின் வருவாய் அழைப்பின் போது கூறினார்.
ஆண்ட்ராய்டு மொபைல்கள் நம் நாட்டில் தற்போது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆண்ட்ராய்டு என்பது நாம் பயன்படுத்தும் மொபைலில் அனைத்து செயல்முறைகளையும் ஒரு தொடுதல் மூலமாகக் கையாள்வதற்கு உருவாக்கப்பட்ட ஒரு இயங்குதளமாகும். இது ஆண்ட்ராய்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. பின் இந்நிறுவனத்தைக் கூகுள் வாங்கியுள்ளது எனவும் தெரியவருகிறது.
Also Read:உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி?
ஆல்பாபெட் மற்றும் கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, நிறுவனம் இப்போது கூகுள் பிக்சல் 6ஏ மற்றும் பிக்சல் பட்ஸ் ப்ரோ இவற்றின் முன்கூட்டிய உத்தரவுகளை எடுத்து வருவதாகவும், மேலும் இதுவரை நல்ல மற்றும் நேர்மறையான கருத்துக்களைப் பார்ப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் கூறினார்.
கூகுள் லென்ஸ் பற்றி அவர் கூறுகையில், மக்கள் ஒரு மாதத்திற்கு சுமார் 8 பில்லியனுக்கும் அதிகமான முறை இந்த காட்சித் தேடல் சேவையைப் பயன்படுத்துகின்றனர் என்று தெரிவித்தார். ஒரே வேளையில் மக்கள், சில வார்த்தைகள் மற்றும் படங்களைப் பயன்படுத்தி தங்களுக்குத் தேவையானவற்றைக் கண்டறிவதற்கு உதவக்கூடிய மல்டி-சர்ச் (Multi search) என்ற புதிய அம்சத்தைப் பற்றியும் அவர் கூறினார்.
Also Read:உலகின் குறைந்த விலையில் மொபைல் டேட்டா வழங்கும் நாடுகளில் இந்தியா 5 வது இடம்
நடப்பு ஆண்டின் இறுதியில், மக்கள் தங்களுக்கு அருகாமையிலுள்ள உள்ளூர் முடிவுகளைக் கண்டறியப் பல தேடல்கள் ஆப்ஷன்கள் உதவும் என்றும் பிச்சை குறிப்பிட்டார். “மொழிபெயர்ப்பிற்காக புதிய ஒரு மொழியை அணுகும் வகையில் கூகுள் மொழிபெயர்ப்பில் 300 மில்லியன் மக்களால் பேசப்படும் மொழிகளுடன் மேலும் 24 புதிய மொழிகளைச் சேர்த்துள்ளோம் எனவும் வரைபடங்களில் புதிய அதிவேகமான காட்சியானது கணினி பார்வை, AI மற்றும் பில்லியன் கணக்கான படங்களை உபயோகப்படுத்தி உலகெங்கிலும் உள்ள இடங்களின் நம்பகத்தன்மையை உருவாக்குவதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில்,தற்போது யூடியூப் மற்றும் ஷார்ட்ஸ் ஒவ்வொரு மாதத்தில் 1.5 பில்லியனுக்கும் அதிகமான யூசர்களால் பார்க்கப்படுவதாகவும், ஒரு நாளைக்கு 30 பில்லியனுக்கும் அதிகமானவர்கள் இதைக் காண்பதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், காணொளி டிரெய்லர்கள் உட்பட யூடியூப் தொலைக்காட்சியுடன் சேர்த்து 5 மில்லியன் சந்தாதாரர்களைத் தாண்டியுள்ளதாகவும் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Android, Google, Sundar pichai