மெடா நிறுவனத்துக்கு சொந்தமான உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப் நிறுவனம் அக்டோபர் மாதத்துக்கான மாதாந்திர அறிக்கையை வெளியிட்டது. அதன் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மட்டுமே 23 லட்சத்துக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதைப் பற்றிய முழு விவரங்கள் இங்கே பார்க்கலாம்.
50 லட்சத்துக்கும் மேற்பட்ட யூசர்களைக் கொண்ட டிஜிட்டல் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஒவ்வொரு மாதமும் இணக்க அறிக்கையை வெளியிட வேண்டும் என்பது தொழில்நுட்ப விதிகள் 2021 இன் கீழ் கட்டாயமாக்கப்பட்டது. இந்த விதியின் அடிப்படையில் வாட்ஸ்அப் நிறுவனம், உரிய வழிமுறைகளை பின்பற்றி எத்தனை கணக்குகள் முடக்கப்பட்டன உள்ளிட்ட முழு விவரங்களையும் வெளியிட்டு இருக்கிறது.
அக்டோபர் 1 முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை மொத்தமாக 23,24,000 வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டன. இதில் குறிப்பாக 8.11 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் யூசர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் உடனுக்குடன் தடை செய்யப்பட்டன என்று அறிக்கையில் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
யூசர்கள் குறைதீர்ப்பு சேனல், நேரடியாக புகார் அளிக்கும் அம்சம், மின்னஞ்சல் அனுப்பும் அம்சம், வாட்ஸ்அப் தளத்தில் ஆபத்தை விளைவிக்கும்படியான நடத்தை, செய்திகள், ஸ்கேம், ஸ்பாம் உள்ளிட்ட பல பிரிவுகளின் அடிப்படையில் யூசர்கள் அளித்த புகார்களின் பேரில் வாட்ஸ்அப் நடவடிக்கை எடுத்துள்ளது. யூசர்களை பாதிக்கும் படியான சம்பவம் நடந்த பிறகு, அதற்கான நடவடிக்கை எடுப்பதை விட அதை தடுப்பது மீது கவனம் செலுத்தி வருகிறோம் என்று வாட்ஸ்அப் அறிக்கையில் வலியுறுத்தி இருந்தது.
கடந்த மாதங்களுடன் ஒப்பிடும் பொழுது, அக்டோபர் மாதம் குறைவான எண்ணிக்கையில்தான் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. 2022, செப்டம்பர் மாதம் வெளியான அறிக்கையின்படி 26 லட்சத்துக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டன. அதேபோல அதற்கு முந்தைய மாதங்களான ஆகஸ்ட் மற்றும் ஜூலை மாதங்களில் இந்த மாதம் முடக்கப்பட்டது போன்ற 23,00,000 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்று முந்தைய அறிக்கைகள் பதிவு செய்துள்ளன.
Also Read : வாட்ஸ்அப் டெஸ்க்டாப் யூஸர்களுக்கு ஹேப்பி நியூஸ் - விரைவில் வருகிறது புதிய அப்டேட்.!
ஆனால் செப்டம்பர் மாதத்தை விட அக்டோபர் மாதத்தில் பதிவான கிரீவன்ஸ் கோரிக்கைகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது. அக்டோபர் மாதத்தில் 701 கிரீவன்ஸ் புகார்கள் வந்தன என்றும், உடனடியாக 34 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. செப்டம்பர் மாதத்தில் 666 கிரீவன்ஸ் புகார்கள் இந்தியாவில் பதிவாகி இருக்கின்றன என்றும், உடனடியாக 23 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read : வாட்ஸ்அப்பில் இப்படி எல்லாம் கூட ட்ரிக்ஸ் இருக்கா..! இது தெரியாமா போச்சே
யூசர்கள் ஒரு வாட்ஸ்அப் கணக்கின் மீது புகார் அளித்தால், அதை நிறுவனம் முழுமையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும். அவ்வாறு ஒரு சில கணக்குகள் தடை செய்யப்பட்டு இருக்கிறது. தடை செய்யப்பட்ட கணக்குகளில் 550 கணக்குகள் தடையை நீக்க கூறுவதற்காக கோரிக்கையை மேற்கொண்டுள்ளன என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.