Home /News /technology /

2000க்கும் மேற்பட்ட கடன் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் - இது தான் காரணம்.!

2000க்கும் மேற்பட்ட கடன் செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் - இது தான் காரணம்.!

Google Play Store

Google Play Store

Loan Apps | இந்தியாவில் ஆன்லைன் பயன்பாடு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற திட்டத்தை கூகுள் மேற்கொண்டு வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
இணைய சேவை மற்றும் தொழில்நுட்ப சேவைகள் வழங்கி வரும் அனைத்து பெரிய நிறுவனங்களும் தொடர்ச்சியாக பாதுகாப்பான இணைய பயன்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு பாதுகாப்பு வழிமுறைகளை மேம்படுத்தி வருகிறது. இணையம் வழியாக பலவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்ஸ்டன்ட் லோன் என்று, கடந்த சில மாதங்களாக கடன் வழங்கும் செயலிகள் அதிகரித்துள்ளன. இவ்வகையான செயலிகள் மீது பலவிதமான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், கூகுள் கிட்டத்தட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கடன் வழங்கும் செயலிகளை இந்தியாவில் இருக்கும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது இதை பற்றிய முழு விவரத்தை இங்கே பார்க்கலாம்.

விதி மீறல், தகாத நடவடிக்கை - குவியும் புகார்கள்

உங்கள் விவரங்களை உள்ளிட்டால் உங்கள் வருமானத்தைக்கு ஏற்ற அளவுக்கு உடனடியாக ₹1000 முதல் லட்சக்கணக்கில் கடன் வழங்கும் செயலிகள் பெருகியுள்ளன. இந்த செயலிகளின் மூலம் கடன் வழங்கும் நிறுவனம் தன்னிச்சையாக செயல்படுகின்றன. எல்லா பொது மற்றும் தனியார் வங்கிகளும் தனியார் நிதி நிறுவனங்களும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்கு கீழ் தான் இயங்கும். ஆனால் இத்தகைய கடன் வழங்கும் செயலிகள் பெரும்பாலானவை விதிமுறைகளை மீறியுள்ளன. தவறான தகவல்களை வழங்கி, பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. அதுமட்டும் இல்லாமல் கடன் வழங்கியகர்வளிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாக பலவித புகார்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.கூகுள் தரப்பிலிருந்து கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை

கூகுள் ஆசிய பசிஃபிக் பிரிவின் மூத்த நிர்வாக இயக்குனர் மற்றும் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை பிரிவின் தலைவரான சாய்க்கட் மித்ரா இதைப் பற்றி கூறுகையில், கூகுள் எந்த இடத்தில் இயங்கி வருகிறதோ, அந்த இடத்துக்கு உட்பட்ட அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றுவதற்கு தயாராக உள்ளது என்று தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் வரும் வாரங்களில், இதைப் போன்ற பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விஷயங்களில் கூடுதலாக பாலிசிகளை உருவாக்கி, தீவிரமாக பரிசோதனை செய்யப்படும் என்றும் கூறினார்.

Also Read : பாதுகாப்பை பலப்படுத்திய வாட்ஸ்அப்... இனி இதை செய்ய முடியாது.!

உலகமே டிஜிட்டல் மயமாகி வரும் இந்த நேரத்தில் டிஜிட்டல் தளங்கள் மக்களுக்கு அச்சுறுத்தக் கூடியதாக மாறி வருகிறது என்பதை மறுக்க முடியாது. இதுவரை இத்தளங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் போதவில்லை என்றும் கூடுதலாக நடவடிக்கைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதற்காக புதிய விதிமுறைகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும். மேலும், அது மட்டுமல்லாமல் யூசர்கள் பாதுகாப்பு தான் கூகுள் நிறுவனத்தின் அடிப்படை குறிக்கோளாகவும் இருந்து வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

விதிமுறைகளை உருவாக்குவதில் அரசாங்கத்துடன் வெளிப்படையான பேச்சுவார்த்தையை மேற்கொள்ள தயாராக இருக்கிறது என்று வலியுறுத்திய மித்ரா, ‘எங்கள் உலகத்தில் எல்லாமே யூசர்களின் பாதுகாப்புடன் தான் தொடங்குகிறது’ என்று தெரிவித்தார்.ஏற்கனவே இந்தியாவில் ஆன்லைன் பயன்பாடு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற திட்டத்தை கூகுள் மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் புதிய பாதுகாப்பு அம்சங்களையும் அறிமுகப்படுத்த இருக்கிறது. இதனிடையில் மக்களுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருந்து வந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கடன் செயலிகள் அனைத்துமே ஜனவரி மாதத்தில் இருந்து தொடர்ந்து நீக்கப்பட்டு வருகிறது.

Also Read : தடை செய்யப்பட்டது VLC மீடியா பிளேயர் - உலக சினிமா விரும்பிகளின் ஆஸ்தான பிளேயர்!

தற்போது இந்த இன்ஸ்டன்ட் லோன் செயலிகளின் பிரச்சனை உச்சத்தை எட்டியுள்ளதால், இதற்கு முழு கவனம் வழங்கி, தீர்வு கண்டு வருகிறது, கூகுள் நிறுவனம். இந்த கடன் செயலிகள் கொள்கை அல்லது விதிமீறல், உரிய தகவல் வழங்காமல் இருப்பது அல்லது தவறான தகவல் வழங்கியது, யூசர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அல்லது முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிளே ஸ்டோரிலிருந்து முழுவதும் நீக்கப்பட்டு வருகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Google play Store, Loan app, Technology

அடுத்த செய்தி