Home /News /technology /

16 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்..! - ஏப்ரல் மாதம் ஆண்ட்ராய்டு அறிக்கை

16 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்..! - ஏப்ரல் மாதம் ஆண்ட்ராய்டு அறிக்கை

WhatsApp

WhatsApp

WhatsApp | யூசர்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என்பதை பலமுறை வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா வலியுறுத்தியுள்ளது. அதன்படி இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி 2021 சட்டப்படி மாதாந்திர அறிக்கையை வாட்ஸ்அப் நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும்.

தகவல் தொழில்நுட்ப சட்டம் 2021ன் படி வாட்ஸ்அப்பில் எத்தனை புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன மற்றும் நிறுவனம் எத்தனை கணக்குகளை முடக்கியுள்ளன என்பதைப் பற்றிய மாதாந்திர அறிக்கையை வெளியிட வேண்டும். மெடா நிறுவனத்துக்கு சொந்தமான உலகின் முதன்மையான மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப் நிறுவனம் தனது மாதாந்திர அறிக்கையை வெளியிட்டது. அதன்படி 2022 ஆண்டு ஏப்ரல் மாதத்தில், 16.6 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்ற தகவலை அறிக்கையில் வெளியிட்டுள்ளன.

செயற்கை நுண்ணறிவு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துடன், டேட்டா ஆய்வாளர்கள் மற்றும் நிபுணர்கள் ஆகியோர் இணைந்து வாட்ஸ்அப் செயலியை அனைத்து யூசர்களுக்கும் பாதுகாப்பானதாகவும் அதிக பயனுள்ளதாகவும் இருக்கும்படி தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. யூசர்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என்பதை பலமுறை வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா வலியுறுத்தியுள்ளது. அதன்படி இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி 2021 சட்டப்படி மாதாந்திர அறிக்கையை வாட்ஸ்அப் நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும். முறைகேடான வாட்ஸ்அப் கணக்குகள் பற்றி எழுப்பப்படும் புகார்கள் பரிசீலனை செய்யப்பட்டு அந்த கணக்குகள் முடக்கப்படும்.

ஒவ்வொரு மாதமும் சில ஆயிரங்கள் முதல் லட்சக்கணக்கான இந்திய வாட்ஸ்அப் கணக்குகள் தடைசெய்யப்பட்டு வருகின்றது. மெசேஜ் செயலி தானே எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று பலரும் வாட்ஸ் ஆப் செயலியை தவறான முறையில் பயன்படுத்தி வந்தனர். அவ்வாறு செய்யக்கூடாது என்பதற்காகவே வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு விதிமுறைகளை அமல் படுத்தியது. அந்த விதிமுறைகளை மீறும் பட்சத்தில் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்படும் என்பதை சில மாதங்களுக்கு முன்பே இந்நிறுவனம் வெளியிட்டது.



2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் அறிக்கையில் கிட்டத்தட்ட லட்சக்கணக்கான புகார்களின் அடிப்படையில், அனைத்து புகார்களும் விசாரிக்கப்பட்டு, 18 லட்சத்துக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டன. அதே போல, ஏப்ரல் மாதமும் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட கணக்குகள், புகார்களின் அடிப்படையில் மற்றும் வாட்ஸ்அப் விதிமுறைகள் மீறல், முறைகேடான பயன்பாடு ஆகிய காரணங்களால் நிரந்தரமாக முடக்கப்பட்டன. மேலும், 844 கிரீவன்ஸ் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை வாட்ஸ்அப் நிறுவனத்தின் பிரதிநிதி செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.

Also Read : வாட்ஸ் அப் யூஸர்களே உஷார்... ரூ.15 லட்சம் பணம் பறிப்பு

சேவை விதிமுறைகளை மீறியதற்காக இதுவரை 60 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வாட்ஸ்அப் கணக்குகளை நிறுவனம் தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. சில மாதங்களுக்கு முன் வெளியான அறிக்கையில், உலகளவில் இதுவரை தடை செய்யப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளில் 25 சதவிகிதக் கணக்குகள் இந்தியாவைச் சேர்ந்தவை என்றும் கூறியுள்ளது. முறையான அங்கீகாரம் பெறாமல் ஒரே நேரத்தில் ஸ்பாம் செய்திகளை அனுப்பக்கூடிய கணக்குகள், சாதி, மத, இன மோதல்கள், வன்முறைச் சம்பவங்கள் ஏற்படுத்துபவையாக இருக்கும் கணக்குகள், பாலியல் ரீதியான தொல்லைகள் கொடுக்கும் கணக்குகள் ஆகியவை தடை செய்யப்படும்.

Also Read : 3 மாதங்களில் 44 லட்சம் சேனல்கள் நீக்கம்... யூடியூப் நிறுவனம் அதிரடி நடவடிக்கை

2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முதல் முதலாக இந்தியாவில் 20 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகளை மற்றும் அதன் சேவைகளைப் பயன்படுத்துவதை தடை செய்துள்ளதாக வெளியான அறிவிப்பு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதை தொடர்ந்து, ஒவ்வொரு மாதமும் இந்த அறிக்கை வெளியாகி வருகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Technology, WhatsApp

அடுத்த செய்தி