முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம் - நிறுவனம் அறிக்கை!

10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம் - நிறுவனம் அறிக்கை!

WhatsApp | சில குற்றங்களுக்காக, கைதுகள் உட்பட சட்ட நடவடிக்கைகள் எடுக்க வசதியாக யூஸரின் மெட்டா டேட்டாவை கூட நிறுவனம் காவல்துறைக்கு வழங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp | சில குற்றங்களுக்காக, கைதுகள் உட்பட சட்ட நடவடிக்கைகள் எடுக்க வசதியாக யூஸரின் மெட்டா டேட்டாவை கூட நிறுவனம் காவல்துறைக்கு வழங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp | சில குற்றங்களுக்காக, கைதுகள் உட்பட சட்ட நடவடிக்கைகள் எடுக்க வசதியாக யூஸரின் மெட்டா டேட்டாவை கூட நிறுவனம் காவல்துறைக்கு வழங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மெடா நிறுவனத்துக்கு சொந்தமான மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப் நிறுவனம் தனது மாதாந்திர அறிக்கையை வெளியிட்டது. அதன் அடிப்படையில் பிப்ரவரி மாதம் மட்டுமே 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதைப் பற்றிய முழு விவரங்கள் இங்கே பார்க்கலாம்.

ஒவ்வொரு மாதமும் சில ஆயிரங்கள் முதல் லட்சக்கணக்கான இந்திய வாட்ஸ்அப் கணக்குகள் தடைசெய்யப்பட்டு வருகின்றது. மெசேஜ் செயலி தானே எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று பலரும் வாட்ஸ் ஆப் செயலியை தவறான முறையில் பயன்படுத்தி வந்தனர். அவ்வாறு செய்யக்கூடாது என்பதற்காகவே வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு விதிமுறைகளை அமல் படுத்தியது. அந்த விதிமுறைகளை மீறும் பட்சத்தில் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்படும் என்பதை சில மாதங்களுக்கு முன்பே இந்நிறுவனம் வெளியிட்டது.

மேலும் சில குற்றங்களுக்காக, கைதுகள் உட்பட சட்ட நடவடிக்கைகள் எடுக்க வசதியாக யூஸரின் மெட்டா டேட்டாவை கூட நிறுவனம் காவல்துறைக்கு வழங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. செயற்கை நுண்ணறிவு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துடன், டேட்டா ஆய்வாளர்கள் மற்றும் நிபுணர்கள் ஆகியோர் இணைந்து வாட்ஸ்அப் செயலியை அனைத்து யூசர்களுக்கும் பாதுகாப்பானதாகவும் அதிக பயனுள்ளதாகவும் இருக்கும்படி தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

யூசர்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என்பதை பலமுறை வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா வலியுறுத்தியுள்ளது. அதன்படி இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி 2021 சட்டப்படி மாதாந்திர அறிக்கையை வாட்ஸ்அப் நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும். முறைகேடான வாட்ஸ்அப் கணக்குகள் பற்றி எழுப்பப்படும் புகார்கள் பரிசீலனை செய்யப்பட்டு அந்த கணக்குகள் முடக்கப்படும். 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் அறிக்கையில் கிட்டத்தட்ட 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புகார்களின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளது என்பதை வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் பிரதிநிதி செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.

இதே போல, 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் 20 லட்சத்திற்கும் அதிகமான அக்கவுண்ட்கள் மற்றும் அதன் சேவைகளைப் பயன்படுத்துவதை தடை செய்துள்ளதாக வெளியான அறிவிப்பு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Also Read : 'சைலன்ட்' ஆக இன்ஸ்டாகிராமில் அறிமுகமான 7 புதிய அம்சங்கள்!

எந்தவொரு யூஸரும் வாட்ஸ்அப்பின் விதிமுறைகளை மீறினால், அந்த அக்கவுண்ட்கள் தடை செய்யப்படும் என்பதை நிறுவனம் தெளிவாக கூறுகிறது. இதன் அடிப்படையில், தற்போது வரை, சேவை விதிமுறைகளை மீறியதற்காக 50 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. சில மாதங்களுக்கு முன் வெளியான அறிக்கையில், உலகளவில் இதுவரை தடை செய்யப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளில் 25 சதவிகிதக் கணக்குகள் இந்தியாவை சேர்ந்தவை என்றும் கூறியுள்ளது.

Also Read : ஆன்லைன் ஹேக்கர்கள் எந்தெந்த வழிகளில் உங்கள் பணத்தை திருடக்கூடும் - ஆர்பிஐ எச்சரிக்கை

முறையான அங்கீகாரம் பெறாமல் ஒரே நேரத்தில் பல மெசேஜ்களை அனுப்பக்கூடிய கணக்குகள், சாதி, மத, இன மோதல்கள், வன்முறைச் சம்பவங்கள் ஏற்படுத்துபவையாக இருக்கும் கணக்குகள், பாலியல் ரீத்யான தொல்லைகள் கொடுக்கும் கணக்குகள் ஆகியவை தடை செய்யப்படும்.

First published:

Tags: Technology, WhatsApp