Home /News /technology /

மூன்லைட்டிங் என்பது முறையற்றது..! - விப்ரோ மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்களின் கருத்தை ஆமோதிக்கும் IBM

மூன்லைட்டிங் என்பது முறையற்றது..! - விப்ரோ மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்களின் கருத்தை ஆமோதிக்கும் IBM

மூன்லைட்டிங் பாலிசி

மூன்லைட்டிங் பாலிசி

விப்ரோ மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்கள் மூன்லைட்டிங் பாலிசிக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள நிலையில், சமீபத்தில் IBM இந்தியாவின் மூத்த நிர்வாகி ஒருவர் இந்த பாலிசி  ஒரு நெறிமுறையற்ற நடைமுறை என்று கூறி இருக்கிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
    விப்ரோ மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்கள் மூன்லைட்டிங் பாலிசிக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள நிலையில், சமீபத்தில் IBM இந்தியாவின் மூத்த நிர்வாகி ஒருவர் இந்த பாலிசி ஒரு நெறிமுறையற்ற நடைமுறை என்று கூறி இருக்கிறார்.

    இந்த கருத்தை கூறி இருப்பவர் IBM இந்தியாவின் நிர்வாக இயக்குனர் சந்தீப் படேல். எங்கள் ஊழியர்கள் அனைவரும் அவர்கள் பணியில் சேரும் போது அவர்கள் IBM-ற்காக வேலை செய்ய போவதாகக் கூறும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்கள். எனினும் ஊழியர்கள் தங்கள் மீதமுள்ள நேரத்தில் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் (அதாவது வேறு நிறுவனத்திற்கு வேலை பார்ப்பது) என்ற போதிலும், அதை செய்வது நெறிமுறை ரீதியாக சரியானது அல்ல என்று IBM-ன் முதன்மை நிகழ்வான Think ஈவன்ட்டில் பங்கேற்று பேசிய சந்தீப் படேல் கூறினார்.

    IBM-ஐ பொறுத்தவரை வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகிய இருவரின் அடிப்படையிலும் இந்தியா ஒரு முக்கிய நிறுவனமாக இருக்கிறது. மேலும் இந்தியாவில் 140,000 பணியாளர்களை IBM கொண்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாத துவக்கத்தில் ஃபுட் டெலிவரி நிறுவனமான Swiggy, தனது ஊழியர்களுக்காக மூன்லைட்டிங் பாலிசியை அறிமுகப்படுத்தியது.

    இந்த பாலிசியின் கீழ் Swiggy ஊழியர்கள் இன்டர்னல் அப்ரூவல்ஸ் அடிப்படையில் வெளிப்புற ப்ராஜக்ட்களை எடுத்து வேலை பார்க்கலாம். இதனையடுத்து தொழில்துறையில் மூன்லைட்டிங் பாலிசி சில வாரங்களாக ஹாட்டாப்பிக்காக பேசப்பட்டு மற்றும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

    ஒரு ஊழியர் தனது கூடுதல் வருமானத்திற்காக வேறு சில வேலைகளை மேற்கொள்ள அனுமதிக்கும் மூன்லைட்டிங் பாலிசி பற்றி இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்துகின்றன.

    இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி சர்விஸ் நிறுவனமான இன்ஃபோசிஸ், சமீபத்தில் தனது ஊழியர்களுக்கு "நோ டபுள் லைவ்ஸ்" என்ற தலைப்பில் இமெயில் அனுப்பியது. அந்த மெயிலில் ஊழியர்களின் நடத்தை விதிகளின்படி மூன்லைட்டிங் பாலிசி அனுமதிக்கப்படாது என்றும் மீறினால் பணிநீக்கம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ஊழியர்கள் எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

    இதே போல விப்ரோவின் தலைவர் ரிஷாத் பிரேம்ஜி, முதன்மை நிறுவனத்திற்கு தெரியாமல் வேறு நிறுவனத்திற்கும் சேர்த்து பணியாற்றும் ஊழியர்கள் சீட்டிங் செய்பவர்கள் என்று குறிப்பிட்டார். இவரது இதே கருத்தை தான் தானும் பிரதிபலிப்பதாக சந்தீப் படேல் கூறி இருக்கிறார்.

    இந்தியாவுக்கான நிறுவனத்தின் பணியமர்த்தல் திட்டங்கள் பற்றியும் சந்தீப் பட்டேல், தொற்றின் போது ஊழியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு இடம் பெயர்வது முற்றிலுமாக தலைகீழாக மாறவில்லை. எனவே, தகவல் தொழில்நுட்ப துறை ஹைபிரிட் வேலை முறையை ஏற்று கொண்டது.

    Read More: ஜியோ நிறுவனம் ஜூலை மாதத்தில் 29.4 லட்சம் புதிய பயனர்களைப் பெற்றுள்ளது - டிராய் தகவல்!

    tier-2 மற்றும் tier-3 நகரங்களை "வளர்ந்து வரும் கிளஸ்டர்கள்" என்று குறிப்பிட்ட சந்தீப் பட்டேல், IBM நாட்டில் அதன் இருப்பை வலுப்படுத்தும் திட்டங்களை கொண்டுள்ளது என்றார். இதற்கிடையில் ஐபிஎம் அதன் செக்யூர்டு எட்ஜ் கிளவுட் சர்விஸ்களை டெலிகாம்க்கு வழங்க ஏர்டெல்-உடன் சமீபத்தில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக சமீபத்தில் அறிவித்தது குறிபிடத்தக்கது.

     
    Published by:Srilekha A
    First published:

    Tags: IBM, Infosys, Wipro

    அடுத்த செய்தி