கொரோனா தாக்கத்தால் உலக மொபைல் கண்காட்சி ரத்து

கொரோனா தாக்கத்தால் உலக மொபைல் கண்காட்சி ரத்து
  • News18
  • Last Updated: February 15, 2020, 9:45 AM IST
  • Share this:
சந்தையில் உள்ள பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களாலும், செல்போன் நிறுவனங்களாலும் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘உலக மொபைல் காங்கிரஸ் நிகழ்வு’ கொரோனா வைரஸ் எதிரொலியால் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.

33 ஆண்டுகால வரலாறு கொண்ட இந்நிகழ்வு ரத்து செய்யப்படுவது இதுவே முதல்முறை.  உலக அளவில் நடைபெறும் மிகப்பெரிய செல்போன் கண்காட்சியாக அறியப்படும் இந்த நிகழ்வு ரத்தாகியுள்ளது, தொலைத்தொடர்பு துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களும், முதலீட்டாளர்களும் வழக்கமாகப் பங்குபெறும் இந்த நிகழ்வு தற்போது ரத்தாகியுள்ளது செல்போன் நிறுவனங்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.


வழக்கமாக இந்த ’உலக மொபைல் காங்கிரஸ் நிகழ்வு’ ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெறுவது வழக்கம். ”இந்த முறை உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் காரணமாகப் பயணங்கள் கேள்விக்குறியாகியுள்ளன. வாடிக்கையாளர்களின் வருகை, அவர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட காரணிகளும் கணக்கில் கொள்ளப்பட்டன. இதுவே இந்த முடிவுக்குக் காரணம்” என்று இந்த நிகழ்வை ஒருங்கிணைக்கக் கூடிய அமைப்பின் நிர்வாகியான ஜான் கொப்மேன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 2016 முதல் ஸ்மார்ட் ஃபோன் சந்தையில் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி ஏற்படாததால் இந்த முறை இந்த காங்கிரஸில் புதிதாக பல தொழில்நுட்பங்களையும், 5ஜி தொழில்நுட்பத்தில் புதிய உத்திகளையும் அறிமுகப்படுத்தி அதன்மூலம் சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று நிறுவனங்கள் நம்பியிருந்த நிலையில் இந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டிருப்பது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Also see:


First published: February 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்