ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

கழிவறையைவிட இங்குதான் பாக்டீரியா அதிகம் : செல்போன் பயனர்களுக்கு ‘ஷாக்’ தந்த ஆய்வு முடிவு!

கழிவறையைவிட இங்குதான் பாக்டீரியா அதிகம் : செல்போன் பயனர்களுக்கு ‘ஷாக்’ தந்த ஆய்வு முடிவு!

செல்போனில் கழிவறையை விட அதிக பாக்டீரியா இருக்கிறது

செல்போனில் கழிவறையை விட அதிக பாக்டீரியா இருக்கிறது

அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

மொபைல் போன்கள் இப்போது நம் வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாகவே மாறிவிட்டது. மனிதனின் மூன்றாம் கை என்று சொல்லும் அளவு ஆகிவிட்டது. செல்போன் இல்லாமல் உங்களால் எதுவும் செய்ய முடியாது என்று யோசிக்கும் அளவுக்கு அதற்கு அடிமையாகிவிட்டோம். ஆனால் அந்த செல்போனில் உங்கள் கழிவறையை விட அதிக பாக்டீரியா இருக்கிறது என்றால் நம்புவீர்களா?

செய்திகள் பகிர்வது  தவிர, உணவு, பொருட்களை ஆர்டர் செய்ய , படம் எடுக்க,  வழி தேட, படிக்க, படம் பார்க்க என்று எல்லாவற்றிற்கும் செல்போனைத்தான் தேடுகிறோம். இப்படி கையை விட்டு விலகாமல் கிடக்கும் போன் முழுக்க பாக்டீரியாக்களால் நிறைந்துள்ளது என்று சொன்னால் நம்பமுடியாதுதான். ஆனால் அதுதான் உண்மை என்கிறது ஒரு ஆய்வு முடிவு.

நாம் செல்லும் எல்லா இடங்களிலும் செல்போன்களை எடுத்துச் செல்கிறோம். பல சந்தர்ப்பங்களில் அவற்றை பொது இடங்களில் ஆங்காங்கே கீழே வைக்கிறோம். அப்படி பல மேசைகள் , பாக்கெட்டுகள், கைகள், பைகள் எல்லா இடங்களிலும் பாக்டீரியாக்கள் உள்ளன. அவை எல்லாமே போனின் மேற்பரப்பிற்கு பரவுவது இயற்கை.

இதையும் படிங்க : ஆப்பிள் பீட்டா யூசர்களுக்கு அடுத்த வாரம் முதல் 5ஜி சேவை அறிமுகம்!

எல்லாவற்றிற்கும் மேலாக, நம்மில் பெரும்பாலோர் வெளியில் இருந்து வீட்டிற்கு வந்த பிறகு கை, கால் மற்றும் முகத்தை கழுவுகிறோம். ஆனால் அந்த செல்போன்களை சுத்தம் செய்வதில்லை, இல்லையா? அப்போது அந்த பாக்டீரியாக்கள் அப்படியே தங்கிவிடுகிறது.

இருப்பினும், செல்போனின் மேற்பரப்பில் எவ்வளவு பாக்டீரியாக்கள் காணப்படலாம் என்பது பற்றிய புள்ளிவிவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், அதற்கு உங்கள் மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் உங்கள் மொபைலில் டாய்லெட் இருக்கையை விட 10 சதவீதம் அதிக பாக்டீரியாக்கள் இருக்கலாம் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வின்படி, இளம் வயதினரின் மொபைலில் குறைந்தது 17,000 பாக்டீரியாக்கள் உள்ளன. இது சாதாரண கழிப்பறை இருக்கையை விட 10 மடங்கு அதிகம்.

இதையும் படிங்க :  இத கேட்டீங்களா..! தண்ணீர் பாட்டில்களை மறுசுழற்சி செய்து உருவாக்கிய சோனி இயர்போன்கள்

கொரோனா காலம் முழுவதும் மக்கள் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து கை கழுவுதல் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டனர். பாக்டீரியாக்கள் கைகளில் தங்குவதைத் தடுக்க அவர்கள் அதை மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்தினர். ஆனால் தொற்றுநோய் முடிந்ததும், மக்களின் நடைமுறைகள் அப்படியே மாறிவிட்டன. அதனால் கைகளில் இருக்கும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையும் போனில் சேர்ந்துவிடுகிறது.

போனில் உள்ள பாக்டீரியாவை குறைக்க முதலில் கழிவறைக்கு போனை எடுத்து செல்வதைத் தவிர்ப்பது . நிபுணர்களின் கூற்றுப்படி, ஆல்கஹால் அடிப்படை சுத்தம் செய்யும் திரவத்தைப் பயன்படுத்தி உங்கள் தொலைபேசியை ஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும். உங்கள் தொலைபேசியில் நேரடியாக திரவத்தை தெளிப்பதைத் தவிர்க்கவும். ஏனெனில் அது அதன் டிஸ்பிளேவைக் கெடுக்கும்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Bacteria, Mobile phone