ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இந்தியர்கள் சராசரியாக ஒவ்வொரு மாதமும் பயன்படுத்தும் மொபைல் டேட்டா எவ்வளவு தெரியுமா?

இந்தியர்கள் சராசரியாக ஒவ்வொரு மாதமும் பயன்படுத்தும் மொபைல் டேட்டா எவ்வளவு தெரியுமா?

Mobile Wifi

Mobile Wifi

Mobile Date : இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு முன்பு மொபைல் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 345 மில்லியனாக இருந்த சூழலில், இப்போது அது 765 மில்லியனாக அதிகரித்துள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

ஒரு காலத்தில் ஆடம்பர பொருட்களாக அறியப்பட்ட ஃபோன்கள் இப்போது அத்தியாவசியப் பொருட்களாக மாறி விட்டன. குறிப்பாக, ஸ்மார்ட் ஃபோன்களையும், நெட் இணைப்புகளையும் பொழுதுபோக்கு அம்சங்களாகத் தான் நாம் பார்த்து வந்தோம். ஆனால், இன்றைக்கு பலரது வாழ்வாதரத்திற்கு அடிப்படை விஷயமாக ஸ்மார்ட் ஃபோன்கள் உள்ளன.

அதாவது, பலர் நேரடியாக ஃபோன்கள் மூலமாகவே பணி செய்கின்றனர் அல்லது ஸ்மார்ட் ஃபோன் துணை கொண்டு பணி செய்கின்றனர். உதாரணத்திற்கு, பெரு நகர வீதிகளில் உங்கள் கண் எதிரே இங்கும் அங்கும் உலாவிக் கொண்டிருக்கு ஆன்லைன் உணவு டெலிவரி பணியாளர்கள் மற்றும் டாக்ஸி சேவைகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஸ்மார்ட் ஃபோனும், நெட் கனெக்‌ஷனும் தான் இவர்களது வாழ்வாதாரத்திற்கு அடிப்படை விஷயங்களாக உள்ளன.

பொழுதுபோக்கு, வேலைவாய்ப்பு என்பதோடு ஸ்மார்ட் ஃபோன் பயன்பாட்டு எல்லை முடிந்து விடவில்லை. கொரோனா ஊரடங்கு காலத்தில் கல்விக்கான அடிப்படை ஆதாரமாக இவை மாறி விட்டன. பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரையிலும் பெரும்பாலும் குறிப்பிட்ட கல்வியை ஆன்லைன் மூலமாகவே படித்து முடித்து விட்டனர்.

ஸ்மார்ட் ஃபோன்கள் பயன்படுத்தும் எண்ணிக்கை

அடிப்படைத் தேவையாக ஸ்மார்ட் ஃபோன்கள் மாறி விட்ட பிறகு, அதை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்திருக்கும் அல்லவா. ஆம் உண்மைதான். இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு முன்பு மொபைல் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 345 மில்லியனாக இருந்த சூழலில், இப்போது அது 765 மில்லியனாக அதிகரித்துள்ளது. அதாவது அப்படியே இரட்டிப்பாகியுள்ளது.

உங்கள் இ-ஆதாரை டவுன்லோட் செய்ய வேண்டுமா? படிப்படியான வழிமுறை இதோ

சராசரியாக ஒவ்வொரு வாடிக்கையாளரும் மாதம் ஒன்றுக்கு 17 ஜிபி டேட்டா பயன்படுத்துவதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. ஆய்வை விட்டுத் தள்ளுவோம். தினசரி 1 ஜிபி அல்லது 1.5 ஜிபி அல்லது 2 ஜிபி டேட்டா பேக் பயன்படுத்துபவர்களில் நீங்களும் ஒருவர் தானே. அதையே 30 நாட்களுக்கு கணக்கீடு செய்து பாருங்கள், நீங்களே சராசரி அளவைக் காட்டிலும் அதிகமாக டேட்டா பயன்படுத்தும் ஒருவர் தான்.

2021 ஆம் ஆண்டின் வளர்ச்சி

இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2021ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது. இதற்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக இருக்கலாம். 4ஜி மொபைல் சேவை பயன்பாட்டின் அளவு 31 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது இந்த ஆண்டில் 40 மில்லியன் வாடிக்கையாளர்கள் 4ஜி சேவையில் இணைந்துள்ளனர்.

First published:

Tags: Mobile networks, Mobile phone, Mobile Phone Users, Smartphone