தடை செய்யப்பட்ட சீன செயலிகளை பயன்படுத்தினால்...! தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சகம் விடுத்த எச்சரிக்கை

தடை செய்யப்பட்ட சீனாவின் 59 செயலிகளை பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தடை செய்யப்பட்ட சீன செயலிகளை பயன்படுத்தினால்...! தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சகம் விடுத்த எச்சரிக்கை
டிக்-டாக்
  • Share this:
இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது என்ற காரணத்தால் டிக்டாக், யூசி ப்ரோசர் உள்ளிட்ட 59 சீன ஆப்களை தடை செய்வதாக மத்திய அரசு கடந்த ஜூன் 29-ம் தேதி அறிவித்திருந்தது.

சீன ஆப்களை தடை செய்வது தொடர்பாக மத்தியஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘சில ஆப்கள் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஸ் பயன்படுத்தும் மொபைல்போன் பயனாளர்களின் தகவல்களை தவறான முறையில் சேகரித்து இந்தியாவுக்கு வெளியே இருக்கும் சர்வர்களில் சேமித்துவைப்பதாக பலதரப்பிலிருந்தும் புகார்கள் வந்தன. சேகரிக்கப்படும் தகவல்களின் தொகுப்பு தேசத்தின் பாதுகாப்புக்கும், இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக உள்ளது.

இது இந்தியாவின் இறையான்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தாக இருப்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவை உள்ளது. தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சகம், தகவல்தொழில்நுட்பச் சட்டம் 69ஏவின் அடிப்படையில் 59 ஆப்கள் தடைசெய்யப்படுகின்றன’ என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், தற்போது தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாதுகாப்பு காரணங்கள் கருதி சீனாவின் 59 செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ள நிலையில், அவை பதிவிறக்கம் செய்யக் கிடைத்தாலோ அல்லது அவற்றை வேறு வழியில் பயன்படுத்தினாலோ, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

Also read... நடப்பாண்டு அமர்நாத் யாத்திரை ரத்து - சிறப்பு பூஜைகள் நேரலையாக ஒளிபரப்ப திட்டம்

மேலும், PlayStore, APP Store போன்றவற்றில் இந்த தடை செய்யப்பட்ட செயலிகள் நீக்கப்பட்டு இருந்தாலும், அவை மற்ற இணையதளங்கள் மூலமாக கிடைப்பதையும் தடை செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தடை செய்யப்பட்ட செயலிகள் இந்தியாவில், பயன்பாட்டில் இருந்தால், அரசாங்கத்தின் உத்தரவை மீறியதாக கருதப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
First published: July 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading