ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

மதுரை, கோவையில் 5ஜி! ஜியோ அசத்தல்!!

மதுரை, கோவையில் 5ஜி! ஜியோ அசத்தல்!!

ஜியோ 5ஜி

ஜியோ 5ஜி

Jio 5G : தமிழ்நாட்டில் சென்னையைத் தொடர்ந்து கோவை மற்றும் மதுரையில் ஜியோவில் 5ஜி சேவை தொடங்கப்படவுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் சென்னையைத் தொடர்ந்து கோவை மற்றும் மதுரையில் ஜியோவில் 5ஜி சேவை தொடங்கப்படவுள்ளது. அமைச்சர் மனோ தங்கராஜ் வரும் புதன்கிழமை (11.01.2023) தொடங்கி வைக்கிறார்.

இந்தியாவின் முதன்மையான இணையச் சேவையான ஜியோ நிறுவனம் இணையப் புரட்சியாக இந்தியாவில் அதிக வேக ட்ரு 5ஜி இணையச் சேவையைத் தொடங்கினர். இந்தியாவில் அனைத்து மக்களுக்குக் கிடைக்கு அதிவேக 5ஜி சேவை வழங்குவதையே இலக்காக வைத்து செயல்படுகிறோம் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்தியா முழுவதும் 2022 அக்டோபர் மாதம் 1 ஆம் நாள் அதிவேக 5ஜி சேவையைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அதனில் முதல் கட்டமாக நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை, அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், டெல்லி, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே ஆகிய இடங்களில் 5ஜி சேவை செயல்பாட்டிற்கு வந்தது.

Also Read : டெலிகிராம் யூஸ் பண்றீங்களா..? இந்த சூப்பர் அப்டேட்டை பாருங்க..!

அதனைத் தொடர்ந்து, ஜியோ நிறுவனம் சார்பில் டெல்லி,மும்பை, வாரணாசி, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், சென்னை, புனே, குருகிராம், நொய்டா, காசியாபாத், பரிதாபாத் மற்றும் குஜராத் மாநிலம் ஆகிய பகுதிகளில் உள்ள 33 மாவட்டங்களில் 5ஜி சேவை வழங்கப்பட்டு வருகிறது.

2030 இறுதிக்குள் நாட்டின் அனைத்து கிராமங்களிலும் 5ஜி சேவையைக் கொண்டு சேர்க்கத் திட்டமிட்டுள்ளதாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்திருந்தார்.

அந்த நோக்கில் அடுத்தகட்டமாகத் தமிழகத்தில் கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களில் ஜியோவில் ட்ரூ 5ஜி சேவையை (11.01.2023) புதன் கிழமை தி.நகரில் உள்ள ஜிஆர்டி கன்வென்சன் மையத்தில் மாலை 5 மணிக்கு மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைக்கிறார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் நீரஜ் மிட்டல் கலந்துகொள்கிறார்.

First published:

Tags: Coimbatore, Jio 5G, Madurai, Reliance Jio