ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

உக்ரைனுக்கு இலவச தொழில்நுட்ப உதவியை செய்வதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவிப்பு.!

உக்ரைனுக்கு இலவச தொழில்நுட்ப உதவியை செய்வதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவிப்பு.!

மைக்ரோசாஃப்ட் நிறுவனம்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம்

Microsoft and Ukraine | பிப்ரவரி மாதம் போர் தொடங்கிய நிலையிலிருந்து மைக்ரோசாஃப்ட் உக்ரைனிற்கு உதவி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனிக்கு கூடுதலாக 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள தொழில்நுட்ப உதவிகளை செய்ய உள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை இதைப் பற்றி பேசிய மைக்ரோசாஃப்டின் துணைத்தலைவர் பிராட் ஸ்மித், ’அடுத்து வரும் 2023 ஆம் ஆண்டு முழுவதும் உக்ரைன் நாட்டிற்கு மைக்ரோசாப்ட் தனது 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள கூடுதல் தொழில்நுட்ப சேவைகளை இலவசமாக வழங்கும்’ என அறிவித்துள்ளார்.

இதன் மூலம் அந்த நாட்டின் அரசாங்க நிறுவனங்கள், முக்கிய கட்டமைப்புகள் மற்றும் உக்ரைன் நாட்டின் முக்கிய சேவைகள் அனைத்தையும் மைக்ரோசாப்ட் கிளவுட் தொழில்நுட்பத்தின் மூலம் அந்நாடு கட்டமைத்துக் கொள்ள முடியும் எனவும் முக்கியமாக, அனைத்துவித டிஜிட்டல் சேவைகளை பெறுவதற்கும் மைக்ரோசாஃப்ட் உதவும் எனவும் அவர் தன்னுடைய பதிவில் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யாவுடனான போர் ஆரம்பித்த நிலையில் இருந்து உக்ரைன் மிக மோசமான பொருளாதார மந்தநிலையை சந்தித்து வருகிறது. மேலும் அடிப்படை தேவைகளுக்கு கூட மற்ற நாடுகளிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளும் உக்ரைனிற்கு பல்வேறு வகைகளில் உதவி வரும் நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உக்ரைனின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், இணையவழி சேவைகள் தங்கு தடையின்றி நடைபெறுவதற்கும் இந்த உதவியை செய்வதாகத் தெரிகிறது.

மேலும் உக்ரைன் நாடு போரின் தாக்கத்திலிருந்து முழுவதுமாக மீண்டு வரும் வரை மைக்ரோசாஃப்ட் தன்னுடைய உதவியை உக்ரைனிற்கு அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி மாதம் போர் தொடங்கிய நிலையிலிருந்து மைக்ரோசாஃப்ட் உக்ரைனிற்கு உதவி வருகிறது. தற்போது வரை கிட்டத்தட்ட 400 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான மதிப்புடைய தொழில்நுட்ப உதவிகளை மைக்ரோசாஃப்ட் உக்ரைனிற்கு செய்துள்ளது. உக்ரைன் நாடு தன்னை தற்காத்துக் கொள்ள தன்னுடைய நட்பு நாடுகளிடமிருந்து பல்வேறு உதவிகளை பெற்று வருகிறது.

Also Read : எலான் மஸ்கின் ஒரே நம்பிக்கை.. ட்விட்டரே நம்பி இருக்கும் இந்திய பொறியாளர்.. யார் இந்த ஸ்ரீராம்?

மைக்ரோசாப்ட் நிறுவனம் மட்டுமின்றி மற்றும் பல தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்தும் உக்ரைனிற்கு உதவிகள் கிடைத்த வண்ணம் உள்ளன. இதன் மூலம் உக்ரைன் நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் உதவுவதாக ஸ்மித் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா முழுவதும் தன்னுடைய தரவு மையங்களை நிறுவி, தனது டிஜிட்டல் தொழில்நுட்ப சேவைகளை உக்ரைணிற்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அளித்து வருகிறது.

கடந்த ஜூன் மாதம் மைக்ரோசாஃப்ட் அளித்த அறிக்கையின் படி உக்ரைனின் டிஜிட்டல் தரவுகளுக்கும், பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை மேம்படுத்தும் பொருட்டு இந்த வசதிகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் செய்துள்ளது. ரஷ்யாவின் ஏவுகணைகள் உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த போதிலும் மைக்ரோசாஃப்ட் உக்ரைனின் முக்கிய தகவல்களை பாதுகாத்து வந்துள்ளதாக ஸ்மித் தெரிவித்துள்ளார்.

Also Read : சோசியல் மீடியாக்களுக்கு மத்திய அரசு வைத்த செக்... இன்னும் 3 மாசம் தான் கெடு.!

உக்ரைன் நாட்டின் போர் சூழ்நிலையில், அதன் கணினி சேவை மற்றும் டிஜிட்டல் இணைய வழி சேவைகளில் மைக்ரோசாப்ட் மட்டுமல்லாது மற்றும் பல நிறுவனங்களும் தங்கள் பங்களிப்பை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Selvi M
First published:

Tags: Microsoft, Russia - Ukraine, Tamil News, Technology