மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

மைக்ரோசாப்ட் நிறுவனமும் தனது ஊழியர்கள் அலுவலகத்துக்குத் திரும்பும் முன்பு, தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்ற அறிவித்துள்ளது.

  • Share this:
கோவிட் ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு, அமெரிக்காவில் மீண்டும் அலுவலகங்கள் தொடங்கலாம் என்ற முடிவில் இருப்பதால், அனைத்து தொழில்நுட்ப பெரு நிறுவனங்களும், தங்களின் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்று அளிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளன. டெல்டா வேரியன்ட் வைரஸ் மீண்டும் நாடு முழுவதும் பரவும் ஆபத்து இருப்பதால், அலுவலகம் மீண்டும் திறக்கும் தேதிகள் மறுபரிசீலனையில் உள்ளது.

நிறுவனத்துக்கு திரும்பும் அனைத்து ஊழியர்களும், பார்வையாளர்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்று கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இந்த முடிவை, நிறுவனம் தன்னுடைய சமீபத்திய அறிக்கையில் வெளியிட்டது. மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர்கள் மட்டுமில்லாமல், நிறுவன வளாகத்துக்குள் வரும் வெண்டார்கள் மற்றும் விருந்தினர்கள் அனைவரும் இந்த விதியை கடைபிடிக்க வேண்டும்.

Also read : அனுப்புற படத்தை பார்த்தா மட்டும் போதும்... வாட்ஸ் அப் புது அப்டேட்

ஏற்கனவே, செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி மீண்டும் அலுவலகம் தொடங்கலாம் என்று முடிவில் இருந்தது. தற்போது, திறக்கும் தேதி மாற்றப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம், அமெரிக்காவில் உள்ள அலுவலகத்தை அக்டோபர் 4 ஆம் தேதிக்கு மேல், மீண்டும் திறக்க இருப்பதாகக் கூறியுள்ளது.

உடல் நலக் கோளாறு அல்லது மருத்துவக் காரணத்துக்காக, கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் இருந்து விலக்கு பெற்றவர்களுக்கு, நிறுவனமும் விலக்கு அளித்துள்ளது. மேலே கூறியுள்ளது மட்டுமின்றி, ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மற்றொரு விலக்கையும் அறிவித்துள்ளது. நிறுவன ஊழியர்களுக்கு, தடுப்பூசி செலுத்தக்கூடிய வயதை விட குறைவான வயது குழந்தைகள் இருந்தால், அவர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என்று கூறியுள்ளது. அதே போல, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு கொண்டவர்களைப் பராமரிக்கும் ஊழியர்களும், ஜனவரி வரை வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என்று கூறியுள்ளது.

Also Read :  செப்டம்பர் முதல் இந்த ஆண்ட்ராய்ட் வெர்ஷன்களை பயன்படுத்த முடியாது! கூகுள் வெளியிட்ட அறிவிப்பு

“பெருந்தொற்றின் தொடக்கத்தில் எவ்வளவு பாதுகாப்பாக இருந்தோமோ, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டோமோ, அதைத் தொடர்ந்து பின்பற்றி வரும் நிலையில், புதிய மாற்றங்களையும் கண்காணித்து, சூழ்நிலைக்கு ஏற்ப எங்கள் திட்டங்களை மேற்கொள்கிறோம். இவற்றில், எங்கள் ஊழியர்களின் உடல் நலம் மற்றும் பாதுகாப்புக்குத் தான் முன்னுரிமை” என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் போலவே, கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்களும் கடந்த மாதமே இந்த அறிவிப்பை வெளியிட்டது. வீட்டிலேயே இருந்து பணிபுரியும் தேர்வை நிறுவனங்கள் வழங்கியிருந்தாலும், ஒரு சிலர் மட்டுமே தற்போது அலுவலகத்தில் இருந்து பணிபுரிவதால், பெரிய எண்ணிக்கையிலான ஊழியர்களுக்கு அலுவலகம் திறக்க, முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறது.

தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்று இருந்தால் மட்டுமே ஊழியர்கள் அலுவலகத்தில் வந்து பணி புரிய முடியும் என்பது கட்டாயமாக இருந்தாலும், தடுப்பூசி பெருமளவு கிடைக்கும் இடங்களில் மட்டுமே இது பொருந்தும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மீண்டும் அலுவலகங்கள் திறப்பை எப்படி நிறுவனங்கள் எதிர்கொள்ளப் போகிறது என்று விரைவில் தெரியவரும்!.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: