மைக்ரோசாப்ட் டீம்ஸ் (Microsoft Teams) என்பது மிகவும் பிரபலமான வீடியோ கான்ஃபரன்சிங் மென்பொருள். அலுவலக மீட்டிங் முதல் கேஷுவல் வீடியோ இணைப்புகள் வரை, பல தரப்பினரும் டீம்ஸ் அப்ளிகேஷனை பயன்படுத்தி வந்தனர். இது மொபைல் யூசர்களுக்கு செயலி வடிவிலும் உள்ளது. ஆனால், கடந்த 21ஆம் தேதி திடீரென்று டீம்ஸ் அப்ளிகேஷன் உலகம் முழுவதும் செயலிழந்தது. இதனால் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டனர்.
பொதுவாக ஒரு மென்பொருள் அல்லது இணையத்தளம் ஒருவருக்கு வேலை செய்யவில்லை அல்லது செயலிழந்து போனால், அதைப் பற்றி தெரிந்து கொள்ள டிராக்கிங் வலைத்தளங்கள் உள்ளன. இதன் மூலம் ஒருவருக்கு மட்டும் ‘டவுன்’ ஆகியிருக்கிறதா அல்லது முழுவதுமாக அப்படி தான் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள முடியும். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டீம்ஸ் அப்ளிகேஷன் இயங்குகிறதா என்று பலரும் டிராக் செய்து, பலரும் டீம்சை பயன்படுத்த முடியவில்லை என்பதை உறுதி செய்தனர்.
கடந்த வியாழன், ஜூலை 21 அன்று காலை 7 மணியில் இருந்தே, மைக்ரோசாப்ட் டீம்ஸ் இயங்கவில்லை என்று Down Detector என்ற டிராக்கர் வழியாக, ஆயிரக்கணக்கான புகார்கள் பதிவாகின. நாள் முழுவதும் புகார்கள் பதிவு செய்யப்பட்டு வந்தன. பதிவு செய்யப்பட்ட புகார்களில், 50 சதவிகிதம் அவுட்டேஜ் ரிப்போர்ட்டுகள் டீம்ஸ் செயலி இயங்கவில்லை என்றும், 34 சதவிகிதம் அவுட்டேஜ் ரிப்போர்ட்டுகள், சர்வரில் பிரச்சனை என்றும், 17 சதவிகிதம் அவுட்டேஜ் ரிப்போர்ட்டுகள் லாகின் பிரச்சனைகள் என்றும் கூறியது.
அதைத் தொடர்ந்து, யூசர்கள் மைக்ரோசாஃப்ட் டீம்சை அணுகவோ அல்லது பயன்பாட்டில் இருக்கும் எந்த அம்சங்களையும் பயன்படுத்தவோ முடியவில்லை என்ற அளவுக்கு செயலிழந்து உள்ளதாக உறுதி செய்தது. அது மட்டுமில்லாமல், இதற்கு என்ன காரணம் என்பதையும் ஆய்வு செய்து வருவதாகக் கூறியது.
பின்னர், என்ன பிரச்சனை என்பதை கண்டறிந்து விட்டதாகவும், அதை சரி செய்வதில் ஈடுபட்டு வருவதாகவும் அப்டேட் செய்தது.
Also Read : பெர்சனலாக இறங்கி அடிக்கும் இமெயில் மோசடியாளர்கள் - சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் கூட தடுமாற கூடும்.!
“யூசர்கள் மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் அணுக முடியவில்லை அல்லது எந்த அம்சங்களையும் பயன்படுத்த முடியவில்லை என்ற புகார்களை நாங்கள் பெற்றோம். அதை விசாரித்து வருகிறோம்” என்று முதலில் தெரிவித்த மைக்ரோசாப்ட் தரப்பு, பின்னர் மற்றொரு ட்வீட்டில், "சமீபத்திய வரிசைப்படுத்தலில் இன்டெர்னல் ஸ்டோரேஜ் சேவைக்கான லிங்க் உடைந்திருப்பதாக நாங்கள் தீர்மானித்துள்ளோம். இதனால் தான் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த பாதிப்பை நீக்க, இனி ஏற்படாமல் தவிர்க்க, தடையற்ற சேவையை வழிநடத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம்" என்று உறுதி செய்துள்ளது.
Also Read : அதிகரித்து வரும் சைபர் தாக்குதலும், புதிய VPN விதிகளும் - யூசர்களின் டேட்டா பாதுகாப்பாக இருக்குமா.?
கடந்த மாதம், மைக்ரோசாப்ட் நிறுவனம், SMB களுக்கு உதவியாக இருக்கும் வகையில் டீம்ஸ் அப்ளிகேஷனில், 'மொபைலில் மீட்டிங்கைத் திட்டமிடுவது, 'யாருடனும் சாட் செய்தல்’ மற்றும் 'கூகுள் கேலண்டர் ஒருங்கிணைப்பு' ஆகிய மூன்று புதிய அம்சங்களை வெளியிட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.