அதிக யூஸர்களின் கோரிக்கையை தொடர்ந்து Teams-ல் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்திய Microsoft!
அதிக யூஸர்களின் கோரிக்கையை தொடர்ந்து Teams-ல் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்திய Microsoft!
மைக்ரோசாப்ட்
Microsoft: Teams admin centre அல்லது பவர்ஷெல் கமெண்ட்ஸ்களை பயன்படுத்துவதன் மூலம் அட்மின்கள் meetings-ஐ ஒருபோதும் தானாக காலாவதியாகாதவாறு (never auto-expire) செட் செய்யலாம்.
தொழில்நுட்ப ஜாம்பவானான மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது Microsoft Teams பயன்பாட்டிற்காக ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. Microsoft Teams யூஸர்களின் நீண்ட நாள் கோரிக்கையை அடுத்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் Teams- தற்போது புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஷேர்பாயிண்ட் (SharePoint) அல்லது ஒன்ட்ரைவில் (OneDrive) சேமிக்கப்பட்ட மைக்ரோசாஃப்ட் டீம்ஸின் ரெகார்ட்களை தானாக நீக்கக்கூடிய (automatically delete) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சத்தை மைக்ரோசாப்ட் இறுதியாக வெளியிட்டு உள்ளது.
இந்த புதிய அம்சத்தின்படி எந்த ஆக்ஷனும் எடுக்கப்படாவிட்டால் ரெக்கார்டிங் செய்த 60 நாட்களுக்கு பிறகு அனைத்து புதிய ரெக்கார்டிங்களும் தானாகவே காலாவதியாகிவிடும் (automatically expire). இந்த புதிய அம்சம் OneDrive அல்லது SharePoint-ல் சேமிக்கப்பட்ட ரெக்கார்டிங் ஃபைல்ஸ் களை pre-set period-ற்கு பிறகு தானாகவே நீக்கும். யுஎஸ் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் இந்த அம்சத்தை Teams பிளாட்ஃபார்மிற்கான அதன் டிசம்பர் அப்டேட்களில் flagged செய்து உள்ளது.
இதில் எண்ட்-டு-எண்ட் கால் என்க்ரிப்ஷன் மற்றும் ஆண்ட்ராய்டு மற்றும் டீம்ஸ்-க்கு இடையே உள்ள பிரச்சனைக்கான தீர்வுகள் ஆகியவை அடங்கும். டீஃபால்ட்டாக இயக்கப்படும் இந்த auto-expiration அம்சத்தை அட்மின்கள் முடக்கலாம். இந்நிலையில் இது தொடர்பாக Microsoft நிறுவனம் blog போஸ்ட் ஒன்றில், அதிக யூஸர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் காரணமாக இந்த அம்சத்தின் வெளியீட்டை விரைவுபடுத்தியதாக கூறப்பட்டு உள்ளது.
எந்த ஆக்ஷனும் எடுக்கப்படாவிட்டால், ரெக்கார்ட் செய்த 2 மாதங்கள் அதாவது 60 நாட்களுக்கு பிறகு அனைத்து ஆல் நியூ ரெக்கார்ட்களும் (All new recordings) தானாகவே காலாவதி ஆகி விடும் என்றும் அந்த blog போஸ்ட்டில் Microsoft நிறுவனம் கூறி இருக்கிறது. புதிதாக உருவாக்கப்பட்ட அனைத்து டீம்ஸ் மீட்டிங் ரெக்கார்ட்களும் (Teams meeting recordings - TMRs) 60 நாட்களுக்கு இயல்பாகவே காலாவதியாகும் (default expiration).
இது அனைத்து டெனன்ட்ஸ்களுக்கும் (tenants) டீஃபால்ட்டாகவே இருக்கும்" என்று Microsoft நிறுவனம் ஒரு சப்போர்ட் டாக்குமென்ட்டில் (support document) விளக்கி இருக்கிறது. இதன் பொருள் டீஃபால்ட்டாக இந்த புதிய அம்சம் இயக்கப்பட்ட பிறகு உருவாக்கப்பட்ட அனைத்து TTMRs-களும், உருவாக்கிய தேதியில் இருந்து 60 நாட்களுக்குப் பிறகு நீக்கப்படும்," என்று அது மேலும் அந்த டாக்குமென்ட்டில் கூறப்பட்டு உள்ளது.
Teams admin centre அல்லது பவர்ஷெல் கமெண்ட்ஸ்களை பயன்படுத்துவதன் மூலம் அட்மின்கள் meetings-ஐ ஒருபோதும் தானாக காலாவதியாகாதவாறு (never auto-expire) செட் செய்யலாம். மைக்ரோசாஃப்ட் இந்த அம்சத்தை பழைய பதிவுகளால் உருவாக்கப்பட்ட "சேமிப்பு ஒழுங்கீனத்தைக் குறைப்பதற்கான இலகுரக ஹவுஸ்கீப்பிங் மெக்கானிஸம்" என்று விவரித்து உள்ளது. மேலும் இது சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 400 MB கிளவுட் ஸ்டோரேஜை பயன்படுத்துகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.