11th Gen ப்ராசெஸ்ஸார் அம்சத்துடன் Microsoft Surface Pro 7+ லேப்டாப் அறிமுகம்!

வணிக மற்றும் கல்வி நிறுவனங்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை தேவைகளை ஆதரிப்பதற்காக புதிய சொலியூஷனை கொண்டுவந்துள்ளதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

வணிக மற்றும் கல்வி நிறுவனங்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை தேவைகளை ஆதரிப்பதற்காக புதிய சொலியூஷனை கொண்டுவந்துள்ளதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
வாஷிங்டனை தளமாகக் கொண்ட Microsoft தனது New Surface Pro 7+ லேப்டாப்பை நிறுவனத்தின் Surface Proவின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக அறிமுகப்படுத்தியுள்ளது.

Surface Pro 7+ இன்டெல்லின் 11th Generation Tiger Lake ப்ரோசஸர்கள், அதிக RAM விருப்பம் மற்றும் LTE வேரியண்ட் விருப்பத்துடன் வருகிறது. சமீபத்திய Surface Pro பழைய சாதனத்தின் வடிவமைப்பு அடிப்படையில் அதிகம் மாற்றம் இல்லாமல் வந்துள்ளது. மேலும் இது ஹிட்டேன் பெரிமெட்டர் வென்டிங் (hidden perimeter venting) கொண்ட யூனிபோடி  மெக்னீசியம் வடிவமைப்பில் வருகிறது. Surface Pro 7+ பல உள்ளமைவுகளிலும் இரண்டு வண்ண விருப்பங்களிலும் கிடைக்கிறது. 

Microsoft Surface Pro 7+ வைஃபை வேரியண்ட்டுக்கு $899 முதல் (தோராயமாக இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 66,000) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மறுபுறம், LTE வேரியண்ட்டின் விலை $1,149 முதல் (தோராயமாக இந்திய ரூபாய் மதிப்பில் 84,400) ஆக உள்ளது. Surface Pro 7+ ஒரு மேட் பிளாக் மற்றும் பிளாட்டினம் கலர் (Matte Black and a Platinum colour) விருப்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இது ஆசியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா (Asia, Europe, and North America) முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மார்கேட்டுகளில் கிடைக்கும். 

இந்த வார இறுதிக்குள் லேப்டாப் கஸ்டமர்களுக்கு அனுப்பும் வேலை தொடங்கும் என்று Microsoft தெரிவித்துள்ளது. ஸ்பெசிபிகேஷன்களைப் பொறுத்தவரை, மைக்ரோசாப்ட் சர்பேஸ் புரோ 7+ (Microsoft Surface Pro 7+) விண்டோஸ் 10 ப்ரோவில் (Windows 10 Pro) இயங்குகிறது. மேலும் இது 12.3 இன்ச் பிக்சல்சென்ஸ் டிஸ்ப்ளே (PixelSense Display) 2736 x 1824 ரெசலூஷன் மற்றும் 3: 2 விகிதத்துடன் வருகிறது. இது 267ppi பிக்சல் டென்சிட்டியுடன் 10-பாயிண்ட் மல்டி-டச்சை  கொண்டுள்ளது. Surface Pro 7+ வைஃபை மாடலுக்கான குவாட் கோர் இன்டெல் கோர் i7-1165G7 ப்ரோசஸர் மூலம் இயக்கப்படுகிறது, அதே நேரத்தில் LTE வேரியண்ட் 11th Generation Core i5-1135G7 CPU உடன் வருகிறது. 

Also read... Googleல் யூசர்களின் பப்ளிக் குரூப்களில் காட்டும் பிழையை சரிசெய்யும் WhatsApp!

சர்பேஸ் புரோ 7+ இன் Intel Core i3 மாடல் Intel Iris Xe Graphics  உடன் வருகிறது. வைஃபை வேரியண்ட் 32GB RAMமிலும் LTE வேரியண்ட் 16GB RAMமிலும் வருகிறது. ஸ்டோரேஜைப் பொறுத்தவரை, Surface Pro 7+ இன் வைஃபை மாடல் 1TB வரை ரிமூவபள் SSD ஸ்டோரேஜ் உடன் வருகிறது அதோடு LTE மாடல் 256GB வரை ரிமூவபிள் SSD ஸ்டோரேஜ் உடன் வருகிறது.1080p முழு எச்டி வீடியோ திறனுடன் 8 மெகாபிக்சல் பின்புற கேமராவும், 1080p ரெக்கார்டிங் கொண்ட 5 மெகாபிக்சல் முன் கேமராவும் உள்ளன.

Surface Pro 7+ உடன், Microsoft data retention purposesகளுக்காக ரிமூவபிள் SSD சொலியூஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. வணிக மற்றும் கல்வி நிறுவனங்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை தேவைகளை ஆதரிப்பதற்காக புதிய சொலியூஷனை கொண்டுவந்துள்ளதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. மைக்ரோசாஃப்ட் சர்பேஸ் புரோ 7+ இல் இணைப்பு விருப்பத்தில் வைஃபை 6, புளூடூத் 5.0, யூ.எஸ்.பி டைப்-C போர்ட் (Wi-Fi 6, Bluetooth 5.0, a USB type-C port), 3.5 மிமீ headphone jack, மைக்ரோ எஸ்டி கார்டு ரீடர் ஆகியவை அடங்கும். சர்பேஸ் புரோ 7+ இன் LTE வெர்சனிலும் சிம் கார்டு ஸ்லாட் உள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: