Microsoft Surface Laptop 4 : இந்தியாவில் அறிமுகமாகியுள்ள மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் 4 - விலை எவ்வளவு தெரியுமா?

மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் 4

மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் 4 விண்டோஸ் 10 OS உடன் வருகிறது. மேலும் 13.5 இஞ்ச் அளவுள்ள மாடலானது 10 பாயிண்ட் மல்டி டச் எனேபில்டு பிக்சல்சென்ஸ் கொண்டது.

  • Share this:
மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் 4 கடந்த மாதம் உலக அளவில் வெளியிடப்பட்டு, அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இந்தியாவில் இந்த லேப்டாப் அறிமுகமாகியுள்ளது. ஏற்கனவே கடந்த 2019ம் வருடம் அக்டோபர் மாதம் சர்ஃபேஸ் லேப்டாப் 3 வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது சர்ஃபேஸ் லேப்டாப் 4 வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த லேப்டாப் 13.5 இஞ்ச் மற்றும் 15 இஞ்ச் என இரண்டு அளவுகளில் கிடைக்கிறது. இந்த இரண்டு வகைகளும் டச் மற்றும் விண்டோஸ் ஹலோ ஃபேஸ் ரெககனைசேசனுடன் கிடைக்கிறது. இந்த லேப்டாப் இன்டெல் மற்றும் ஏஎம்டி பிராசசர்கள் கொண்டுள்ளது.

இந்த லேப்டாப் பாடியானது அலமினியம் ஃபிரேமுடனும் அல்கன்டாரா மற்றும் மெட்டல் பால்ம் உடனும் கிடைக்கிறது. இந்தியாவில் 13.5 இஞ்ச் அளவுள்ள லேப்டாப்பின் துவக்க விலை ரூ.1,02,999 என்று கூறப்படுகிறது. இது AMD Ryzen 5 4680U CPU, 8ஜிபி RAM மற்றும் 256ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜுடன் கிடைக்கிறது.

ALSO READ | இந்திய சந்தையில் களமிறங்கியுள்ள ஒன்ப்ளஸ் டிவி 40Y1... டால்பி ஆடியோ, குரோம்கேஸ்ட் வசதிகள்- விலை என்ன தெரியுமா ?

இதில் 15 இஞ்ச்அளவுள்ள AMD Ryzen 7 4980U-பவர்டு மாடலானது ரூ.1,34,999 விலையில் கிடைக்கிறது. இதுவே 13.5 இஞ்ச் அளவுள்ள, 11th-gen Intel Core i5-1135G7 ஆகியவற்றுடன் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட மாடலானது ரூ.1,51,999 விலையில் கிடைக்கிறது. தொழில் சார்ந்து லேப்டாப் வாங்க விரும்புவோருக்கு மைக்ரோசாஃப்ட் ஹார்டுவேர் கான்பிகரேசனை பொறுத்து ரூ.1,05,499 முதல் ரூ.1,77,499 வரையிலான விலைகளில் கிடைக்கிறது.

லேப்டாப் வாங்க விரும்புவோர் அமேசான் உள்ளிட்ட இகாமர்ஸ் தளங்கள் மூலம் வாங்கிக்கொள்ளலாம். அமேசான் நிறுவனத்தில் இந்த லேப்டாப்பை மாதத் தவணை முறையின் மூலம் வாங்கிக்கொள்ளலாம். மேலும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மற்றும் சில குறிப்பிட்ட வங்கி கார்டுகள் மூலம் வாங்கினால் உடனடி தள்ளுபடி கிடைக்கும்.

ALSO READ | ஜியோமியின் காஸ்ட்லி ஸ்மார்ட்போன் எம்ஐ 11 அல்ட்ராவின் சிறப்பம்சங்கள்!

மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் 4 விண்டோஸ் 10 OS உடன் வருகிறது. மேலும் 13.5 இஞ்ச் அளவுள்ள மாடலானது 10 பாயிண்ட் மல்டி டச் எனேபில்டு பிக்சல்சென்ஸ் கொண்டது. இதன் டிஸ்பிளேயானது 2256x1504 பிக்சல்ஸ் ரிசொல்யூசன், 201 ppi பிக்சல் டென்சிட்டி, 3:2 ஆஸ்பெக்ட் ரேசியோவுடன் கிடைக்கிறது. 15 இஞ்ச் மாடல் 2496x1664 பிக்சல் ரெசொல்யூசனுடன் அதே பிக்சல் டென்சிட்டி மற்றும் ஆஸ்பெக்ட் ரேசியோவுடன் கிடைக்கிறது.

13.5 இஞ்ச் மாடலானது 11th Gen Intel Core i7 processor மற்றும் Iris Xe graphics அல்லது AMD Ryzen 7 4980U Mobile CPU உடன் கிடைக்கிறது. 15 இஞ்ச் மாடலானது intel Core i7-1185G7 processor மற்றும் AMD Ryzen 4980U chipse கொண்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் 4 ஆனது 47.4Whr பேட்டரி கொண்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 13.5 இஞ்ச் லேப்டாப்பானது 19 மணி நேரமும், 15 இஞ்ச் லேப்டாப்பானது 17.5 மணி நேரமும் பயன்படுத்தலாம்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

 
Published by:Sankaravadivoo G
First published: