Internet Explorer-ன் பிரவுசர் சேவையில் இருந்து அடுத்த ஆண்டில் முழுமையாக வெளியேறப்போவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
25 ஆண்டுகளாக இணைய சேவை வழங்கி வந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரர், கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் ஆதரவை இழந்து வந்தது. கூகுள் மற்றும் பயர்பாக்ஸ் உள்ளிட்ட பிரவுசர்களின் வளர்ச்சிக்குப் பிறகு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படவில்லை. 25 ஆண்டுகளாக பிரவுசர் சேவையில் இருந்த மைக்ரோசாப்ட் நிறுவனம், தற்போது தங்களின் இணைய சேவைக்கான ஆதரவை நிறுத்தப்போவதாக கூறியுள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் 15ம் தேதி முழுமையாக இந்த சேவை நிறுத்தப்படுகிறது.
Also Read: ‘பிரமாதமான சக்சஸ்’- காசா மீதான தாக்குதலைக் கொண்டாடும் இஸ்ரேல் பிரதமர்
கூகுகள் மற்றும் சஃபாரி போன்ற பிரவுசர்கள் அதிக வேக இணைய சேவையை வழங்குகின்றன. அந்த பிரவுசர்களின் Search Engine -கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் தேடுபொறியை விடவிரைவாக தகவல்களை திரட்டி பயனாளர்களுக்கு கொடுத்துவிடுகின்றன. அந்த வேகத்துக்கு Internet Explorer ஈடுகொடுக்க முடியாததால் பயனர்களின் விருப்பத்தை இழந்தது. மேலும், விண்டோஸ் 10 அறிமுகத்துக்குப் பிறகு அதன் சில டெக்னிக்கல் வெர்சன்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு பொருத்தமாக இல்லை.
இதுகுறித்து பேசிய மைக்ரோசாப்ட் எட்ஜ் புரோகிராம் மேனேஜர் சியான் லையன்டர்சே (Sean Lyndersay), அடுத்த ஆண்டு முதல் விண்டோஸ் 10 வெர்சன்களில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் செயல்படாது என அறிவித்துள்ளார். விண்டோஸ் 10 லாங்டெர்ம் சர்வீஸிங் சேனல் அடுத்தாண்டு வரை இன்டர்நெட் எக்ஸ்புளோரரை கொண்டிருக்கும். ஆனால், அனைத்து பயனர்களுக்குமான வெர்சன்கள் பிரவுசரில் கிடைக்காது. படிப்படியாக பல்வேறு ஆப்சன்கள் குறைக்கப்பட்டு வருவதால், முற்றிலுமாக நிறுத்தப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Also Read: கொரோனா தொற்றுக்கு மனைவி பலி - வேதனையில் மகனுடன் விஷம் குடித்து கணவர் தற்கொலை
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் Outlook, OneDrive and Office 365 போன்ற பியூச்சர்கள் 2021 ஆகஸ்ட் மாதம் முதல் செயல்படாது என ரெட்மண்ட் அறிவித்திருந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதமே மைக்ரோசாப்ட் வெப்-ன் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. முதல் வெப் பிரவுசராக அறிமுகமான இன்டர்நெட் எகஸ்புளோரர், உலகம் முழுவதும் கோலோச்சியது. புதிய பிரவுசர்களின் வருகையால் இதன் சேவை மெல்ல மெல்ல சரிவை சந்தித்து.
கடந்த சில ஆண்டுகளாக இறுதியின் விளிம்பில் இருந்த இந்த சேவை தற்போது முற்றிலுமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயனர்களின் தேவை மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தவறியதால் மைக்ரோசாப்ட்டின் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பெரும் சரிவை சந்திக்க காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். உடனடி அப்டேட் மற்றும் டவுன்லோடு வேகம் ஆகியவை சரி செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் டெக் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தாலும், உலகளவில் முன்னணி பிரவுசராக கூகுள் வளர்ந்துள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Google, Google Chrome, Internet, Microsoft