8 ஆண்டுகளுக்குப் பின் ராஜாவாக திரும்பி வந்த மைக்ரோசாப்ட்

Microsoft Returns to the Top of the World | கடைசியாக 2010-ம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்திடம் முதலிடத்தை மைக்ரோசாப்ட் பறிகொடுத்திருந்தது.

news18
Updated: December 2, 2018, 11:24 AM IST
8 ஆண்டுகளுக்குப் பின் ராஜாவாக திரும்பி வந்த மைக்ரோசாப்ட்
மைக்ரோசாப்ட் (கோப்புப்படம்)
news18
Updated: December 2, 2018, 11:24 AM IST
உலகின் அதிக மதிப்பு கொண்ட நிறுவனங்கள் பட்டியலில் ஆப்பிள் நிறுவனத்தை வீழ்த்தி மைக்ரோசாட்ப் முதலிடத்துக்கு வந்துள்ளது. 2010-ம் ஆண்டில் இழந்த முதலிடத்தை 8 ஆண்டுகளுக்குப் பின் அந்நிறுவனம் பெற்றுள்ளது.

அமெரிக்காவில் பங்குச்சந்தையில் நிறுவனங்களில் பங்குகள் விற்பனை செய்யப்படுவதன் அடிப்படையில் சொத்து மதிப்பு கணக்கிடப்படுகிறது. சொத்து மதிப்பின் அடிப்படையில் நிறுவனங்கள் பட்டியலிடப்படுகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை பங்குச்சந்தை மூடும் போது கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத நிகழ்வாக ஆப்பிள் நிறுவனத்தை வீழ்த்தி மைக்ரோசாப்ட் முதலிடத்தை பிடித்தது.

ஆப்பிள் (கோப்புப்படம்)


கடைசியாக 2010-ம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்திடம் முதலிடத்தை மைக்ரோசாப்ட் பறிகொடுத்திருந்தது. அதன் பின்னர் கூகுள், அமேசான் என்று போட்டிகள் அதிகமாகிவிட்டதால் மைக்ரோசாப்ட் திணறியபடியே இருந்தது.

சமீபத்தில் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மதிப்பை எட்டிய உலகின் முதல் நிறுவனம் என்ற பெயரைப் பெற்ற ஆப்பிள், தற்போது சிறிய சறுக்கலை சந்தித்துள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஆப்பிளை விட உயர்ந்தது பங்கு வர்த்தக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Loading...
பங்குச்சந்தை இறுதி நேரத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மொத்த பங்குகள் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 63 லட்சம் கோடியாக முதலிடத்தில் இருந்தது. 62 லட்சத்து 68 ஆயிரம் கோடி ரூபாப் மதிப்புடன் ஆப்பிள் 2-ம் இடத்திலும், 61 லட்சத்து 12 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் அமேசான் 3 வது இடத்தில் உள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சத்ய நாதெல்லா இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also See..

First published: December 2, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...