Home /News /technology /

அவுட்லுக் மின்னஞ்சல் செயலியை பயன்படுத்துகிறீர்களா.? இந்த செய்தி உங்களுக்கு தான்

அவுட்லுக் மின்னஞ்சல் செயலியை பயன்படுத்துகிறீர்களா.? இந்த செய்தி உங்களுக்கு தான்

அவுட்லுக்

அவுட்லுக்

Microsoft Outlook | ஆண்டிராய்டு ஆப்பிள் சாதனங்களில் அவுட்லுக் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு சிக்கல் இருக்கிறது. உங்கள் மின்னஞ்சல் சிக்னேச்சருடன், அவுட்லுக்கின் இணைப்புகள் சேர்ந்து தான் மின்னஞ்சல் அனுப்பப்படும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
தனிப்பட்ட முறையிலோ அல்லது அலுவலக மின்னஞ்சல்களை அனுப்பும் பொழுது அதன் கீழே சிக்னேச்சர் என்று நம்முடைய பெயர் அல்லது இனிஷியல்களை சேர்ப்போம். ஜிமெயில், யாஹூ, அவுட்லுக் உள்ளிட்ட பலவிதமான மின்னஞ்சல் சேவைகள் இருக்கின்றன. உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிரபலமான மின்னஞ்சல் சேவை தான் அவுட்லுக். உலகம் முழுவதும் தங்களுடைய கோடிக்கணக்கானவர்கள் தங்களுடைய புரொஃபஷனல் மின்னஞ்சலாக அவுட்லுக்கைத்தான் பயன்படுத்துகிறார்கள். அது மட்டுமில்லாமல் எந்த நிறுவனத்தின் மின்னஞ்சல் ஆக இருந்தாலும், அதை அவுட்லுக்கில் பதிவு செய்து வைத்து எளிதாக பயன்படுத்தும் அம்சமும் வசதியும் இருக்கிறது.

ஆனால், ஆண்டிராய்டு ஆப்பிள் சாதனங்களில் அவுட்லுக் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு சிக்கல் இருக்கிறது. உங்கள் மின்னஞ்சல் சிக்னேச்சருடன், அவுட்லுக்கின் இணைப்புகள் சேர்ந்து தான் மின்னஞ்சல் அனுப்பப்படும். மற்ற மின்னஞ்சல் சேவைகள் போல இல்லாமல் உங்களுடைய ஸ்மார்ட்போனில் நீங்கள் அவுட்லுக் ஈமெயில் செயலியை டவுன்லோடு செய்து அதில் அந்த மின்னஞ்சலை ஆப் வழியாக நீங்கள் பயன்படுத்தும் பொழுது ‘Get Outlook for iOS’ / ‘Get outlook for andorid’ என்ற செய்தியுடன் லின்க்கும் டீஃபால்ட்டாக இணைக்கப்படும்.

அதாவது நீங்கள் எந்த சாதனத்திலிருந்து மின்னஞ்சல் அனுப்புகிறீர்கள் என்பது நீங்கள் அனுப்பும் நபர்களுக்கு தெரியும். ஆண்ட்ராய்டு அல்லது iOs சாதனத்தில் இருந்து ஜிமெயில் அல்லது வேறு மின்னஞ்சல் பயன்படுத்தும் பொழுது இவ்வாறு தெரியாது. ஆனால் அவுட்லுக் ஈமெயிலை பயன்படுத்தும் பொழுது இந்த இணைப்பும் மின்னஞ்சல் கீழே காணப்படும் உங்க சிக்னேச்சரின் ஒரு அங்கமாக இருக்கும்.



அலுவலக ரீதியாக, தொழில்முறையாக மின்னஞ்சல் அனுப்பும் போது, இந்த இணைப்புகள் ப்ரொஃபஷனலாக காட்சியளிக்காது. எனவே, ஒவ்வொரு முறையும் நீங்கள் மின்னஞ்சலில் இருந்து இதை நீக்குவதும் கடினமாக இருக்கும். எனவே ios மற்றும் ஆண்ட்ராய்டு யூஸர்கள் இதை எப்படி நீக்குவது என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

Also Read : சோஷியல் மீடியாவில் நீங்க படிப்பது எல்லாம் உண்மை தகவலா..! - என்ன சொல்கிறது ஆய்வு

அவுட்லுக்கின் டீஃபால்ட் சிக்னேச்சரை நீக்குவது எப்படி?

1. உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் உள்ள அவுட்லுக் செயலியைத் திறக்கவும்
2. திரையின் இடது மேற்புறத்தில் உள்ள ஹாம்பர்கர் மெனுவின் மீது ‘tap’ செய்யவும்
3. செட்டிங்க்ஸ் (settings) என்ற பிரிவுக்கு செல்லவும்
4. பிறகு, ஸ்க்ரோல் செய்து, சிக்னேச்சர் டேப் (signature tab) பகுதியைப் பார்க்கவும். அதில் டீஃபால்ட்டாக ‘Get 5. Outlook for Android’ அல்லது ‘Get Outlook for iOS’ என்ற சிக்னேச்சர் இருக்கும்.
6. நீங்கள் அந்த சிக்னேச்சரில் உங்கள் பெயர் அல்லது இனிஷியல், அல்லது நீங்கள் விரும்பும் விவரங்களை சேர்க்கலாம்.
7. சிக்னேச்சர் மாற்றத்தை உறுதி செய்து, சேமிக்க வலது மேற்புறத்தில் இருக்கும் செக்மார்க் ஐக்கானை கிளிக் செய்யவும்.



மைக்ரோசாஃப்ட் நிறுவனம், அவுட்லுக் மொபைல் செயலியை பயன்படுத்தும் ஆண்டிராய்டு மற்றும் ஆப்பிள் யூசர்களை டார்கெட் செய்து அதிக விளம்பரங்களை காட்சிப்படுத்த இருப்பதாக சமீபத்தில் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து தான், யூசர்கள் அனுப்பும் மின்னஞ்சலில், டீஃபால்ட்ஆக அவுட்லுக் செயலியின் லின்க்கையும் மைக்ரோசாப்ட் நிறுவனம் இணைத்துள்ளது.

Also Read : பாதுகாப்பை பலப்படுத்திய வாட்ஸ்அப்... இனி இதை செய்ய முடியாது.!

இலவசமாக அவுட்லுக் மின்னஞ்சல் செயலியை பயன்படுத்தி வந்தவர்களுக்கு இனி நிறைய விளம்பரங்கள் (ads) இடையூறாகத் தோன்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Microsoft, Technology

அடுத்த செய்தி