இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டை நவம்பர் வெற்றிகரமாக பரிசோதித்த நிலையில், தற்போது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மைக்ரோசாப்டுடன் கைகோர்த்து நாட்டில் விண்வெளி தொழில்நுட்ப துறையில் புதிய ஸ்டார்ட்-அப்களை ஆதரிக்க நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கையெழுதிட்டன.
புதிய ஒப்பந்தத்தின் கீழ், இஸ்ரோவால் அடையாளம் காணப்படும் விண்வெளித் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்கள் உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான "மைக்ரோசாஃப்ட் ஃபார் ஸ்டார்ட்அப்ஸ் ஃபவுண்டர்ஸ் ஹப் பிளாட்ஃபார்மில்"(Microsoft for Startups Founders Hub platform) இணைக்கப்படும். இதன் மூலம் விண்வெளி தொடர்பான ஐடியாக்களோடு வரும் நபர்களுக்கு அதை ஒரு யுனிகார்ன் நிறுவனமாக மாற்றும் வரை மைசரோசாப்ட் ஆதரவு தரும். மேலும் இந்த மைக்ரோசாப்ட் உடனான ஒத்துழைப்பு மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தேவையான தொழில்நுட்ப கருவிகள் AI, மெஷின் லேர்னிங் மற்றும் டீப் லேர்னிங் போன்ற அதிநவீன முறைகளைப் பயன்படுத்தி, பல்வேறு பயன்பாடுகளுக்கான பரந்த அளவிலான செயற்கைக்கோள் தரவுகளின் பகுப்பாய்வு மற்றும் செயலாக்க அணுகலை இலவசமாக வழங்கும்.
இதையும் படிங்க: 'அவசரப்படாதீங்க.. அபராதம் ரூ.133 கோடி கட்டுங்க..' கூகுளை வெளுத்துவாங்கிய தீர்ப்பாயம்!
" தேசிய விண்வெளி தொழில்நுட்ப அமைப்புக்கும் அதன் வளர்ச்சிக்கும் ஸ்டார்ட்அப்கள் பேருதவியாக இருக்கும் அப்படி புதிய புதிய தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குபவர்களை ஒன்றிணைக்கும் தளமாக இந்த திட்டம் அமையும் என்று நம்புகிறோம். ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரத்திற்கும் பயனளிக்கும் வகையில் தொழில்முனைவோருக்கு உதவவும் ஆதரவளிக்கவும் மைக்ரோசாப்ட் நிறுவனதோடு இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத் ஒரு அறிக்கையில் கூறினார்.
“இந்தியாவில் உள்ள விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்கள், தொழில்நுட்பத்தின் சக்தியுடன் நாட்டின் விண்வெளி திறன்களை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. விண்வெளியில் சாத்தியமானவற்றின் இந்த மாற்றத்தை விரைவுபடுத்த இஸ்ரோவுடன் ஒத்துழைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ” என்று மைக்ரோசாப்ட் இந்தியாவின் தலைவர் ஆனந்த் மகேஸ்வரி மேலும் கூறினார்.இதற்கிடையில், விண்வெளித் துறை நிபுணர்களுடன் ஸ்டார்ட்அப்களுக்கான தலைமை அமர்வு ஒன்றும் ஏற்பாடு செய்யப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.