• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • Default font Calibri-க்கு குட்பை சொல்லும் மைக்ரோசாப்ட் - புதிய font குறித்து யூசர்களிடம் கருத்து கேட்பு!

Default font Calibri-க்கு குட்பை சொல்லும் மைக்ரோசாப்ட் - புதிய font குறித்து யூசர்களிடம் கருத்து கேட்பு!

கலிப்ரி-க்கு குட்பை சொல்லும் மைக்ரோசாப்ட்

கலிப்ரி-க்கு குட்பை சொல்லும் மைக்ரோசாப்ட்

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளில் முதல் முறையாக மைக்ரோசாப்ட் அதன் டிஃபால்ட் ஃபான்ட்டை(default font) மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளது.

  • Share this:
கிட்டத்தட்ட 15 ஆண்டுகளில் முதல் முறையாக மைக்ரோசாப்ட் அதன் டிஃபால்ட் ஃபான்ட்டை(default font) மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளது.மேலும்தனது ஆஃபீஸ் சூட்டில் 5 புதிய ஃபான்ட்களை மைக்ரோசாப்ட் சேர்க்கிறது. புதிய ஃபான்ட்டை தேர்வு செய்ய உங்கள் உதவியை அது விரும்புகிறது.

ஏறக்குறைய 15 ஆண்டுகளாக default font-ஆக ஆதிக்கம் செலுத்திய கலிப்ரி, இப்போது ஓய்வு பெற உள்ளது. இதற்கு பதிலாக புதிய font-களை அறிமுகபடுத்தி உள்ள நிறுவனம், இவற்றில் ஏதாவது ஒன்றை default font-ஆக மாற்ற மைக்ரோசாப்ட் தனது சமூக ஊடகங்களில் புதிய font-கள் பற்றிய யூசர்களின் கருத்துக்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளது.

டைம்ஸ் நியூ ரோமன் ஃபான்ட்டிற்கு பதிலாக கடந்த 2007 முதல் மைக்ரோசாப்ட்டின் எல்லாவற்றிற்கும் default font-ஆக இருக்கும் கலிப்ரியை(Calibri) தற்போது நீக்க உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வலைப்பதிவு ஒன்றில் கருத்து தெரிவித்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம், "இந்த Calibri font நம் அனைவருக்கும் நன்றாக சேவை செய்திருந்தாலும், எங்களது மைக்ரோசாப்ட்டின் default font பரிணாமம் பெற வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்" என குறிப்பிட்டுள்ளது.

ALSO READ : கோவின், ஆரோக்கிய சேது வழியே ஆன்லைனில் தடுப்பூசி சான்றிதழை டவுன்லோட் செய்வது எப்படி?

மேலும் புதிய திசையை அமைக்க எங்களுக்கு உதவ, தற்போது default font-ஆக இருக்கும் கலிப்ரியை மாற்ற 5 ஒரிஜினல், கஸ்டம்(custom) font-களை அறிமுகப்டுத்துகிறோம். இந்த புதிய font-களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், உங்கள் இன்புட்டை விரும்புகிறோம், "என்று மைக்ரோசாப்ட் கூறி உள்ளது.

 

 



 

அதன்படி மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தி உள்ள 5 புதிய font-கள் பின்வருமாறு, பியர்ஸ்டாட் (Bierstadt), கிராண்ட்வியூ (Grandview), சீஃபோர்ட் (Seaford), ஸ்கீனா (Skeena), மற்றும் டெனோரைட் (Tenorite). இந்த ஐந்து புதிய சான்ஸ்-செரிஃப் font-கள் பலவிதமான பாணிகளைக் கொண்டுள்ளன. இதில் பாரம்பரிய, நவீன மற்றும் ஜெர்மன் சாலை மற்றும் ரயில் அடையாளங்களால் ஈர்க்கப்பட்ட font-கள் கூட உள்ளன.

 

 



 

இது குறித்து மேலும் தகவல் தெரிவித்துள்ள மைக்ரோசாப்ட் இறுதியில் கலிப்ரிக்கு மாற்றாக default font-ஆக வர போகும் font-ஐ தேர்ந்தெடுப்பதில் யூசர்களின் கருத்தை கேட்க முடிவு செய்துள்ளதாக கூறி உள்ளது.

 

 



 

இதற்கு ஏதுவாக மேற்கண்ட ஐந்து font குடும்பங்களையும் மைக்ரோசாப்ட் ஆதரவு வலைத்தளம் மூலம் யூசர்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று கூறி உள்ளது.

 

 



 

 

மேலும் யூசர்களின் கருத்துக்களை பரிசீலித்து வரும் 2022 ஆம் ஆண்டில் மேற்காணும் 5 font-களில் ஏதேனும் ஒன்றை புதிய மைக்ரோசாப்ட் ஆஃபீஸ் default font-ஆக மாற்றியமைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் யூசர்களின் கருத்துக்களை கேட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: