ஆண்ட்ராய்டு போன் உற்பத்தி செய்ய தயாரான மைக்ரோசாஃப்ட்..!

விண்டோஸ் அம்சங்கள் அதிகம் தென்பட்டாலும் ஆண்ட்ராய்டு போன்தான். கூகுள் ப்ளே ஸ்டோர் சேவை உள்ளது.

ஆண்ட்ராய்டு போன் உற்பத்தி செய்ய தயாரான மைக்ரோசாஃப்ட்..!
மைக்ரோசாஃப்ட் Surface-Duo
  • News18
  • Last Updated: October 3, 2019, 2:24 PM IST
  • Share this:
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் மொபைல் போன்களுக்குப் பெரும் வரவேற்பு இல்லாத சூழலில் தனது இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள ஆண்ட்ராய்டு போன் உற்பத்தியில் இறங்கியுள்ளது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.

நோக்கியாவின் போன் பின்தங்கத் தொடங்கிய காலத்தில் அனைவரின் எதிர்பார்ப்பும் மைக்ரோசாஃப்ட் மேல் இருந்தது. ஆனால், விண்டோஸ் போன்களுக்குக் கிடைக்காத மதிப்பாலும் ஆண்ட்ராய்டு போனுக்குக் கிடைத்த வரவேற்பாலும் தொடர்ந்து தொழில் போட்டியில் பின் தங்கியே இருந்து வந்தது மைக்ரோசாஃப்ட்.

Surface Duo என்னும் புதிய போனை விற்பனைக்குக் கொண்டு வருகிறது மைக்ரோசாஃப்ட். இரண்டு போன்களை இணைத்தது போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ள Surface Duo 5.6 இன்ச் ஸ்கிரீன் கொண்டுள்ளது. விண்டோஸ் அம்சங்கள் அதிகம் தென்பட்டாலும் ஆண்ட்ராய்டு போன்தான். கூகுள் ப்ளே ஸ்டோர் சேவை உள்ளது. இந்த போனை வெளியிட மைக்ரோசாஃப்ட் கூகுளுடன் கூட்டணி அமைத்திருப்பது சிறப்பம்சமாகும்.


டூயல் ஸ்கிரீன் சேவை அளிக்கும் இந்த Surface Duo போனின் சிறப்பு அம்சங்கள், இதர செயல்பாடுகள் குறித்து விவரங்கள் ஏதும் முழுதாகத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், போன் தொழில்நுட்பக் களத்தைப் பொறுத்தவரையில் இன்னும் போட்டியில் உள்ளோம் என்பதை மைக்ரோசாஃப்ட் நிரூபித்துள்ளது.

மேலும் பார்க்க: 2 பேட்டரி, 6 கேமிரா என கிறுகிறுக்க வைக்கும் விலையில் சாம்சங் கேலக்ஸி Fold!

புதிதாக 289 ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு அனுமதி கேட்கும் நிறுவனங்கள்!
First published: October 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்