Home /News /technology /

ஒரு சகாப்தம் முடிவடைந்தது: இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இனி இல்லை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அறிவிப்பு

ஒரு சகாப்தம் முடிவடைந்தது: இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இனி இல்லை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அறிவிப்பு

internet explorer

internet explorer

Internet Explorer இன் பிரவுசர் சேவையை முழுவதுமாக ஜூன் 15, 2022 முதல் நிறுத்தப்போவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

    27 ஆண்டுகளாக இணைய சேவை வழங்கி வந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் ஆதரவை இழந்து வந்தது. கூகுள் மற்றும் பயர்பாக்ஸ் உள்ளிட்ட பிரவுசர்களின் வளர்ச்சிக்குப் பிறகு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படவில்லை. 25 ஆண்டுகளுக்கும் மேலாக பிரவுசர் சேவையில் இருந்த மைக்ரோசாப்ட் நிறுவனம், தற்போது தங்களின் இணைய சேவைக்கான ஆதரவை நிறுத்தப்போவதாக, இனி இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்பாட்டுக்கு இல்லை கூறியுள்ளது. இந்த ஆண்டு ஜூன் 15 (நாளை)  முதல் முழுமையாக இந்த சேவை நிறுத்தப்படுகிறது.

    தற்போது கூகுள் குரோம், மொஸில்லா பயர்பாக்ஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் போன்ற வலுவான போட்டியாளர்கள் நடுவில் எஸ்ப்ளோரர் பிரவுசரால் தாக்கு பிடிக்க முடியவில்லை.கூகுள், எட்ஜ் மற்றும் சஃபாரி போன்ற பிரவுசர்கள் அதிக வேக இணைய சேவையை வழங்குகின்றன. அந்த பிரவுசர்களின் Search Engine -கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் தேடுபொறியை விடவிரைவாக தகவல்களை திரட்டி பயனாளர்களுக்கு கொடுத்து விடுகின்றன. அந்த வேகத்துக்கு Internet Explorer ஈடுகொடுக்க முடியாததால் யூசர்கள் மாற்று பிரவுசர்களை பயன்படுத்தத் தொடங்கினார்கள். கடந்த ஆண்டே வெளியான இந்த அறிக்கையைத் தொடர்ந்து, விண்டோஸ் 10 லாங்டெர்ம் சர்வீஸிங் சேனல் தற்போது வரை இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை கொண்டுள்ளது. ஆனால், அனைத்து பயனர்களுக்குமான வெர்சன்கள் பிரவுசரில் கிடைக்காது. படிப்படியாக பல்வேறு ஆப்சன்கள் குறைக்கப்பட்டு வந்தது. தற்போது முற்றிலுமாக நிறுத்தப்பட உள்ளது.

    கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அறி்விப்பில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் Outlook, OneDrive and Office 365 போன்ற பியூச்சர்கள் 2021 ஆகஸ்ட் மாதம் முதல் செயல்படாது என ஏற்கனவே அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி இருந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதமே மைக்ரோசாப்ட் வெப்-ன் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.



    முதல் வெப் பிரவுசராக அறிமுகமான இன்டர்நெட் எகஸ்ப்ளோரர், உலகம் முழுவதும் கோலோச்சியது. 2003 ஆம் ஆண்டில் 95% இணைய யூசர்களுடன் அதிகபட்ச யூசர்களைப் பெற்ற பிரவுசராக இருந்தது. புதிய பிரவுசர்களின் வருகையால் இதன் சேவை மெல்ல மெல்ல சரிவை சந்தித்து. கடந்த சில ஆண்டுகளாக இறுதியின் விளிம்பில் இருந்த இந்த சேவை தற்போது முற்றிலுமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யூசர்களின் தேவை மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தவறியதால் மைக்ரோசாப்ட்டின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பெரும் சரிவை சந்திக்க காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். உடனடி அப்டேட் மற்றும் டவுன்லோடு வேகம் ஆகியவை சரி செய்யப்பட்டிருக்க வேண்டும் எனவும் டெக் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தாலும், உலகளவில் முன்னணி பிரவுசராக கூகுள் வளர்ந்துள்ளது.

    Also Read : Google chrome, Mozilla பயனர்களுக்கு ஆபத்து... மத்திய அரசு விடுத்த எச்சரிக்கை! 

    2013 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்ட IE 11 தான் இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரின் இறுதி வெர்ஷன் ஆகும். அதன் பிறகு எந்த அப்டேட்டுகளும் செய்யப்படவில்லை. விண்டோஸ் 10 அறிமுகத்துக்குப் பிறகு அதன் சில டெக்னிக்கல் வெர்சன்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு பொருத்தமாக இல்லை. இதுகுறித்து பேசிய மைக்ரோசாப்ட் எட்ஜ் புரோகிராம் மேனேஜர் சியான் லையன்டர்சே (Sean Lyndersay), அடுத்த ஆண்டு முதல் விண்டோஸ் 10 வெர்சன்களில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் செயல்படாது என அறிவித்துள்ளார். மேலும், எதிர்கால விண்டோஸ் 10 இன் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் எதிர்காலம் மைக்ரோசாப்ட் எட்ஜ் கையில் தான் இருக்கிறது என்று தெரிவித்தார்.

    Also Read : Xioami ஸ்மார்ட் ஃபோன்களுக்கு இலவச YouTube Premium சப்ஸ்கிரிப்ஷன் - அசத்தலான் ஆஃபர்

    எவ்வளவு மெதுவாக செயல்பட்டாலும், ஆயிரக்கணக்கில் ஜோக்குகளால் சூழப்பட்டாலும், பல ஆண்டுகள் இணையத்தின் இதயமாக, ஒரு இளம் தலைமுறையின் வளர்ச்சியில் ஒரு பங்காக  இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் செயல்பட்டு வந்தது என்பதை மறுக்க முடியாது!
    Published by:Selvi M
    First published:

    Tags: Internet, Microsoft, Technology

    அடுத்த செய்தி