உலக பணக்காரர் பில் கேட்ஸுக்கு கிடைத்திருக்கும் மேலும் ஒரு கவுரவம்: அமெரிக்காவிலேயே இவர் தான் டாப்

Cascade Investments எனும் பில்கேட்ஸின் நிறுவனம் ஒன்றே இந்த மொத்த நிலங்களையும் நிர்வகித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Cascade Investments எனும் பில்கேட்ஸின் நிறுவனம் ஒன்றே இந்த மொத்த நிலங்களையும் நிர்வகித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Share this:
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும், அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியுமாக இருந்தவர் பில் கேட்ஸ். தொழில்நுட்ப சாம்ராஜ்யத்தை உருவாக்கிய பில்கேட்ஸ் தற்போது, விவசாயத்துறையில் ஓசையில்லாமல் வேறொரு பெருமையையும் பெற்றிருக்கிறார்.

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் தற்போது 4வது இடத்தில் இருக்கும் பில் கேட்ஸ், அமெரிக்காவிலேயே அதிக விவசாய நிலங்களை வைத்திருக்கும் நபராக மாறியிருக்கிறார். அவரிடம் தற்போது 2.42 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இதோடுமட்டுல்லாமல் அவரும் அவருடைய மனைவி மெலிண்டா இருவரிடமும் 2,68,984 ஏக்கர் நிலம் இருப்பதாக Land Report எனும் தளத்தில் வெளியான தரவுகளின் மூலம் தெரியவந்திருக்கிறது. அவரிடம் இருக்கும் நிலத்தில் 1,234 ஏக்கர் நிலம் பொழுதுபோக்கு நிலம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவரின் நிலம் அமெரிக்காவின் 18 மாகாணங்களில் பரந்து விரிந்திருக்கிறது.



லூசியானா மாகாணத்தில் அதிக அளவாக 69,071 ஏக்கர் நிலத்தை பில் கேட்ஸ் வைத்திருக்கிறார். அதே போல அர்கான்ஸாஸ் மாகாணத்தில் 47,927 ஏக்கரும், Nebraska-வில் 20,588 ஏக்கரும் பில் கேட்ஸ் சொந்தமாக்கியுள்ளார்.

உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனராக அறியப்படும் பில் கேட்ஸ், அமெரிக்காவின் மிகப்பெரிய நில அதிபராக இருப்பது சற்று ஆச்சரியமானதாகவே இருக்கும். ஆனால் 2008ம் ஆண்டிலேயே பில் மற்றும் மெலிண்டா தொண்டு நிறுவனம், விவசாயத்தில் அதிக உற்பத்தியை ஏற்படுத்தும் வகையில் ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய பகுதிகளுக்கு 306மில்லியன் டாலர்களை அளித்தது குறிப்பிடத்தக்கது.

Cascade Investments எனும் பில்கேட்ஸின் நிறுவனம் ஒன்றே இந்த மொத்த நிலங்களையும் நிர்வகித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது 2,42,000 ஏக்கர் நிலங்களுடன் அமெரிக்காவில் மிகப்பெரிய நில அதிபராக பில் கேட்ஸ் குடும்பத்தினர் மாறியுள்ளனர். இவர்களுக்கு அடுத்ததாக 1,90,000 ஏக்கர் நிலத்துடன் Offutt குடும்பத்தினர் 2ம் இடத்திலும் உள்ளனர்.

ஃபோர்ப்ஸ் இதழின் உலக கோடீஸ்வரர்கள் பற்றிய தரவுகளின் படி பில் கேட்ஸின் சொத்து மதிப்பு 121 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Arun
First published: