• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • மைக்ரோசாப்ட்டின் புதிய Surface Laptop SE - மாணவர்களுக்கான குறைந்த விலை லேப்டாப்!

மைக்ரோசாப்ட்டின் புதிய Surface Laptop SE - மாணவர்களுக்கான குறைந்த விலை லேப்டாப்!

லேப்டாப்

லேப்டாப்

கூகுள் குரோம் OS உடன் வரும் குரோம்புக் மாடல்களின் விற்பனை தற்போது அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, இந்த புதிய Surface Laptop SE மாடல் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

  • Share this:
மாணவர்களுக்காக, புதிய குறைந்த விலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு மாடல் லேப்டாப்பை சந்தையில் அரிமுகப்படுத்தியுல்லது. இது விண்டோஸ் OS இன் சமீபத்திய பதிப்பான Windows 11 SE இல் இயங்கும் என்றும், விண்டோஸ் அடிப்படையிலான சேவைகளை கல்விக்கான பிரத்யேக சந்தையில் அதிகபடுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது கூகுள் குரோம்புக் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட் ஆகிய சாதனங்களுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய சர்ஃபேஸ் லேப்டாப் SE பற்றி பார்க்கலாம்.

ஏற்கனவே, பள்ளி மாணவர்களுக்கான சாதனங்களில், கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களிடையே போட்டி அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனமும் பள்ளிகளுக்காகவே தனித்துவமாக வடிவமைத்த விண்டோஸ் 11 கொண்ட சர்ஃபேஸ் லேப்டாப் SE என்ற மாடலை அறிமுகப்படுத்துவதாக கடந்த செவ்வாய் அன்று அறிவித்தது. உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் SE என்ற விலை குறைவான மடிக்கணினியை $249க்கு அறிமுகப்படுத்துகிறது. இந்த லேப்டாப், 2022 ஆரம்பத்தில் விற்பனைக்குக் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த சர்ஃபேஸ் லேப்டாப் SE இன் சிறப்பம்சமாகப் பார்க்கப்படுவது, இதன் விண்டோஸ் 11 டெஸ்க்டாப் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தான். இதில் உள்ள விண்டோஸ் 11 OS, மாணவர்களுக்காக, மிகவும் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, கல்வி நிகழ்வில் அடுத்தது என்ன என்ற சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு விர்ச்சுவல் நிகழ்வில் வெளியானது.

கூகுள் குரோம் OS உடன் வரும் குரோம்புக் மாடல்களின் விற்பனை தற்போது அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, இந்த புதிய Surface Laptop SE மாடல் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. கூகுள் குரோம்புக் கிட்டத்தட்ட பள்ளி மாணவர்களுக்காக, வகுப்புகளில் இணைய வழியாக கலந்து கொள்வதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது போல கையாள்வது சுலபமாக உள்ளது. இந்த அடிப்படையில், விண்டோஸ் 11 SE இல் இயங்கும், K-8 கல்வி சந்தைக்காக, மைக்ரோசாப்ட் Surface Laptop SE லேப்டாப்பை உருவாக்கியுள்ளது.

Also read... "ஃபைபர் எக்ஸ்பீரியன்ஸ் 399" பிளானை மீண்டும் அறிமுகம் செய்த BSNL!

11.6 இன்ச் திரையுடன் வரும் இந்த மடிக்கணினியில், கீ போர்டு, டிராக் பேடு, வீடியோ அழைப்புகளுக்கான 720 பிக்சல் முன்புற கேமரா, USB A மற்றும் C போர்ட்டுகள் ஆகிய அம்சங்கள் உள்ளன. இந்த Surface Laptop SE, இன்டல் செலிரான் புராசசரில் இயங்குகிறது. மேலும், 4GB அல்லது 8GB RAM மற்றும் 64GB அல்லது 128GB eMMC ஸ்டோரேஜ் கெப்பாசிட்டியுடன் வருகிறது. இதன் பேட்டரி லைஃப் 16 மணி நேரம் என்றும் மைக்ரோசாப்ட் கூறியுள்ளது. இந்த மடிக்கணினி, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் ஜப்பானில் முதலில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

பல ஆண்டுகளாக, கல்விக்கான சந்தையில் நவீன சாதனங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று முயற்சி செய்து வரும் மைக்ரோசாப்ட் நிறுவனம், தற்போது மிகவும் முக்கியமான நேரத்தில் புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தி இருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. விரைவில், இந்த மாடல் லேப்டாப் மற்ற நாடுகளிலும் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: